RSS

பெற்றோருடன் ஒரு கருத்து பறிமாற்றம்‏

18 Jan

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்….
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
அன்பும் அமுதும் ஒரு சேர அள்ளித் தரும் அருமை பெற்றோர்களே! ஒரு சில நிமிடங்கள் அடியேனின் ஆதங்கத்தை அலசிப்பாருங்களேன்.
அல்லாஹ் ஆறு அறிவையும் தந்து மூன்று பருவங்களையும் ஆரோக்கியமாக அளித்து அளவிலா கிருபையாக கொஞ்சி மகிழ குழந்தை செல்வங்களை அளித்தான். அவர்களுக்கு அவப்போது தேவையான ஊக்கச்சத்தையும் அறிவமுதையும் அளித்து சிந்தனையை சீர்தூக்கி பார்க்க இஸ்லாமிய ஷரீஅத்டோடு இணைந்த ஈருலக கல்வியையும் அளித்தோம். ஆனால் பருவமடைந்ததும் வாழ்க்கை துணைவியையும் தேர்ந்தெடுத்து கொடுக்கிறோம். இந்த இடத்தில் தான் சற்று அமைதியாகவும் ஆழமாகவும் சிந்திக்க கடமைப் படுகிறோம். அல்லாஹ்வின் உதவியால் அவன் தந்த செல்வமும் அறிவும் ஒன்று சேர பெற்றெடுத்த அருமை மகனுக்கு ஷரீ அத்தின் அடிப்படையில் எவ்வித சீர் சீதனம் இல்லாமல் பெருமானாரின் சொல்லில் 75 % மட்டும் செயல்படுத்தி திருமணத்தை இருவீட்டாரும் பலமுறை கலந்துரையாடி செய்து வைத்த திருமண ஒப்பந்தம் ஓரிரு மாதங்களிலே உடைந்துபோகிறதென்றால் அதற்ககும் பெற்றோர்தான் காரணம் என்றால் நூற்றுக்கு நூறு உண்மை என்று சொல்லவருவதை சுய நினைவோடு சீர்தூக்கி பார்ப்போம்.
யா அல்லாஹ் இனிமேலும் இத்தகைய தவறு தொடராமல் இருக்க உன்னிடமே உதவியை தேடுகிறோம்!
குறிப்பு:- மகன் என்று குறிப்பிட்டதால் தவறாக கருதாமல் மகளைப் பெற்றவர்களும் இதில் சிந்திக்க வேண்டுகிறேன்.
1.கருவுற்ற நாள் முதல் கருவரையை விட்டு வெளிவரும் வரை கண்ணும் கருத்துமாக ஈருயிரும் இமை காப்பது போல் காத்துவருகிரோம்.
2.பல சிரமங்களுக்கு பிறகு பெற்றெடுத்த பின் (பஞ்சு காயை பார்த்தவர்களுக்கு தெரியும்) பொத்தி பொத்தி பார்த்து பாதுகாக்கிறோம்..
3.அழுகை குறலை கேட்டதும் அலறியடித்து அமுதை அன்பை அள்ளித் தருகிறோம்.
4.துள்ளி குதித்திடும் நேரத்தில் கல கல சப்தம் கேட்டிட அனிகலன்கள் அனுவித்து மகிழ்கிறோம்.
5.துரும்பு செய்யும் வயதை அடைந்ததும் வீடு முழுவதும் உல்லாசமாக உலாவர நடை பழக்கம் கொடுக்கிறோம். (வசதிக்கேற்ப்ப வண்டியுடன்)
6.கூப்பிட்டவுடன் திரும்பி பார்த்து சொன்னதை செய்யும் பருவம் அடைந்ததும் பள்ளிக்கு அனுப்பி ஈருலக கல்வியையும் கற்க வசதி செய்கிறோம்.
7.பருவமடைந்ததும் படுக்கையை தனிமைபடுத்தி பாசத்தோடு பன்பையும் பழக்குகிறோம்.
8. பட்டம்,படிப்பு முடிந்ததும் தரத்திற்க்கேற்ப தொழிலை தேட வாய்ப்பு கொடுக்கிறோம்.
9.பாலியல் வயதை அடைந்ததும் வாழ்க்கை துணைவியை வலை வீசி தேடி(?) அல்லது சொந்தத்திலேயே சேர்த்து வைக்கிறோம்.
மிக முக்கியம் கவனிக்க வேண்டிய அடியேனின் ஆழ்ந்த ஆதங்கம்.
10.இவ்வளவும் சிறப்பாக செய்த பெற்றோரே எம்மருமை குழந்தைகளூக்கு (ஆண்,பெண்) இனிமேல் உனக்கென்று ஒரு வாழ்க்கை துணையை தேர்தெடுக்க இருக்கிறோம் உனக்குள் ஏதாவது ஆசை புதைந்து கிடந்தால் பொறுமையாக மலரச்செய் (மகனே, மகளே) என்று எத்தனை பேர் நம் அருமை குழந்தைகளை கேட்டிருக்கிறோம்????????
மக்களே! இனிமேல் உனக்கென்று ஒரு வாழ்க்கை துணையை உன் விருப்பப் படியே அமைத்து தந்தோம் இல்லற வாழ்வில் இன்முகத்தோடு பள்ளம் மேடுகளை அல்லாஹ் அருளிய வேதத்தில் அறிவுறுத்துவதை போல் நீங்கள் ஒருவருக்கொருவர் மானத்தை மறைக்கும் ஆடையைப் போல் மறைத்து இன்பமாக வாழ வழிவகுத்து தருவோம்.
உங்கள் வாழ்க்கை துணையோடு இப்படித்தான் நடந்து கொள்ளவேன்டும் என்று எத்தனைபேர் கற்று கொடுத்துள்ளோம்??????
இங்கு பெண்ணை பெற்றோருக்கு ஒரு கருத்து பறிமாற்றம்.
பெருமானார்(ஸல்) அவர்களின் பெருமிதமான சொல் செயல் சிந்தித்து உலமாக்களின் ஏகோபித்த கருத்தை ஷரீ அத்தின் வாழ்வில் செயல்பட்டு ஈருலகிலும் வெற்றிபெற.
மகளே! நீயே தேர்ந்தெடுத்த  உன் கணவன் வீட்டில் இருக்கும்போது அல்லாஹ்வுக்கு பிரியமான செயலான பெருமானாரின் சுன்னத்தான நோன்புகளின் ஒன்றான மாதாந்திர 13,14,15 நோன்புகளையோ அல்லது பர்ளான விடுபட்ட நோன்பையோ நோற்க கணவனின் அனுமதிபெறவேண்டும் என்பதையும், இத்தனை வயதுவரை உனக்கு வேண்டியதை செய்து தந்த எங்களை காட்டிலும் இப்படிபட்ட நோன்புகளை நோற்க எங்களிடம் அனுமதி பெற்றுதான் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை என்பதையும் மாறாக புதிதாக உனக்கு சேர்த்து தந்த உன் வாழ்க்கை துணைவருக்குத் தான் முழு முதல் உரிமையை வழங்க வேண்டும் என்று இது போன்ற நல்ல அறிவுரைகளை பரிவோடு படித்து கொடுக்க மறந்தது ஏனோ?????????
ஆணை பெற்றோருக்கும் கருத்து பரிமாற்றம்.
அன்பு மகனே! துரும்பு செய்யும் வயதில் துள்ளி விளையாட விரும்பியதை வாங்கி கொடுத்தோம், வாலிபமிருக்குடன் வளரும்போது வசதிபாராது வேண்டிய கல்வி கற்க வாய்ப்புகள் அமைத்து தந்தோம், படித்த படிப்பிற்க்கேற்ப / வெளிநாட்டு உள்நாட்டு சம்பாதியத்தை வேண்டிய போது வயோதிகத்தைபாராது வெளிநாடு அனுப்பி வைத்தோம் அல்ஹம்துலில்லாஹ் எங்களுக்கும் குறையில்லாது பாசத்தோடு கண்ணியமும் செய்து வருகிறாய்.
இப்போது நீயே தேர்ந்தெடுத்த உன் வாழ்க்கை துணைவியை உனக்கு ஷரீஅத்தின் பிரகாரம் திருமணம் செய்து தருகிறோம். மகனே இத்தனை ஆண்டுகளாக நாங்கள் உனக்கு பாசம், அறிவு பன்பை மற்றும் தான் கொடுத்தோம் ஆனால் இப்போது உன்னோடு வர இருப்பவள் இதோடு ஒருபடி மேலேறி உனது ஹலாலான துனைவியாகவும் முழு உரிமை பெருகிறாள், எனவே எங்களுக்கு அள்ளித்தரும் உரிமையை விட உன் மணைவிக்கு உண்ண, உடுக்க, இருக்க இன்னும் பல வசதி வாய்ப்புகளுடன் ஷரீஅத்தின் பிரகாரம் பள்ளம் மேடுகளை கடந்து உன் வாழ்வை அமைத்து ஈருலகிலும் வெற்றி பெற தயார் படுத்திக்கொள் என்று இது போன்ற அறிவுரைகளை சொல்லி மனம் திறந்து பக்குவப்படுத்த மறந்ததேனோ ?????????
யா அல்லாஹ்! உள்ள கிடங்கை அள்ளி எழுத வாய்ப்பளித்தாய் இதேபோல் எழுத்தும் செயலும் என் வாழ்வில் ஒன்றாக நடைமுறை படுத்த கிருபை செய்வாயாக ஆமீன்!
–அதிரை A.H. அப்துல் ரசீத் ரஹ்மானி

Source : http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_18.html

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: