RSS

தூக்கத்தின் தனித்துவம்

23 Feb

“அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்”. (அல்குர்ஆன் 25:47)

இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை தூக்கம்.  நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது தூக்கம்.
நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது.

குழந்தையின் தூக்கத்தினை கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது.

தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.தூக்க மாத்திரைக்கு  அடிமையாகாமல் இருப்பது நல்லது . தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும். மனிதனுக்கு ஒவ்வொருக்கும் ஒவ்வொரு நேரத்தில் அது கிடைக்கலாம் . கிடைக்கும் நேரத்தினை பயன் படுத்திக் கொள்ளட்டும். பகலில் உணவுக்கு முன் பூனைத் தூக்கம் போடுவது நல்லதுதான்.தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது வலியை நன்கு குறைக்கும். வயதானவர்களுக்கு தூக்கம் குறைவதால்  பகல் உணவுக்கு முன் சிறிது நேரம் தூக்குவது  பயன் தரும் .

நள்ளிரவில்  நெடு நேரம் விழித்திருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், கணினியில் நேரத்தினை போக்குவதும், உடற்பயிற்சியின்மையாலும் தூக்கம் வராமல் அவதிப்படுகின்றோம்.உணவிற்கும் உறக்கத்திற்கும் 3 மணிநேர இடைவெளி வேண்டும். படிக்க அமரும் மாணவர்கள் தூக்கம் வந்து சிரமப்படுவதனை பார்க்கின்றோம் . அந்த வழிதான் அனைவரும் பின்பற்ற சிறந்த வழி . படுப்பதற்கு முன் சிறுது நேரம் படியுங்கள்  அல்லது நல்ல மென்மையான இசையினை கேளுங்கள் .
ஏக இறைவன் நமக்கு இரவு நேரங்களை ஓய்வு பெறும் காலமாகவும், அமைதியினை தேடிக்கொள்ளக்கூடிய நேரமாகவும் அமைத்து தந்துள்ளான்.
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், தூக்கத்தை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான். (அல்குர்ஆன் 25:47)

இரவிலும் பகலிலும் நீங்கள் நித்திரை செய்(து இளைப்பாறிக்கொள்) வதும், (பூமியின் பல பாகங்களுக்குச் சென்று) நீங்கள் அவனுடைய பேரருளைத் தேடிக்கொள்வதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். (கவனமாகச்) செவியுறும் சமூகத்தார்க்கு, இதில் நிச்சயமாக (ப் பல) அத்தாட்சிகளிருக்கின்றன. அல்குர்ஆன் 30 : 23

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: