RSS

அதிரைக்கு கிடைத்திருக்கும் பெருமை..

03 Jan

2010 ஆம் ஆண்டு வர்த்தக துறையில் சிறந்து விளங்கிய வர்த்தக நிறுவனங்களை கவுரவித்து, பாராட்டி விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா தமிழ்நாடு சினிமா கலை மன்றம் சார்பில் சென்னையில் 01.01.2011 நடைப்பெற்றது. இவ்விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு வர்த்தக நிறுவனர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியில் “வாட்டர் பியூரிவிகேசன் விற்பனை” மற்றும் சர்வீஸ் துறையில் சிறந்து விளங்கி சேவை செய்தமைக்காக “AMAZON WATER PURIFIER” நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது, 2010 ஆம் ஆண்டிற்கான “BEST WATER PURIFIER BRAND” என்ற விருதும்,  தமிழகத்தின் கிராமப்புறங்களில் சுகாதார விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்திவருவதற்காக “சேவை செம்மல்” என்ற விருதும் நம் அதிரைப்பட்டினத்தை சேர்ந்த M. கஜ்ஜாலி முகம்மது MBA அவர்கள் தட்டி சென்றார். இவ்விழாவில் “AMAZON WATER PURIFIER” நிறுவனத்தின் நிர்வாகி M. கஜ்ஜாலி முகம்மது மற்றும் அவரது சகோதரர் M.அபூபக்கர் இருவர்களும் கலந்துக்கொண்டு இவ்விருதினை பெற்றுக்கொண்டனர்.
தஞ்சாவூர், அதிரைப்பட்டினம், கூத்தாநல்லூர் மற்றும் சென்னையிலும் இந்நிறுவனத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இது ஒரு அதிரைப்பட்டினத்தின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது
அதிரையில் இளைய தலைமுறைக்களுக்கு முதுகலைப் பட்டதாரியான சகோதரர் M. கஜ்ஜாலி அவர்கள் ஓர் முன் உதாரணமாக உள்ளார் என்பதை அழுத்தமாக சொல்லிக்கொள்ளவிரும்புகிறோம். அவரின் தன்னம்மிக்கை, ஊர்சாகம் நம் எல்லோருக்கும் வரவேண்டும்.  இன்றைக்கு “BEST YOUNGEST BUSINESSMAN OF ADIRAI”  இவராகத்தான் இருக்கவேண்டும்.
வர்த்தகதுறையில் இந்த சாதனை விருதை பெற்ற “இளம் வர்த்தக நிறுவனர்” அதிரையை சேர்ந்த அன்பு சகோதரர் கஜ்ஜாலி அவர்களை வாழ்த்துகிறோம். தங்களின் வியாபாரம் மற்றும் தங்களின் சேவை மேன்மேலும் வளர துஆ செய்கிறோம்.
— அதிரைநிருபர் குழு
புகைப்படம் நன்றி: adiraixpress
Advertisements
 
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: