RSS

நீடூர் – நெய்வாசல்

16 Jan
நீடூர் – நெய்வாசல்

நீடூர்

முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.

இந்நீடூர் இராஜாதி ராஜவள  நாட்டைச் சேர்ந்ததாகும்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது

நீடூர் தொடர்வண்டி நிலையம்

.

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா  புதிய  ள்ளிவாசல்

ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா – பட்டமளிப்பு விழா

 ஜின்னா தெரு ள்ளிவாசல்
ஜின்னா தெரு ள்ளிவாசல் மஸ்ஜித் தக்வா புதுப்பொலிவுடன்

இந்த லிங்கை கிளிக்  செய்யுகள <http://www.google.com/maps?ll=11.127508,79.642969&spn=0.001274,0.001725&t=h&z=19&lci=com.panoramio.all,org.wikipedia.en>

நீடூர் பள்ளிவாசல்

ரைஸ் மில் தெரு பள்ளிவாசல்

Please click here நீடூர்-நெய்வாசல் தெருக்கள் & முக்கிய பகுதிகள்

நீடூர் இணையம்அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்றைய நவீன உலகில் இணையம் என்பது நம் வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது. மின்னஞ்சல் வைத்திருப்பது எப்படி சாதாரணமாக ஆகிவிட்டதோ அது போல் வலைப்பூ(blog) வைத்திருப்பதும், இணையதளம்(website) வைத்திருப்பதும் சாதரணமாக ஆகிவிட்டது. நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்கு இவை சரியானதொரு கருவியாகும். கீழே கொடுக்கப்பட்டவை நமதூர் சகோதரர்களின் வலைப்பூக்கள்/வலைத்தளங்களின் பட்டியலாகும். பட்டியலில் இல்லாத நீடூர் சகோதரர்களின் வலைப்பூக்கள்/வலைத்தளங்கள் தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்தவும். இறைவன் நாடினால் இணைத்துக் கொள்கிறேன்.

S.E.A. முஹம்மது அலி ஜின்னாஹ்1.

http://seasonsnidur.blogspot.com/

முஹம்மது அலி

1. http://nidur.info

A.M.B. ஃபைஜூர் ஹாதி

1. http://nnassociation.blogspot.com

S.A. ம ன்சூர் லி.M.A.,B.Ed.,
1கவுன்சிலர்மன்சூர்.காம்.

http://counselormansoor.com/
A. நிஜாமுதீன்

1. http://nizampakkam.blogspot.com/

நீடூர் ஆன்லைன்

1. http://niduronline.com/

அபூ நதீம்

1. http://niduronline.blogspot.com/

N.H. அப்துல் பாஸித்

1. http://valikaatti.blogspot.com
2. http://thesubmission.wordpress.com

நீர்மை கொண்ட நீடுர் பதிவர் – சந்திப்பு

நமதூர் S.E.A முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களை பற்றி கிளியனூர் இஸ்மத் அவர்கள் http://kismath.blogspot.com வலைப்பூவில் பதிவிட்டது.

முஹம்மது அலி ஜின்னாஹ்

விடுமுறையை விழுங்கிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியாச்சு…முப்பது தினங்களில் கிடைத்த அனுபவங்கள் நிறையவே இருக்கு. தென்மாநில சுற்றுலாவைப்பற்றி தொடர்எழுதவேண்டும் மனம்தொட்டதை மனதில் பட்டதை எழுதவேண்டும்.

தீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா,

நீடூர்- கடுவங்குடி

-நாள் 18.07.2010

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை”.

நூல்: திர்மிதீ 4977, பைஹகீ

குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
கலைஞர் உரை:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்

மேலும் படிக்க… தீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு–நீடூர்- கடுவங்க…

ஜாமியா மஸ்ஜித்

அல்லாஹ்வின் அருளால், நீடூர் நெய்வாசல் புதிய ஜாமியா மஸ்ஜித் திறப்புவிழா, ஊர் முதவல்லி அல்ஹாஜ் எஸ்.கலீல் ரஹ்மான் அவர்கள் தலைமையில், ஜமாஅத்தார்கள் முன்னிலையில், பெங்கéர் ஷபீலுர்ரஷாத் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி முஃப்தி, ஷைகுல் ஹதீஸ், முஹம்மது அஷ்ரஃப் அலீ ஹஜ்ரத் அவர்களால் ஜூலை 25, 2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)

by: வழக்கறிஞர் சயீத் B.A.B.L

என் இனிய வெளிநாடுகளில் வாழ் நீடூர்-நெய்வாசல் சகோதரர்கள் இணையதளம் ஆரம்பித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
எட்டு திசைகளிலும் வாழ்கின்ற எங்களூர் மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.
மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.
காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உடல் நலக்கேடு தரும் உணவைத் தவிர்க்க வேண்டும். சமுதாயம் செழுமையுற நாடு நலமுற உழைக்க வேண்டும். மார்க்க அறிஞர்களை மதித்து மனித நேயம் பேண வேண்டும். சிக்கனம், சுறுசுறுப்பு செயல்திறன் வளர்க்க வேண்டும். வேதனைகள், சோதனைகளை வென்று சாதனைப் புரிய வேண்டும். உழைப்பதன் மூலம் பசியை விரட்ட வேண்டும். நபிவழிதான் நம் வழி என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மீகம் இல்லா கல்வியும், உடல் திறனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.
கொலைகளும், தற்கொலைகளும், விபத்துகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட இக்கால கட்டத்தில் இறையச்சத்தோடு தற்காப்புடன், பாதுகாப்புடன் இருக்க பயிற்சிபெற வேண்டும்.
சண்டைகள் ஓய்ந்து எல்லோரும் சகோதரராக வாழ வேண்டும். பண்டங்கள் விலை மலிந்து பயிர் செழிக்க பாடுபட வேண்டும். நமதூர் மக்கள் மருத்துவமனைக்கோ, மேற்கல்வி பெறுவதற்கோ அனைத்து விளையாட்டுகளுக்கோ உள்ளூரிலேயே அவ்வசதிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
சைவ, அசைவ உணவு விடுதிகள், பெண்களுக்கான பல்பொருள் அங்காடிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளுடைய, பெண்கள் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் பூங்காக்கள், நவீன வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும்.
இளைஞர்களின் தகுதி, திறமை, கல்விக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெற திட்டங்கள் அமைத்து செயல்பட வேண்டும். மனத்தூய்மையோடு, பொதுநல நோக்கோடு செயல்பட்டால் நம் கனவுகள் நிறைவேறும்.
நன்றி  : http://niduronline.com/?p=24

ஊருக்குப் பெருமை

மணிக்கூண்டு
மயிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்று  அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது.  இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது.  அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.

அது என்ன டுனீசிய வெற்றி? ஆப்துல் மஜீது அவர்களிடம் கேட்டேன். “உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது.  போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார் என்று அவர் தெரிவித்;தார். (வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).

(ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் தனது மூத்த சகோதரர் ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹ்மானுடன்) ரெயில் நிலையம்
நீடூர் மக்கள் ரெயில் ஏற 3 கி.மீ. தொலைவிலுள்ள மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்குப் போக Nவுண்டியிருந்தது இறங்குகிறவர்களும் அங்கு இறங்கித்தான் நீடூருக்கு வரவேண்டும்.
நீடூர் மக்களின் வசதிக்காக நீடூரில் ஒரு ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்துல் காதர் அரசுக்கு மனு அனுப்பினார்.  நீடூரில் ரெயில் நிலையம் கட்ட ரெயில்வேயிடம் நிலமில்லை என்று பதில் வந்தது.  உடனே, “எனது நிலத்தைத் தருகிறேன்” என்று அப்துல் காதர் அரசுக்கு எழுதினார்.  அரசு அதை ஏற்றுக் கொண்டது.
ரெயில் பாதையை ஒட்டியிருந்த தனது நிலத்தை அப்துல் காதர் அரசுக்கு இனமாகக் கொடுத்தார்.  அந்த இடத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டது. அங்கு ரெயில்கள் நின்று சென்றன. நீடூரிலேயே ரெயில் ஏற, இறங்க மக்களுக்கு வசதி கிடைத்தது.

வீடு கட்ட நிலம்


நீடூர் பெயருக்கு ஏற்ப நீண்டு விரிந்து கொண்டே போயிற்று.  புதிய வீடுகள் கட்ட நிலமில்லை.  அப்துல் காதர் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீட்டு மனைகள் போட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்தார்.

நீடூரை அடுத்த திருவாளப்புதூரில் வீடு இல்லாமல் மரத்தடிகளில் பல குடும்பத்தினர் வசித்தார்கள்.  அப்துல் காதர் மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) மூலமாக அவர்களுக்கு 24 வீடுகள் கட்டிக்கொடுத்தார்.  அப்போது அவர் மாவட்டக்கழக உறுப்பினராக இருந்தார்.
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினராக இருமுறை அப்துல் காதர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இது காட்டுகிறது.

பள்ளிவாசல்
கொள்ளிடத்தை அடுத்து துளசேந்திரபுரத்தில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள்.  அவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி அப்துல் காதரிடம் முறையிட்டார்கள்.  அவர் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததுடன், அவர்கள் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் கட்டிக் கொடுத்தார்.  அவர்களின் பிள்ளைகள்  படிக்க ஒரு ‘மதரசா’வும் (அரபிப் பள்ளிக்கூடம்) நிறுவினார்.
மயிலாடுதுறைக் கடை வீதியில் ஏராளமான முஸ்லிம்கள் கடை வைத்திருந்தார்கள்.  அவர்கள் தொழுவதற்கு அருகில் ஒரு பள்ளிவாசல் இல்லை.  அப்துல் காதர் கடை வீதியை அடுத்து ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தார்.
(ஒரு கொசுறு செய்தி : இந்தப் பள்ளி வாசலின் வாசல் குறுகியதாக இருந்தது.  இப்போது கூட்டமோ அதிகமாகி விட்டது.  தொழுது விட்டுக் கூட்டமாக வெளியில் வர சிரமப்பட்டார்கள்.  முனைவர் அ. அய்ய+ப் சமீபத்தில் வாசலை அகலப்படுத்திக் கட்டிக் கொடுத்தார்.)
அரபிக் கல்லூரி
நீடூரில் உள்ள அரபிப் பள்ளிக் கூடத்தின் நிர்வாகத் தலைவராகவும் அப்துல் காதர் இருந்தார்.  அப்போது 5 அறைகள் புதிதாகக் கட்டிக் கொடுத்து, அதைக் கல்லூரியகாவும் ஆக்கினார்.  1948இல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவையும் சிறப்பாக நடத்தினார்.  1953இல் நடத்த பட்டமளிப்பு விழாவுக்கு அவர் தலைமை தாங்கவும் செய்தார்.
நீடூரில் பெண்களுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றையும், மாணவர்களுக்கு உயர் தொடக்கப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
நீடூரில் இஸ்லாமிய நூல் நிலையம் (அஞ்சுமன்) ஒன்றையும் அமைத்தார்.
அது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
“நீங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள்” என்று திருக்குரான் சொல்லுகிறது.  குரான் வழியில் வாழ்ந்த அப்துல் காதர் தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஊர்ப்பணிகள் செய்தார்.  அதன் காரணமாக வாழும் போதே வரலாற்றில் இடம் பெற்றார்.  ஏம்.ஆர்.எம். அப்துல் ரகீமின் அரிய படைப்பான “இஸ்லாமியக் கலைக்களஞ்சிய”த்தில் அப்துல் காதரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவரது வாழ்வும் பணியும் சொல்லப்பட்டுள்ளன.

மேலும் படிக்க  ஊருக்குப் பெருமை

நம்ம ஊரு செய்தி

நம்ம ஊரு செய்தி பத்திரிக்கை நடத்துபவர்

நீடூர்  அய்யூப் அவர்கள்

http://seasonsnidur.blogspot.com/2010/07/2010.html
துபாயில் செயல்பட்டு வரும் நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷனின்
இவ்வமைப்பு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவுதல், ஏழை மாணவர்களது கல்விக்கு உதவுதல், ஏழைகளின் மருத்துவத்திற்கு உதவுதல், புனித ரமளானில் பித்ரா வசூலித்து உள்ளூர் எளியோர்க்கு உதவுதல், புனித ஹஜ்ஜுப் பெருநாளைக்கு குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட செயல் திட்டங்களை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இவ்வாண்டும் மாணவச்செல்வங்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

நீடூர் – நெய்வாசல் சுற்றி உள்ள கல்வி நிலையங்கள்..

கல்லூரிகள் :

1.   A.V.C. COLLEGE OF ARTS, MAYILADUTHURAI.

கல்லூரி இணையதளம்-இங்கே கிளிக்செய்யவும்

2.   A.V.C. COLLEGE OF ENGINEERING

கல்லூரி இணையதளம்-இங்கே கிளிக்செய்யவும்

3.   A.V.C. COLLEGE OF POLYTECHNIC

கல்லூரி இணையதளம்-இங்கே கிளிக்செய்யவும்

4.   DHARMAPURAM ADHINAM ARTS SCIENCE COLLEGE
–     223264

5.   GNAMBIGAI COLLEGE FOR WOMEN,    MAYILADUTHURAI.                                    –  223393

6.   A.R.C. VISWANATHAN ARTS & SCIENCE COLLEGE

– 259500

7.   POOMPUHAR COLLEGE, MELAIYUR         – 256427

8.   T.B.M.L. COLLEGE – PORAIYAR.  –

பள்ளிக்கூடங்கள் :

NASRUL MUSLIMEEN MATRICULATION HIGHER SEDONDARY SCHOOL
NIDUR-60203

——————————————

1. DBTR National Higher Secondary School                                                                    – 223272

2. Municipal Higher Secondary School       –  227183

3. Raj matriculation Higher Secondary School                                                   –   224484,224537

4. Kittappa Municipal Higher Secondary School                                                                        –   223676

5. Govt. Girls Higher Secondary School    – 240520

6. St. Paul’s Girls Higher Secondary School – 222637

7. Guru Gnana Sambandar Matriculation Higher school                    –  222651 , 220484 , 240299

8. Arivalayam Matriculation Higher Secondary School                                    – 222332 , 242300 , 223603

9. Rotary Club Mat Higher Secondary School -224407

10.Silver jublee Matriculation Higher Secondary  School                                                   – 222480,222465

11. A.R.C.Kamatchi Matriculation Higher Secondary School                                      –  259644, 259004

12. Azaad Matriculation Higher Secondary School

துபாய் நீடூர் நெய்வாசல்

 

Advertisements
 
Leave a comment

Posted by on January 16, 2011 in ஊர்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: