RSS

ஆங்கிலப் புத்தாண்டு ஏன்? ஆங்கிலேயனா நாம் ?

05 Jan

பலரும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன்? ஆங்கிலேயனா நாம் என்று வினவுகின்றனர். அவர்களுக்காக:

தமிழை ஏத்திப் புகழவேண்டும் என்பதற்காக பிறமொழிகளையும், வழக்குகளையும் தள்ள வேண்டும் என்பதல்லவே! தமிழ் எண்களை பரப்ப முயலுகையில், இப்போது இருக்கும் அரபி எண்ணியல் முறையை ஒதுக்க வேண்டும் என்பதில்லையே! அது போல தமிழ் புத்தாண்டை வரவேற்று போற்றும் பணி செய்கையில், இன்றைக்கு அரசு, நடைமுறை, வாழ்வியல் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்திருக்கும் கிரிகோரியன் நாள்காட்டியை எதற்காக ஒதுக்க வேண்டும்? இணைந்து இயைந்து நின்றால்தான் தமிழ் மேலோங்க இயலுமேயன்றி, விலகி நிற்பதால் அன்று. தமிழ்மொழி அறியாத நண்பர்களையும், வெளிநாட்டவரையும் ஆங்கிலத்தில் வாழ்த்துவோம்; அதுவே முறையும் கூட. ஆனால் இரு தமிழர்கள் ஹேப்பி நியூ இயர் என்று வரவேற்பதை விலக்கி, இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என புத்தாண்டை வரவேற்கலாம் தானே!

தமிழின் கூறுகளை இன்றைய இளையோர் மேம்படுத்த பாடுபடும் போது தானாக் தமிழுக்கான உரிய முதலிடம் தரப்பட்டு, மற்றவைகள் வழிவிட்டு நிற்கும். அன்று லோக சபை; பின்னர் பாராளுமன்றம்; இன்று நாடாளுமன்றம். அன்று பத்திரிக்கை; பின்னர் தினசரி; இன்று நாளிதழ். அன்று அக்ராசனர்; பின்னர் சபாநாயகர்; இன்று அவைத்தலைவர். அன்று டீ; பின்னர் சாயா; இன்று தேனீர். இன்றும் பிஸ்கட்; ஆப்பிள்! ஒருவேளை மக்கள் ஏற்றுக் கொண்டால், மாச்சில்லு; அரத்தி. பலனை எதிர்பாராமல் செய்வன செய்து கொண்டே இருப்பது இன்றைய தமிழ் இளையோர் கடமை.

by இராஜ. தியாகராஜன்

Advertisements
 
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: