RSS

நித்யானந்தா மீண்டும்…..?

02 Feb

 

 

வணங்காமுடி எதற்காவது சலித்துக் கொள்வதுண்டா? -முகுந்தன், குரோம்பேட்டை.

ஆம்!
ஒருவருக்கு அல்லது ஒரு குழுவுக்குச் சில பணிகளை அல்லது பொறுப்புகளை வகுத்துக் கொடுத்த பின் அவர்கள் அவற்றை முடிக்காவிடில் சலிப்பு ஏற்படுவதுண்டு.

அரசு வழங்கும் இலவசங்களை நிறுத்தினால் விலை வாசி ஏற்றம் ஓரளவாவது  குறையுமா? விலைவாசி ஏற்றத்தைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்? – இளவரசு, பரங்கிப்பேட்டை.
நீங்கள் தமிழ்நாட்டை மையமாக வைத்து வினவியுளீர்கள்.

இன்று விலையேற்றம் என்பது உலகையே உலுக்கி வரும் பிரச்சனை. தமிழ்நாட்டில் இலவசங்களை நிறுத்துவதால் பொருட்களின் விலை குறையாது!

பொருட்களின்  வரவும் அவற்றின் தேவையின் அளவும் –supply and demand –சந்திக்கும் புள்ளியே விலையைத் தீர்மானிக்கும் என்பது பொருளாதாரப் பாடம். உற்பத்திக் குறைவு அல்லது மழை , புயல் போன்ற இயற்கை இடர்கள் , , வேலை நிறுத்தம் , போக்குவரத்து முடக்கம் போன்ற செயற்கை இடர்கள் பொருட்களின் — supply — வரவைக் குறைக்கும்போது விலை ஏறும். சமீபத்தில் பெய்த கடும் மழையால் வெங்காயம் அழுகவே அதன் விலை உயர்ந்தது ஒரு சான்று.

உலக அளவில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம், எரிபொருளின் விலைகள் போன்றவையும் விலையைத் தீர்மானிக்கும்.

விலையேற்றத்தைக் குறைக்க அரசு என்ன செய்ய வேண்டும் என வினவியுள்ளீர்கள். 

பொருளாதார மேதையான  இந்தியப் பிரதமர் மன்மோகன் ஸிங்  அமைச்சர்களைக் கூட்டி ஆலோசனை செய்துள்ளார்.  நான் கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது.?


துனீசிய அதிபர் துரத்தப்பட்டதலிருந்து நம் ஆட்சியாளர்கள் பெறவேண்டிய பாடம் என்ன? – வசீகரன், பட்டுக்கோட்டை.

மக்கள் சக்தி வலிமையானது என்ற பாடம்.

ஆனால் எந்த ஆட்சியாளனும் இந்தப் பாடத்தைப் படிக்கவில்லை என்பதைப் பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, ஈரான் புரட்சி, பிலிப்பைன்ஸ் புரட்சி, ரூமேனியப் புரட்சி எனப் பலவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகாமல் இருக்க என்ன வழி? – ஸமீர், கீழக்கரை.

இந்திய அரசு உண்மையான அக்கறையுடனும் முழுமனதுடனும் முயன்றால் இதை நிறுத்தி விடலாம்.

மீண்டும் இதுபோல் இந்திய மீனவர்களைக் கொன்றால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள் பற்றி இலங்கை அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடவேண்டும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையே தெளிவான கடல் எல்லையை வகுத்து, அதை மீனவர்களுக்குத் தெளிவாக அறிவித்துவிட வேண்டும்.

நம் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கைக் கடற்படையினரை இந்தியக் கடற்படை கைது செய்ய வேண்டும்.

தமிழகக் கடலோரங்களில் செயல்படும் கடற்படையில் தமிழர்களான அதிகாரிகளையும் வீரர்களையும் பணியில் அமர்த்த வேண்டும்.


நித்யானந்தா மீண்டும்…..? – ஆனந்த், கதவம்பட்டி-புதுக்கோட்டை.

கொலைக்குற்றம் சுமத்தபட்டுக் கைதாகிச் சிறையிருந்த சங்கராச்சாரியே மீண்டும் வந்த பிறகு நித்யானந்தா வருவதில் என்ன பெரிய குறை இருக்க முடியும்.?

ஊடகங்களின் பிரச்சாரம் நீதிமன்றத்தால் உண்மைப்படுத்தப்படும் வரை நித்யானந்தா உலவட்டும்.


சென்னை புத்தக கண்காட்சியில் இந்த முறை தங்களை கவர்ந்தது? – அனுயா, கும்பகோணம்.

செல்லவில்லை; வாய்ப்புக் கிடைக்கவில்லை!

முப்பதாண்டுகளுக்கு முன் சென்றபோது சுமக்க முடியாத அளவு பல்துறைப் புத்தகங்களை வாங்கி வந்த நினைவுகளைக் கிளறி விட்டது உங்கள் வினா!

புத்தகக் கண்காட்சிக்குப் போவதில் – புத்தம் புதிய  புத்தகங்களை வாங்குவதில் — உள்ள மகிழ்ச்சியே தனிதான்.. இல்லையா?


வணங்காமுடியார் மஞ்சு விரட்டிளெல்லாம்  கலந்து கொள்வதில்லையா? – முரளி, கடலூர்.

எங்கள் பகுதியில் மஞ்சு விரட்டு, மாடுபிடி போன்றவை நடப்பதில்லை.  இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன், வடாற்காடு மாவட்டம் ஆம்பூரில் ஒரு சிறு மலையோர கிராமத்துத் திருவிழாவில் இதைப் பார்த்ததுதான் முதலும் கடைசியும். அங்கும் மாடுகளைச் சாலையில் கூட்டமாக விரட்டினரே தவிர யாரும் பிடிக்கவில்லை. அது மஞ்சு விரட்டுத்தானா என்ற ஐயம் இன்றுவரை விலகவில்லை.


மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்து உங்கள் கருத்து என்ன? – ஆன்றோ, ஷார்ஜா.

பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடி , டி ஆர் பாலுவுக்கோ தி மு க வுக்கோ அமைச்சரவையில் இடம் அளிக்காதது சோனியா மற்றும் மன்மோகன் ஸிங்கின் உறுதியான நிலைப்பாட்டைக் காண்பித்தது.


துனிசியாவைத் தொடர்ந்து மற்ற அரபு நாடுகளிலும் ஆட்சி மாற்றமோ அல்லது அரசியல் மாற்றமோ வர வாய்ப்புள்ளதா? – சிவராமன், மஸ்கட்.

துனீசியப் புரட்சிக்குப் பின் குவைத், சிரியா போன்ற நாடுகள் தம் குடிமக்களுக்குப் பல இலவசங்களை வழங்குவதைப் பார்த்தால், அவர்கள் எதிர்பார்ப்பதைப்போல் தோன்றுகிறது.


அசிமானந்தாவின் வாக்குமூலம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதா? – இப்ராஹீம், சென்னை.

இல்லை. அது  ‘tip of the iceberg’ எனத் தோன்றியது.

ஆனால் அவர், தம்மால் பாதிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் இளைஞனின் பணிவிடை தம் உள்ளத்தை மாற்றி விட்டது எனச் சொன்னதில் உள்ள நேர்மையை வியந்தேன்.


குஷ்பூ – ரோஜா யார் சிறந்த அரசியல்வாதி? – சுந்தர், நெல்லை.

ரோஜா!

தேர்தலில் போட்டியிட்டதோடு  கட்சி மாறியும் தம்மை ஓர் அரசியல்வாதியாக ‘எஷ்டாபிலிஷ்’ செய்து கொண்டது ரோஜாவே.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com.என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011013013245/vanagamudi-answers-30-01-2011

Advertisements
 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: