RSS

ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் !

26 Dec

by: வழக்கறிஞர் சயீத் B.A.B.L
என் இனிய சகோதரர்கள் இணையதளம் ஆரம்பிப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
எட்டு திசைகளிலும் வாழ்கின்ற மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.
மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.
காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உடல் நலக்கேடு தரும் உணவைத் தவிர்க்க வேண்டும். சமுதாயம் செழுமையுற நாடு நலமுற உழைக்க வேண்டும். மார்க்க அறிஞர்களை மதித்து மனித நேயம் பேண வேண்டும். சிக்கனம், சுறுசுறுப்பு செயல்திறன் வளர்க்க வேண்டும். வேதனைகள், சோதனைகளை வென்று சாதனைப் புரிய வேண்டும். உழைப்பதன் மூலம் பசியை விரட்ட வேண்டும். நபிவழிதான் நம் வழி என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மீகம் இல்லா கல்வியும், உடல் திறனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.
கொலைகளும், தற்கொலைகளும், விபத்துகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட இக்கால கட்டத்தில் இறையச்சத்தோடு தற்காப்புடன், பாதுகாப்புடன் இருக்க பயிற்சிபெற வேண்டும்.
சண்டைகள் ஓய்ந்து எல்லோரும் சகோதரராக வாழ வேண்டும். பண்டங்கள் விலை மலிந்து பயிர் செழிக்க பாடுபட வேண்டும்.  மக்கள் மருத்துவமனைக்கோ, மேற்கல்வி பெறுவதற்கோ அனைத்து விளையாட்டுகளுக்கோ உள்ளூரிலேயே அவ்வசதிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
சைவ, அசைவ உணவு விடுதிகள், பெண்களுக்கான பல்பொருள் அங்காடிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளுடைய, பெண்கள் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் பூங்காக்கள், நவீன வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும்.

இளைஞர்களின் தகுதி, திறமை, கல்விக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெற திட்டங்கள் அமைத்து செயல்பட வேண்டும். மனத்தூய்மையோடு, பொதுநல நோக்கோடு செயல்பட்டால் நம் கனவுகள் நிறைவேறும்.

Advertisements
 

Tags: , , , , , , ,

7 responses to “ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் !

 1. VANJOOR

  December 26, 2010 at 1:03 pm

  //எட்டு திசைகளிலும் வாழ்கின்ற மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.//

  த‌ன்ன‌ல‌மற்ற‌ பொது நோக்குடனான‌ இந்த‌ சீரிய முய‌ற்ச்சி வள்ள‌வன‌ருளால் வ‌ள‌ர்ந்து த‌ழைத்தோங்கட்டும்.

  வாஞ்சையுட‌ன் வாஞ்ஜூர்.

   
 2. rajakamal

  December 26, 2010 at 1:36 pm

  we will pray the almighty for your best services

   
 3. கவிஞர் இரா .இரவி

  December 26, 2010 at 4:14 pm

  வாழ்த்துக்கள்
  இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
  நன்றி
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி

  http://www.eraeravi.com
  http://www.kavimalar.com
  eraeravi.wordpress.com
  eraeravi.blogspot.com

  இறந்த பின்னும்
  இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

   
 4. ameer

  December 26, 2010 at 8:45 pm

  THANKS FOR POSTING MY DAD ARTICLE WHICH WILL HELP FOR OTHERS. BEST WISHES FOR POSTING USEFUL AND BEST ARTICLES.

   
 5. முதுவை ஹிதாயத்

  December 26, 2010 at 10:02 pm

  அஸ்ஸலாமு அலைக்கும்

  முதுகுளத்தூர்.காம் இணையத்தளத்திற்கும் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியினை நினைவு கூர்வதாக உள்ளது.

  ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.

  மர்ஹும் நீடூர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் சாஹிப் அவர்களது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  முதுவை ஹிதாயத்

   
 6. அப்துல் பாஸித்

  December 27, 2010 at 6:02 pm

  இந்த களம் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறேன்.

   
 7. himanasyed

  December 29, 2010 at 12:07 pm

  நெஞ்சில் நிழலாடிய நினைவு!
  நினைவில் உறவாடிய நிறைவு!

  தம்பி டாக்டர் ஹிமானா சையத்

   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: