RSS

நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு

கடந்த காலங்களில் குடும்பக் கட்டுப்பாட்டை தேச துரோக செயலாக ஒப்பிட்டு விமர்சனங்களுக்கு உள்ளான துருக்கி அதிபர் தற்போது முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு பற்றி யோசிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

via நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்: துருக்கி மக்களுக்கு அதிபர் வேண்டுகோள் — BBCTamil.com | முகப்பு

 

அந்த புல்லாங்குழலுக்கு தெரியாது

13007150_863428407116754_8587714386650348618_n

அந்த புல்லாங்குழலுக்கு
தெரியாது தான்
வெளியிடும்
இசையின் கனம்
உள்வாங்கும் காற்றினை
இசையாக வெளியிடுவதே
அதன் பணி
செவ்வனே செய்துமுடிக்கும் அது
மனதின் கவலைகள்
இதயத்தின் வலிகள்
ஆற்றொண்ணா துயரங்கள்
அனைத்தும் நிறைந்திருக்கும்
அதன்வழி Read the rest of this entry »

 
 

இசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில்….

இசைமுரசு அவர்களின் முதலாமாண்டு நினைவு நாளில் அவரை பற்றிய வரலாற்று குறிப்புகளடங்கிய செ.திவான் எழுதிய நூலை வைகோ வெளியிட கவிக்கோ பெற்று கொண்ட நிகழ்வு

12986957_1167549799931055_8989805910152930929_n

———————-
கலைஞர் அளவுக்கு வைகோவுக்கு நாகூர் ஹனிபாவிடம் நெருக்கம் இல்லை என்பது உண்மைதான். வைகோ ஹனிபா அவர்களின் அனுதாபி. திமுகவில் இருந்த காலத்தில் ஹனிபாவிடம் நெருங்கி பழகியவர். இசைமுரசு மரணித்தபோது வெளியூரிலிருந்த அவர் உடனே ஓடி வந்தவர்.

இந்த நூலை எழுதிய செ.திவான் கலைஞருடம் 1990 வரை அலுவலக உதவியாளராக இருந்தவர்.

இசைமுரசு அவர்களின் புகழை கட்சி வேறுபாடின்றி, சமய வேறுபாடின்றி யார் பாடினாலும் நமக்கு மகிழ்ச்சியே..

12806201_1139195576099811_3254877277526373746_n-அப்துல் கையூம்

 
 

காதல் என்பது

காதல் என்பது எப்படியெல்லாமோ நண்பர்களால் இங்கே விரிவாக்கப்பட்டிருக்கிறது, அதில், குறிப்பாக வயதான தம்பதிகளின் காதலை குறிப்பிட்டு, அவர்களின் காதலில் கூட காமம் இருக்க முடியுமா என்று சிலர் வினா எழுப்பி இருப்பதைப் பார்த்து, நான் ஆச்சரியப்பட்டுத்தான் போனேன். காரணம், உடலுறவும் இன்ன பிற தூண்டுதல்களும் மாத்திரமே காமம் என்று கட்டுப்படுத்தப்பட்ட சமூக நியாத்துக்குள் நாம் அடைக்கப்பட்டிருக்கிறோம். உண்மையில், காமம் என்பது நாம் மனதில் வரைந்து வைத்திருக்கும் அவ்வகை செயல்களில் மாத்திரமன்று, அது வயதையும் உணர்வுகளையும் சார்ந்த ஒன்று. உதாரணமாக, உங்கள் பசிக்கு 10 ஆப்பம் போதும் என்றால், வயதான எனக்கு 3 போதுமானதாக இருக்கிறது. Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 14, 2016 in Uncategorized

 

ஏரியை சுத்தம் செய்பவர்களுக்கு ஸ்பெஷல் பிரியாணி; வித்தியாசமான கலெக்டர்:

12705273_10205655219364013_2134312102057213043_n

பேஸ்புக்கில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் பின் தொடரப்படுபவர்தான், கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் IAS.. தனது மாவட்டத்திலுள்ள பிஷாரிகாவு எனும் ஏரியை சுத்தப்படுத்த வருமாறு அங்குள்ள தன்னார்வலர்களுக்கு பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்தார். மேலும் அப்படி வருபவர்களுக்கு சுவையான ‘ஸ்பெஷல் கோழிக்கோடு பிரியாணி’ காத்திருக்கிறது என்றும் ஆசையை தூண்டினார்.

இந்த அரிய வாய்ப்பை நழுவ விட விரும்பாத அவ்வூர் இளைஞர்கள் பெரும்படையாக திரண்டு, 57 ஆயிரம் சதுர அடி ஏரியை அசால்ட்டாக தூர்வாரி சுத்தப்படுத்தினர். இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும், தான் சொன்னபடியே ஸ்பெஷல் கோழிக்கோடு பிரியாணியை வரவைத்து, அதை அவர்களுடன் சேர்ந்தே சாப்பிட்டார் கலெக்டர் பிரசாந்த். Read the rest of this entry »

 
Leave a comment

Posted by on February 11, 2016 in Uncategorized

 

பகுத்தறிய மறவாதே..!!

வஞ்சகம் தனையேயுண்டு
வருத்தித் தலைக் கொய்யும்
நஞ்சையே நற்பாலென மடியேந்தி
வெண்ணிறத் தோலணிந்த
விஷம நரிகளுண்டு யிங்கே…

பஞ்செனத் துருத்தியப்
பருத்த மடியது கண்டு
பசுவெனவே யெண்ணி நீயும்
பாலறுந்தத் துணியாதே மறந்தும்
பகுத்தறிய மறவாதே..!! Read the rest of this entry »

 
 

குவைத்தில் நடைப்பெற்ற சீரத்துன் நபி சிறப்பு மாநாட்டில் …

குவைத்தில் கடந்த வாரம் மிஸ்க் அமைப்பினர் ஏற்பாட்டில் நடைப்பெற்ற சீரத்துன் நபி சிறப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கொண்ட என் அன்பிற்கினிய அருமை அண்ணன் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களின் தூது வந்த வீரர் எனும் நூலை கண்ணியத்துக்குரிய ஹஜ்ரத் கான் பாகவி அவர்கள் வெளியிட்டார்கள்.
இந்த நூலை அறிமுகம் செய்து பேசிய அண்ணனின் செய்திகள் வியப்புக்குரியது.
இந்தப் புத்தகம் தாமஸ் கார்லைல் எனும் ஆங்கிலேய தத்துவமேதை
பெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றி ஆற்றிய உரைகளின் தொகுப்பு.
19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் முஸ்லிம்களே அங்கு இல்லை எனும் நிலைதான் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் இஸ்லாத்தைப் பற்றியும் பெருமானரைப் பற்றியும்
மிகவும் தவறானக் கருத்துக்களைப் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். Read the rest of this entry »