RSS

Monthly Archives: February 2011

எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு?

மைக்ரோஸாஃப்டின் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு எதிராக மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுவரும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இலவசமாக வெளியிடுகிறார்களே. எப்படி தாக்குபிடிக்கின்றனர்? -மயில்விழி, துபாய்.

பெருத்த வரவேற்பு என்பதெல்லாம் சாமானியர்களிடம் இல்லை. சாமானியர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு இயங்கு தளம் எளிதாக இருக்க வேண்டும். அவ்வளவே. மைக்ரோசாப்ட் தனது விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தின் மூலம் கெட்டபெயர் சம்பாதித்து இருந்தாலும், தனது அடுத்த வெளியீடான விண்டோஸ் ௭ மூலம் விட்ட இடத்தைப் பிடித்திருக்கிறது.

இனி உங்கள் கேள்விக்கு வருவோம். உண்மையில் இலவசம் என்று ஒன்று இல்லவே இல்லை. லினக்ஸ் இயங்குதளத்தைப் பொறுத்த மட்டில் பல்வேறு நிறுவனங்கள் அத்தளத்தின் திறமூல செயலியை மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். இத்தளம் பெயரளவில் இலவசம் என்றாலும், அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்க அதை வெளியிட்ட நிறுவனத்திற்குக் காசு கொடுத்தாக வேண்டும். இதை சாமானியருக்குப் புரியாத வகையில் பராமரிப்பு என்று அந்நிறுவனங்கள் அழைக்கின்றன.

இதன்மூலம் ஒருபுறம் திறமூலம் வளர்ச்சி அடைவதோடு அதனை வெளியிடும் நிறுவனங்களும் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளத் தேவையான வருவாயும் கிடைக்கிறது அல்லவா?


முபாரக்கிற்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ந்தெழுந்தவுடனேயே அதுவரை அவருக்கு ஆதரவாக இருந்த அமெரிக்கா அவருக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட ஆரம்பித்தது ஆச்சரியமாக இல்லையா? – ராஜ மாணிக்கம், திருவாரூர்.
இது முபாரக்கின் விஷயத்தில்  மட்டும் இல்லை. அமெரிக்கா தான் ஆதரிக்கும் பல நாட்டு அதிபர்களின் நிலை ஓரளவுக்குமேல் தாக்குப் பிடிக்காது எனத் தெரியவரும்போது இப்படித்தான் நடந்து கொள்ளும். இல்லையெனில் எகிப்து போன்ற நாடுகளுக்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்ய முடியாதே?

கடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 1000 லாரிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக பொய் பரப்பிய பத்திரிக்கைகள் பற்றி? – சேட்- மதுரை.

சமூக அக்கறையோ பொறுப்போ இல்லாத, பரபரப்பை மட்டுமே காசாக்கத் துணியும் இழிந்த குணம் படைத்தோர் இதழாளர்களாக இருப்பது கவலையைத் தருகிறது. இல்லாத ஒன்றைச் செய்தியாக்கி மக்களைப் பீதியில் ஆழ்த்துவதோடு சமூக நல்லிணக்கத்தையும் அமைதியையும் கெடுக்க நினைக்கும் அற்பப் புத்தி படைத்தோர் செய்தியாளர்களிடையே ஊடுருவி உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

Read the rest of this entry »

Advertisements
 

Tags: ,

மலர்கின்றேன்…கிளியனூர் இஸ்மத்

அறிவு என்பது காணாமல்போன ஒட்டகமாக இருக்கிறது அதை எங்கு கண்டாலும் கட்டிபோட்டுவிடுங்கள் என்பது அண்ணல் நபிகளின் அழகிய பொன்மொழி.

பொருளும் அருளும் முயற்ச்சியின்றிகிடைக்கப்பெறா…பொருள் சேர்க்க வேண்டி வருணம் பூசுவதை விடஅருள் பெற தருணம் பார்ப்பதுசாலச்சிறந்ததுஅகத்தில் அமைதி விளைச்சல்விளைவதற்கு அது உகந்தது…
தன்னை மட்டும் மறந்து விட்டு அனைத்தையும் சிந்திக்கும்ஆராயும்பேதம் நிறைந்த மனிதர்களும் மார்க்கத்தின் ஆணிவேரையும் அடிதளத்தையும்அசைத்துப்பார்க்க ஆர்வப்படுகின்றவர்களுக்குமத்தியிலும்…

முதலும் நானே
முடிவும் நானே
உள்ளேயும் நானே
வெளியேயும் நானே
காலமும் நானே
கோலங்களும் நானே-என்று
அத்வைதம் கூறும்அல் குர்ஆன்…

வணக்கம்
வெளியிலிருப்பனுக்கு
வழங்கப்படுவதல்ல
நம்மில் நிறைந்தவனுக்கு
அர்ப்பணிக்கப்படுவது.!

வேதம் படிப்போரிடம் தெளிவு இல்லையெனில்படைத்தோனின் குற்றமில்லை…
அறிவென்ற ஆயுதம் நம்மிடம் இருக்கும் வரையில் ஆகமம் நம்மை விட்டு அகலாது…
உங்களோடு நானும் மருளில்லாமல் மலர்கிறேன்.
கிளியனூர் இஸ்மத் .

பிறப்பு : கிளியனூர்
சொந்த ஊர் :கிளியனூர்.
மனைவி கிடைத்த ஊர் : எலந்தங்குடி(1988 மார்ச் 20)

இருமகள்கள்

மைத்துனர் ஷேக்அலாவுதீன்.

பொருள் நாடி வந்து இருக்கும் நாடு துபாய்

அமீரகம்  ஆளாக்கியவது
படிப்பது எழுதுவது

6வது அறிவு…
ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை துபாய்
நிகழ்வுகளின் நிழல்கள்….
கிளிக்….கிளிக்…

 

 

Tags:

இவை பயனுள்ள தளங்கள்.

இது பயனுள்ள தளம்.

இதனை சிறிது காலம் மன ஓர்மையுடன் பயன்படுத்தி இறைமறையாம்   குர்ஆனை மனனம் செய்திட முயலுங்கள்.

நாடுங்கள் எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவான்.

இத்தளத்தில்
http://www.tamililquran.com/main.asp>

இத்தளத்தில்
===> தமிழில் குர்ஆன் <===

குரானின்  ஒவ்வொரு  ஆயத்தும் தமிழில் அர்த்ததுடன்  உள்ளது. இதன் மூலம் நாம் பெரிதும் பயன‌டையலாம்.

அன்பர்களே கண்ணுக்கழகாக‌ பைண்டிங் செய்யப்பட்டு இறைமறையாம் திரு குரானை வீட்டில் யாவரும் காண அடுக்கி வைத்து அழகு பார்ப்பதில் எந்த பயனும் இல்லை.

மிகவும் உதவும் டிஜிட்டல் குர்ஆன் ஆன்லைன்
http://seasonsnidur.blogspot.com/2011/02/blog-post_23.html

Tanzil : Quran Navigator ( Quran – Alhamdulilah | Awesome Website !)

 

 

 

Tanzil : Quran Navigator


 

from    MR.ALI(வாஞ்ஜுர்)

 

Tags: , ,

தூக்கத்தின் தனித்துவம்

“அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்”. (அல்குர்ஆன் 25:47)

இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை தூக்கம்.  நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது தூக்கம்.
நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது.

குழந்தையின் தூக்கத்தினை கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது.

Read the rest of this entry »

 

Tags: ,

வாக்குறுதிகளை மீறும் காப்புறுதி நிறுவனங்கள்

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு, அவருக்கு வலிக்க ஆரம்பித்த பிறகுதான் தாங்க முடியாமல் பல் வைத்தியரிடம் போயிருக்கிறார். தொடர்ந்த மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் பல மருத்துவர்களின் இறுதி முடிவாக, ஒரு சத்திர சிகிச்சைக்கு அவர் உள்ளாக வேண்டியிருந்தது. பாதிக்கப்பட்ட கீழ்த் தாடையை முற்றாக அகற்றி விட்டு, அந்த இடத்தில், அவரது காலிலிருந்து இரத்த நாளங்களோடு எடுக்கப்பட்ட எலும்பொன்றைப் பொருத்த, சுமார் பன்னிரண்டு மணி நேரம் சத்திர சிகிச்சை செய்தனர் மருத்துவர்கள். சுமார் நான்கு இலட்சம் இந்திய ரூபாய்களுக்கும் அதிகமாகச் செலவாகிய இச் சத்திர சிகிச்சை, வெற்றிகரமாக நிறைவுற்ற போதிலும், பிரச்சினை பிறகுதான் ஆரம்பித்தது. Read the rest of this entry »
 

Tags: , , ,

நினைவாற்றலை வளர்ப்பதற்கு சில வழிமுறைகள் கூறுங்களேன்?

ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை தள்ளி விட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி வணங்காமுடியார் என்ன நினைக்கிறீர்கள்? -அமுதா, திருவனந்தபுரம்.

நாள்தோறும் படிக்கும் செய்திகளுள் அதுவும் ஒரு செய்தி!

ரயில்கள் மோதல்; பயணிகள் மரணம், ரயிலிலிருந்து கீழே விழுந்து பெண் சாவு, பாலம் இடிந்து ரயில் கவிழ்ந்து பயணிகள் பலி போல ஒரு செய்தி.

ரயில் பயணம் தனியாகச் செல்லும் பயணிகளுக்குப் பாதுகாப்பானதில்லை எனும் உண்மையைச் சொல்லும் ஒரு செய்தி.

ஆனால் வ மு விடைகள் பகுதியில் சொல்ல வேண்டியது வேறு.

இந்தியாவின் பெரு/சிறு நகரங்கள் கிராமங்கள் உட்படப் பல்வேறிடங்களில் பரவலாக நடைபெறும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களையும் வன்புணர்ச்சியையும்  கூட்டு வல்லுறவுகளையும் பற்றி மக்கள் இன்னும் விழிப்புணர்வின்றி இருக்கின்றனர் என்பதையே! Read the rest of this entry »

 

Tags:

இரவில் ஒரு மகப்பேறு

மற்றொரு இரவு. மதீனாவின் வீதிகளில் ரோந்து சென்று கொண்டிருந்தார் உமர் (ரலி). மைதானம் போன்ற ஓரிடத்தில் புதிதாய்க் கூடாரம் முளைத்திருந்தது. ‘நேற்று இந்தக் கூடாரம் இங்கு இல்லையே’ அது அவரது கவனத்தைக் கவர்ந்தது. அதை நெருங்கினார். அருகே நெருங்க நெருங்க அந்தக் கூடாரத்தின் உள்ளிருந்து ஒரு பெண்ணின் அழுகைச் சப்தம் கேட்டது. விரைந்து நெருங்கினார் உமர்.

கூடாரத்தின் வெளியே ஒரு மனிதன் கவலையுடன் அமர்ந்திருந்தான். அவனை நெருங்கி முகமன் கூறிய உமர், “யார் நீ?” என்று விசாரித்தார்.

“நான் பாலைநிலத்தைச் சேர்ந்தவன். அமீருல் மூஃமினீனைச் சந்தித்து நிவாரண உதவி பெற்றுச் செல்ல வந்திருக்கிறேன்” என்று பதில் வந்தது. அக்காலத்தில் மக்கள் அனைவருக்கும் கலீஃபா அறிமுகமானவராய் இருக்கவில்லை. கலீஃபாவும் ‘ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட’ என்று கட்டியக்காரர்கள் புடைசூழ பவணி வருவதில்லை. எளிமையின் இலக்கணம் நபித் தோழர்கள். Read the rest of this entry »

 

Tags: ,