RSS

முருங்கை மரம் சில தகவல்கள்

04 Jan

கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது.  பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே.  மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.

இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை.  இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள்.  இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர்.  முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.  வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர்.  அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும்.  எளிதில் உடையும் தன்மை கொண்டது.  இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

இது இந்தியா முழுமைக்கும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.

முருங்கையின் அனைத்து பாகங்களுமே அதிக மருத்துவக் குணம் கொண்டது.

முருங்கை இலை

முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.

முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும்.  இரத்தம் சுத்தமடையும்.  இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.  மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

வயிற்றுப்புண்ணை ஆற்றும்.  அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.

இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும்.  நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.

உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும்.  பித்தத்தைக் குறைக்கும்.

இளநரையைப் போக்கும்.  சருமத்தைப் பளபளக்கச் செய்யும்.

பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.  தாய்ப்பாலை ஊறவைக்கும்.  வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.

முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும்.

முருங்கைப் பூ

நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.   முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.  அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.

முருங்கைப் பிஞ்சு

முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.  இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.

முருங்கைக் காய்

அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது.  உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது.  அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்தான்“ முருங்கைக் காய்.

மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும்.  சளியைப் போக்கும்.

விதை

முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.  விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும்.  உடல் சூடு தணியும்.

இலைக்காம்பு

சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.

முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.  தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.

முருங்கைப் பட்டை

முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.  சிறுநீரைத் தெளிய வைக்கும்.

முருங்கை வேர்

வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்,  இரைப்பு, முதுகுவலி நீங்கும்.

முருங்கை சில குறிப்புகள்   

நல்ல பச்சையாக உள்ள முருங்கைக்காயை எடுத்துக் கொண்டு அதனை சாறாக்கி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.

சிலருக்கு கழுத்து வலி ஒரு பிரச்சனையாக இருந்து வரும். இவர்கள் தினந்தோறும், முருங்கை கீரையை உணவுடன் சேர்த்துக் கொண்டால் நாளடைவில் கழுத்து வலி குறையும்.

வெளிநாடுகளுக்கு செல்லும் பெரியகுளம் முருங்கை விதைகள்
General India news in detail

பெரியகுளம்: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி முருங்கை விதைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் கண்டுபிடிக்கப்பட்ட முருங்கை ரகம் என்பதால் இதற்கு பி.கே.எம்.1 மற்றும் பி.கே.எம்.2 என பெயரிட்டுள்ளனர்.

பி.கே.எம். 1 முருங்கை காய்கள் ஒவ்வொன்றும் 75 செ.மீ., நீளமுடையது, பி.கே.எம் 2 முருங்கை காய்கள் 120 செ.மீ., நீளமுடையது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து முருங்கை விதைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மேலும் தான்சானியா, கென்யா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கும் முருங்கை விதைகள் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியிலிருந்து அனுப்பப்படுகிறது. இவ்வகையான முருங்கை ரகங்கள் எல்லா வகையான மண்ணிலும் வளரும்.

விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். ஆறு மாதத் தில் காய்களை அறுவடை செய்யலாம். ஒரு ஆண் டில் ஒரு மரத்திலிருந்து சராசரியாக 200 காய்கள் கிடைக்கும். தோட்டக்கலைக் கல்லூரியில், வல்லுனர் ரக முருங்கை விதை ஒரு கிலோ 2 ஆயிரத்திற்கும், உண்மை நிலை என்ற ரக முருங்கை விதை ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில்
முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்ப்புதம் தான். இது கடவுளின் கொடை .

இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் ,இல்லை ,இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை ..

இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய்எடுக்கலாம்
மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் ,இன்னும் என்னவோ உபயோகம் .

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .

பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது

காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது

வாழை பழததை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது

தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது

இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
இறைவனின் கொடை என கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது இது 200 நாடுகளுக்கு மேல் உலகில் விளைகிறது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை. இந்தியாவில் இமயமலையில் தொடங்கி குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கை முக்கியமானது .

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் . இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.

தகவல் தொகுப்பு:குலசை சுல்தான்

Source :http://muthupet.org/?p=8384

Advertisements
 
 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: