RSS

Monthly Archives: January 2011

சுவையான ஓட்ஸ் கேக் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – ஒரு கப்,
நெய்-  நூறு கிராம்,
சர்க்கரை –  3/4 கப்,
முந்திரி – உடைத்தது 20 எண்ணிக்கை,
ஏலக்காய் பொடி – வாசனைக்குத் தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடு வந்தவுடன் ஓட்ஸைப் போட்டு வறுத்து எடுத்து, நன்றாக பொடி செய்து கொள்ளவும்.  அதை வாணலியில் போட்டு சிறிது சிறிதாக நெய் ஊற்றி கிளறி உருண்டையாக எடுத்து வைத்து கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சர்க்கரையைப் போட்டு பாகு தயாரிக்கவும். சர்க்கரைப்பாகு கம்பி பதத்தில்  வந்தவுடன் அதனுடன் ஓட்ஸ் உருண்டையை சேர்த்து கட்டி பிடிக்காமல் கிளறவும்.

கிளறிய பதம் சட்டியில் ஒட்டாமல் வரும்போது அதனுடன் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்த்து கிளறி நெய் தடவிய தட்டில் ஊற்றி சமப்படுத்தவும். ஆறியவுடன் விரும்பிய வடிவத்தில் கட் பண்ணவும்.

சுவையான சத்தான ஓட்ஸ் கேக் தயார்.

செய்து ருசித்துப் பார்த்து உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.

Source : http://www.inneram.com/how-to-prepare-oats-cake

 

Tags:

எகிப்தின் மக்கள் கிளர்ச்சி : 5000 கைதிகள் சிறையை உடைத்து ஓட்டம்(வீடியோ இணைப்பு)

கெய்ரோ : துனிஷியாவில் வெடித்த புரட்சியை  அடுத்து 30 ஆண்டு காலமாய் எகிப்தை இரும்பு கரம் கொண்டு ஆண்டு வரும் ஹோஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து இறங்கி வர வலியுறுத்தி பொதுமக்கள் கடும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இச்சூழலில் கெய்ரோவிற்கு 130 கீ.மீ தொலைவில் தென் மேற்காய் அமைந்துள்ள பையூம் பிராந்தியத்தில் 5000 சிறைகைதிகள் சிறையை உடைத்து வெளியேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிறையை உடைத்து வெளியேறிய இச்சம்பவத்தில்  இராணுவ உயர்மட்ட ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டும் இன்னொரு இராணுவ உயர் அதிகாரி கடத்தப்பட்டும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சனிக்கிழமை நிவ்யோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலையகத்துக்கு முன்பாக எகிப்தியர்கள் தம் நாட்டில் நடைபெரும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான சுலோகங்களுடன் அணிதிரண்டனர். சனிக்கிழமை இரவு கெய்ரோவில் அமைந்துள்ள ஆளும் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது முறையாக தீ வைத்துள்ளனர். Read the rest of this entry »

 

Tags: ,

மேலே செல்லச் செல்ல

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா.

இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது. Read the rest of this entry »

 

Tags: , ,

இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு

நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி

தனியார்வ நோக்கில் தணியாத தாகம்

இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்

நனிசிறந்தே வாழ்வர் நவில்.

கடின உழைப்பும் கடமை யுணர்வும்

படியும் குணமும் பலமான போட்டியுறும்

சந்தையில் இன்று சிறப்பான எங்கள்

இந்தியர் என்றே இயம்பு.

காடும் மலையும் கடலுமே தாண்டி

வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில்

ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர்

பாடு படுவதைப் பாடு!

சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே

இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை

அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்

தன்னிறை என்பதுஎந் நாள்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

Source : http://kalaamkathir.blogspot.com/2011/01/blog-post_02.html

 

Tags:

ஈரான் நாட்டு ஜனாதிபதியிடம் அறிய வேண்டியது !

தி  பாக்ஸ்  நியூ  டிவியிடம்  (US)   இரானியன்  ப்ரெசிடென்ட்  அஹ்மெடி  நிஜாத் அளித்த பதில் :

“காலையில் உங்கள் முகத்தினை முக கண்ணாடியில் பார்க்கும் பொழுது என்ன நினைப்பீர்கள் ”
“நீ சாதாரண வேலையால் இருப்பினும் ,இரானிய  நாட்டிற்கு சேவை செய்யவேண்டிய பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதனை நினவு கொள் என்று எண்ணுவேன்”

பதவிக்கு வந்த உடன் ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ள உயர் ரக கார்பெட்டுகள் அனைத்தினையும் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிட்டு அதற்கு பதில் சாதாரண விலை குறைவான விரிப்புகளை மாற்றிவிட்டார். பிரமாண்டமான அழகிய வரவேற்பு அறைகளை  சாதாரணவைகளாக  மாற்றி மர  நாற்காலிகளை போடச் செய்தார்.

அவரது வருமானம் என்ன என்பதனை தெரிவித்தார் .
பஐகாட்  504 கார் , மாடல்  1977, தனது தந்தையிடமிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு முன் டெஹ்ரானில்  ஏழைகள் வசிக்கும்  பகுதியில் கிடைத்த சாதாரண வீடு . அந்த வீட்டில்தான் தான் தற்பொழுதும் வசித்து வருகின்றார் பண இருப்பு கிடையாது ஆனால் யூனிவர்சிட்டியில் இருகும்பொழுது US$ 250 கிடைத்த சம்பளம் மட்டும் .
தற்பொழுதும் அதே எழைய வாழ்கைதான் . தன மாணவி தரும் சண்ட்விச் அல்லது பிரட் வெண்ணை ,ஒலிவ் ஆயில்   உண்வுதனை உடன் எடுத்து வந்து மகிழ்வாக சாப்பிடுகின்றார்.  தரையில் ஒரு விரிப்பு விரித்து உறங்குகின்றார்
யூனிவர்சிட்டிர்சிட்டியில் இருகும்பொழுது US$ 250 கிடைத்த சம்பளம்
எளிய ஆடம்பர மில்லாத வாழ்வுடன் மன தைரியத்துடன் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் .அவர் ஆட்சி ஒரு சவாலான ஆட்சியாக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அஞ்சாததாக இருந்து வருகின்றது

 

Tags: , , ,

நீடூரார், நெடும்ஊர் போனார்

திருவினில் , உயரந்  தன்னில்
தென்னையை  நிகர்ந்த போதும்
உருவினில்  வாழை யைப்போல்
உலவிய நீடூர்  செய்யத்
அருவியென்று  உள்ளக் கண்ணீர்
அனைவரும் சிந்து மாறு
பொருந்தியே  இறந்து போனார் !
புலம்புதே  இலக்கி  யம்தான்  !
சட்டமும்  பயின்று ,நன்நூல்
சகலமும் பயின்று , வாழ்க்கைத்
திட்டமும் தெளிவும்  பெற்றே
திகழந்தவர்  நீடூர்  செய்யத்!
பட்டமும் அறுந்தார்  போலப்
பட்டன இறந்தார்  அந்தோ  !
எட்டவும் முடியு   மாமோ
இவர் போல யாரும் ?
` இ.ப .`
(தமிழ்நாடு வக்பு வாரிய மாத இதழ் )
இஸ்மி “,டிசம்பர், 2007)
நன்றி : “நெஞ்சில் நிறைந்த நீடூர் சயீத்”
அ. மா . சாமி

 

Tags: ,

வருது, வருது மதிமயக்கும் தேர்தல் வருது!

முனைவர் A.P. முஹம்மது அலீ IPS (R) பக்கம்
1951ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பின்பு மக்களவைக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்கள் கதவுகளைத் தேர்தல் வந்து தட்டும். சில அசாத்தியமான சமயங்களில் ஐந்தாண்டுகளுக்கு முன்பே தன் தலையினை வெளிக்காட்டும். “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்ற பழமொழிக்கிணங்க, இந்தியக் குடிமக்கள் அதனை அறிந்து கொள்ளும் விதமாகப் பொதுச்சுவர்களிலும் தனியார் சுவர்களிலும் போட்டி போட்டுக் கொண்டு வண்ண வண்ண எழுத்துகளில் தங்கள் கட்சி சின்னங்களை பொறித்து விளம்பரம் செய்கின்றன. துண்டு நோட்டீஸிலிருந்து மெகா சுவரொட்டிவரை அச்சடித்து விநியோகித்தும் சுவர்களிலும் ஒட்டியும் தட்டிகளில் ஒட்டியும் செய்யப்படும் எளிமை(!)யான விளம்பரங்கள் ரோடு ஓரங்களில் வைக்கப்படும்.

அவை போதாதென்று ஃபிளக்ஸ் பேனர்கள், டிஜிட்டில் போர்டுகள் அலங்கரிக்கும். மின்சாரத் திருட்டுகள் நடத்தி தலைவர்கள் படங்கள், கூட்ட நிகழ்ச்சித் தகவல்கள் அலங்கார விளக்குகள் மூலம் கண்ணைப் பறிக்கும்.

ஊர்வலம், பொதுக்கூட்டம், சைக்கிள் பேரணி, தெருமுனைக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கும். கூடவே பாட்டுக் கச்சேரி, நடனம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற ஆட்டம் பாட்டம் பாடி மானை ஓடவிட்டும் மயிலைக் கிறங்க வைத்தும் பல மனமகிழ் நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமிராது. பணத்தினை தண்ணீராக வாரி இறைக்கும் ஒரு நடவடிக்கைதான் தேர்தல் என்று வாக்காளப் பொதுஜனம் சாதாரணமாக நினைக்கும் அளவுக்குத் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்படும்.

இத்தனை ஆட்டம், பாட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் திரு. டி.என். சேஷன் தேர்தல் கமிஷனராக இருந்தவரை தன் வாலை சுருட்டிக் கொண்டு மூலையில் முடங்கிக் கிடந்தது. ஆனால் இன்று அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுத் தேர்தல் என்பது ஒரு திருவிழா நிகழ்ச்சிபோல நடக்கின்றது. பேரளவிற்குக் கட்சி நடத்துபவர்களும், சமூக அமைப்பினரும் முக்கிய அரசியல் கட்சிகளிடம் பேரம் நடத்தி நாலு காசு பண்ணும் பொன்னான நேரம்தான் தேர்தல் நேரம். Read the rest of this entry »

 

Tags: , , ,