RSS

விஜயகாந்த் தமிழக முதல்வரானால் ஊழலை ஒழிப்பாரா?

20 Jan

 

 

தாங்கள் சமீபத்தில் ரசித்த ஜோக் எது?  – கோபால், சென்னை.

பா ம க கூட்டணி பற்றி நாளுக்கொரு விதமாய் ராமதாஸ் சொல்வன.!

‘தமிழை வளர்ப்பதற்காகவே நான் பிரதமரை வரவேற்கச் செல்லவில்லை’ என்ற முதல்வர் கருணாநிதியின் சமீபத்திய கூற்று பற்றி தங்கள் கருத்து என்ன?  – இளமாறன், வெள்ளாடிச்சி விளை.
நீங்கள் இன்னுமா கருணாநிதி சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

ஈழத்தமிழரைக் காப்பாற்றவும் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரைப் பெறவும் பிரதமருக்குக் கடிதங்கள் மட்டுமே எழுதும் கருணாநிதி மத்திய அரசின் வளம் கொழிக்கும் துறைகளின் அமைச்சர் பதவிகளைப் பெறத் தள்ளாத வயதிலும் தள்ளுவண்டியில் ஏறி டெல்லிக்குச் செல்வார்.

பூங்காத் திறப்புக்கு ஒப்புக்கொண்டு பிரதமர் சென்னைக்கு வருவதாக இருந்திருந்தால் வாய்கொள்ளா அகலச் சிரிப்புடன் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்கக் காத்திருந்திருப்பார் கருணாநிதி. அப்போது தமிழ் வளர்ச்சி ஒரு பொருட்டாகத் தெரிந்திருக்காது.

அவர் பிறமொழிக் கலப்பின்றித் தமிழ் பேச முயன்றாலே தமிழ் வளர்ந்து விடுமே?

ஐயப்பனுக்கும் வாவருக்கும் இடையிலான தொடர்பை வரலாற்று ரீதியாக நிரூபிக்க முடியுமா?  – செய்னுல் ஆபிதீன், திருவை.

முடியும்…. மனிதர்களைத் தெய்வமாக்கி விட்டதை நிரூபித்து விட்டால்.


பா.ஜ.க. பிரதிநிதிகளை இஸ்ரேலும், சீனாவும் தங்கள் நாட்டுக்கு விஜயம் செய்ய மாறி மாறி அழைப்பதின் மர்மம் என்ன வ.மு. அவர்களே..? – காவ்யா, சென்னை.

ஒருவேளை மீண்டும் ஆட்சிக்க்கு பாஜக வந்துவிட்டால் தங்களுக்குச் சாதகமாக இருக்கச் செய்வதற்காக இருக்கலாம்.


ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடருமாமே…? – கவிச்செல்வன், வடலூர்.

இலவசங்கள் தொடரும் வரை எங்களுக்கு ஓட்டுகளும் விழும் என்ற நம்பிக்கைதான்.


விஜயகாந்த் தமிழக முதல்வரானால் ஊழலை ஒழிப்பாரா? – பெயர் வெளியிட விரும்பாத விஜயகாந்த் ரசிகை, வில்லிவாக்கம்.

இவரை விட மிகப்பெரிய ஊழல் ஒழிப்புக்காரராக வெளிப்பட்ட எம் ஜி ஆராலேயே முடியாதபோது விஜயகாந்த் எல்லாம் எம்மாத்திரம்.?


சர்க்கரை வியாதி என்பது சமீபத்திய வியாதியா? ஒரு தலைமுறைக்கு முன்னர் இதுபோல் கேள்விப்பட்டதில்லையே! முற்றாக ஒழிப்பதற்கு வழியேதும் உண்டா? – மன்சூர், கீழக்கரை.

சர்க்கரை வியாதி என்று சொல்வது மக்களின் வழக்கு. இன்ஸுலின் குறைபாடு தான் அது. அது சமீப காலத்ததும் இல்லை. ஆனால் சமீபத்தில்தான் அதன் காரணமும் மருத்துவமும் மக்களிடம் அறிமுகமாயின.

உடல் உழைப்பும் இயற்கையோடு இயைந்த வாழ்வும் கொண்டவர்களிடம் குறைபாடு  அண்டியதில்லை. சென்ற தலைமுறையினரில் பெரும்பாலோர் இப்படி வாழ்ந்தனர்.

முற்றாக ஒழிப்பதற்கு வழியேதும் உண்டா என வினவியுள்ளீர்கள். இது காலரா போன்று தொத்தும் நோய் இல்லை. அதனால் முற்றாக ஒழிப்பதற்கு என்று எதுவும் செய்ய முடியாது.

ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கை முறைகளையும் உணவுப்பழக்க வழக்கங்களையும் செம்மைப்படுத்திக் கொண்டால் இக்குறைபாட்டைத்  தவிர்க்கலாம்.


ஒவ்வொரு செய்மதி ஏவலுக்கு முன்னரும் இஸ்ரோ தலைவர்கள் திருப்பதி, காளஹஸ்தி கோவிலுக்குச் செல்வதுபோல் அப்துல் கலாம் மசூதிக்குச் சென்றாரா? – ராமன்பிள்ளை, மைலாப்பூர்.

திருப்பதி கோவில் போல விளம்பரமும் வருமானமும்  கிடைக்கும் மசூதி ஏதும் இல்லை என்பதால் அப்துல்கலாம் மசூதிக்குச் சென்றாரா என்பதை ஊடகங்கள் வெளியிடவில்லை.


கிருஷ்ண பகவானுக்கே 16008 மனைவிகள் என்பதாக இந்துப் புராணங்கள் சொல்கின்றன. பிறகு ஏன் அந்த மதத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற கோட்பாடு? – தேதியூர் ஷங்கர்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்துமதக் கோட்பாடு இல்லை; The Hindu Marriage Act  1955 எனும்  இந்திய அரசின் சட்டம். அந்தச் சட்டம் அனுமதிக்காததால் தான் “சின்னவீடு” என்றும் “செட்டப்” என்றும்  வைத்துக் கொள்கிறார்கள்.

புத்த, ஜைன, சீக்கிய மதத்தவரையும் இச்சட்டம் கட்டுப்படுத்தும்.

கிருஷ்ண பகவானுக்கு 16008 மனைவிகள் என்பதாகச் சொல்வது தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர் என்று சொல்வது போலப் புராண நம்பிக்கை. வைணவ சமயத்தில் இதற்கு வேறு தத்துவ விளக்கங்கள் சொல்வர்.


சஞ்சய் காந்தி உண்மையிலேயே ஹீரோவா? வில்லனா? – துரை, பல்லாவரம்.

இறந்து போன ஒருவரைப் பற்றித் தாறுமாறாக எதுவும் சொல்லக்கூடாது ..!

அவர் உயிருடன் இருந்தபோது அவரது ஆதரவாளர்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஹீரோ! டெல்லியில் தாம் வாழ்ந்திருந்த இடங்களிலிருந்து அவரால் துரத்தியடிக்கப் பட்ட மக்களுக்கும் கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டவர்களுக்கும் அவர் வில்லன்.

இப்போது அவரது நடவடிக்கைகளைத் திரும்பிப் பார்த்தால் ஆர்வக்கோளாறும் அதிகாரப் பின்புலமுமே அவரை அப்படி நடந்து கொள்ளத் தூண்டின எனப்படுகிறது.


உலக இனங்களில் யூதர்களும் பிராமணர்களும் மட்டும் அழகாகவும் அறிவாளிகளாகவும் படைக்கப்பட்டிருப்பது ஏன்? – இளவரசு, பரங்கிப்பேட்டை.

உங்களுக்கு யாரோ தவறான தகவலைத் தந்துள்ளனர். அழகும் அறிவும் குறிப்பிட்ட இனத்துக்கு மட்டுமே சொந்தமானவையல்ல! அவை இனம் பார்த்தும் வருவதில்லை.

பிறப்பிலேயே இயல்பாக வரும் அழகு பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து வேறுபடும்.

அறிவு முயற்சியாலும்  பயிற்சியாலுமே வளரும். நான் யூதன் அல்லது பார்ப்பனன் என்று சொல்லிக்கொண்டு படிக்காமல் இருந்தால் அறிவு வளருமா?
நீங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு யூதர்களையும் பார்ப்பனர்களையும் விஞ்சிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன தடை?

 

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011011613048/vanagamudi-answers-16-01-2011

Advertisements
 
 

Tags: ,

One response to “விஜயகாந்த் தமிழக முதல்வரானால் ஊழலை ஒழிப்பாரா?

  1. Pingback: Indli.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: