RSS

அடுத்த துணை முதல்வர் அழகிரியா? கனிமொழியா?

24 Jan

 

 

தங்களைக் கவர்ந்த தமிழ் நடிகர் யார்? -சினேகன், தஞ்சாவூர்.

சினிமா பற்றி வ மு பகுதியில் விடைகள் சொல்வதில்லை என்பது இந்நேரத்தின் பாலிஸி.

எடிட்டருக்குத் தெரியாமல் ரகசியமாக சொல்லிவிட ஆசை தான். வாய்ப்பில்லையே!

எதற்கும் உங்கள் எண்ணை வமுக்கு ஒரு எஸ் எம் எஸ் பண்ணுங்களேன். 🙂


ஜெயமோகனை இந்துத்துவா என்று சொன்ன நீங்கள் சாரு நிவேதிதாவின் ஆதரவாளரா? – மருதன், வேலூர்.
இல்லை!. சாருவுக்கும் ஜெயமோகனுக்கும் இடையே ஆயிரம் இருக்கலாம். அதற்காக நான் சாருவின் ஆள் என்பது கொஞ்சமும் சரியில்லை தோழரே!

வரும் தேர்தலில், பாமக எந்தக் கூட்டணியில் இருக்கும்? – முருகேசன், கப்பியறை.

தி மு க


ஆர்வக்கோளாறு மற்றும் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு வணங்காமுடியாரின் அறிவுரை என்ன? – சாதிக், அதிராம்பட்டினம்.

ஆர்வக்கோளாறு அபத்தத்தில் முடியலாம். ஒரு செயலில் ஈடுபடும் முன் அவற்றின் பின் விளைவுகளை நன்கு ஆய்ந்து ஈடுபடுவதே அறிவுடைமை.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

சாதிக்கத்துடிப்பவர்கள், செயலின் அடி முடி அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கேற்ப முறையாகப் பயிற்சியும் முயற்சியும் செய்ய வெண்டும். வெற்றியாளர்களின் சாதனைகளை முன்னுதாரணமாகக் கொண்டு தங்களை வார்த்துக்கொள்ள வேண்டும்.


அடுத்த துணை முதல்வர் யார் அழகிரியா? கனிமொழியா? – கணேஷ், துபை.

ஏன் துணை முதல்வர் பதவி? டெல்லியிலேயே ஆளும்கட்சி அதிகாரத்தைப் பார்த்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் முதல்வர் ஆகும் தகுதி இல்லையா என்ன?


மனித வரலாற்றில் மிகப்பெரும் அநீதிதம் என்று எதை சொல்வீர்கள்? – கண்ணன், சாமியார்பேட்டை

நான் வாழும் காலத்தில் ஈழத்தில் சிங்களப்படை நடத்தியதையும் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடத்துவதையும்…


உலக மக்கள் தொகையில் 0௦.27 சதவிகிதமே இருக்கும் யூதர்கள் உலகின் நிகழ்வுகளை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத இனமாக இருப்பதின் ரகசியம் என்ன?? – அன்ஸார், சென்னை.

இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. உலகச் சட்டாம்பிள்ளை அல்லது உலகப் போலீஸ்காரனாகத் தன்னைக் கருதிக் கொண்டு,  ஐக்கியநாடுகள் சபையைத் தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்டம்போடும் அமெரிக்காவில் அரசியல் தீர்மானங்களை முடிவு செய்யும் இடத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.


பசலை நோய் என்றால் என்ன வமு அய்யா? – பசுபதி, குவைத்.

காதலர்களுக்குப் பிரிவு நிகழும்போது பெண்ணிடம் தோன்றுவது பசலை. பழந்தமிழ் இலக்கியங்கள் இது பற்றி நிறையப் பேசும். பிரிவால் உடல் மெலியும்; பசலை பூக்கும். உங்களுக்குச் சட்டெனப் புரிவதற்காய் ஓர் எடுத்துக்காட்டுத் தருகிறேன்.

நம் வீடுகளில் இப்போது மண் பாண்டங்களோ செம்பு வெண்கலப் பாத்திரங்களோ பயன்படுத்தப்படுவதில்லை. உங்கள் வீட்டுப் பரணில் தேடிப் பார்த்தால் பழைய செம்பு, வெண்கலப் பாத்திரங்கள் தென்படும். அவற்றில் பச்சை பூத்திருப்பதைக் காணலாம். ஏனெனில் உங்கள் அண்மையோ தொடுகையோ இல்லாமல் அவை உங்களை விட்டுப் பிரிந்து விட்டன. மீண்டும் உங்களைச் சேர ஏங்கியிருப்பதால் பச்சை…

பெண்ணிடம் தோன்றுவது பசலை.

“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.”

பொருள்: “என்னை அணைத்துக் கிடந்த தலைவன் சற்று அகன்று படுத்த உடனேயே என்மீது பசலை படர்ந்து விட்டதே!”

புரிந்ததா?


குழந்தைகளுக்கான பால்பற்கள் (ஆரம்பத்தில் முளைப்பது) அனைத்தும் விழுந்து புதியப் பற்கள் வருமா? அல்லது கடவாப் பற்கள் விழாமல் ஏற்கெனவே உள்ள பற்கள் அப்படியே இருந்து விடுமா? – பிரியாமணி,  மானாமதுரை.

வணங்காமுடி Master of All subjects எனப்படும் அனைத்துத் துறை வல்லுநன் அல்லன். வணங்காமுடி விடைகள் பகுதிக்கு மருத்துவம், உடலியல், உளவியல் போன்ற துறை சார்ந்த வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. ஒரு வாசகர் முஸ்லிம் மத அறிஞர்களிடம் வினவ வேண்டியதை வணங்காமுடி விடைப் பகுதிக்கு அனுப்பி வினவியுள்ளார்.

அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கல்வி, குடும்பவியல் இணைந்த அன்றாட நாட்டு நடப்புகள் தொடர்பான வினாக்களுக்கும் பொது அறிவியல், புவியியல் தொடர்பான வினாக்களுக்கும் விடை அளிக்க முடியும். சினிமா மற்றும் மதம் தொடர்பான வினாக்களுக்கு விடை அளிக்க முடியாது.

உடலியல் சார்ந்த வகையில் அமைந்ததுவே உங்கள் வினாவும். நாம் சிறு குழந்தையாய் இருந்தபோது இது நமக்கு நிகழ்ந்தது தான். ஆனால் நமக்கு நினைவிருக்காது. எனவே நம் வீட்டிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ அக்கம் பக்கத்து வீடுகளிலோ வளரும் குழந்தைகளைக் கவனித்தாலே விளங்கி விடுமே?

பிரியாமணி.. உங்கள் ஒரிஜினல் பெயரே அதுதானா?


இத்தனை நடந்த பிறகும் ரஞ்சிதா அமெரிக்காவிலிருந்து அமிஞ்சிகரைக்கு வந்து நித்திக்குப் பாத பூஜை நடத்தும் ரகசியம் என்ன? – நீலகண்டன், மதுரை.

“பக்தி தான் காரணம்” என்று அவரே சொல்லியிருக்கிறாரே?. அதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்?

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎன்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source: http://inneram.com/2011012313155/vanagamudi-answers-23-01-2011

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: