RSS

Monthly Archives: March 2011

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே தீர வேண்டும்! இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப் பொருளேயன்றி வேறில்லை!

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்” (அல்-குர்ஆன் 21:35)

“ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச்
சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை” (அல்-குர்ஆன் 3:185)

இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம்!

“இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் மழை நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேறு வகைகளாகின்றன; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்: (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ
பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்” (அல்-குர்ஆன் 10:24)

இறைவன் தான் நாடிவர்களை செல்வந்தர்களாக்குகிறான்! மேலும் தான் நாடியவர்களுக்கு அளவோடு கொடுக்கிறான்!

“அல்லாஹ் தான் நாடியவருக்கு சம்பத்தை விசாலமாக்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை” (அல்-குர்ஆன் 13:26) Read the rest of this entry »

Advertisements
 

Tags: , ,

இலவசங்களுக்கு ஆப்பு! பொது நல வழக்கு விசாரணைக்கு வருகிறது

மதுரை : ஏப்ரல் 13 ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளான  தி.மு.க., – அ.தி.மு.க. மற்றும் பாஜக கட்சிகள், வாக்காளர்களுக்கு இலவசங்கள் அறிவிப்பதை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read the rest of this entry »

 

Tags: ,

இனி ஒருபோதும் அதிமுக வுடன் சேரமாட்டோம்: வைகோ கங்கணம்!

மீண்டும் அ.தி.மு.க.வுடன் சேர்வதற்கு, ம.தி.மு.க. ஒருபோதும் நினைக்காது என்று இமயம் டி.வி.க்கு அளித்த நேர்காணலில் வைகோ உறுதிபடக் கூறினார்.

 

இமயம் டி.வி.க்கு அளித்த நேர்காணலில் வைகோ கூறியதாவது: இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடன், எங்களை அல்லவா முதலில் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். சரி.., புதிய கட்சிகள் வருகின்றன.., நாம் தான் ஏற்கனவே இருக்கிறோமே என, அமைதி காத்தோம். தொகுதிப் பங்கீடு குறித்து நடந்த முதல் பேச்சுவார்த்தையில், “கடந்த முறை கொடுத்த 35கொடுத்துவிடுங்கள்’ என்றோம். “நிறைய கட்சிகள் வருகின்றன; கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்’ என்றனர். அடுத்த முறை, 30 தொகுதி கேட்டோம். இன்னும் குறைக்கக் கூறினர். Read the rest of this entry »

 

Tags: , ,

தாய்லாந்து தொடர் – 6

தாய்லாந்து ஒரு புத்த மத நாடு.

திரும்பிய பக்கமெல்லாம் புத்தர் கோயில்கள் தான்.

பிரமாண்டமான கோயில்களும் உண்டு. தம்மாத்தூண்டு கோயில்களும் உண்டு. வீடுகள், கடைகள் என்று எல்லா இடங்களிலும் சின்ன கோயில் மாதிரிகளை வைத்து கும்பிடுவார்கள்.

தாய்லாந்து அரசாங்கப் புள்ளி விபரம் ஒன்றின்படி நாட்டில் சுமார் 41,000 கோயில்கள் உள்ளன. புத்தர் கோயில்களைத் தவிர பள்ளிவாசல்கள், சர்ச்சுகள், இந்துக் கோயில்கள் தனி.

தலைநகர் பேங்காக்கில் புகழ் பெற்ற சீலோம் சாலையில் மஹாமாரியம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலைக் கட்டியவர் பெயர் வைத்தி செட்டியார். 1800களின் கடைசியில் கட்டப்பட்ட கோயில் இது. மாடு வியாபாரம் செய்து வந்த வைத்தி செட்டியார் அடிக்கடி ரங்கூனுக்கு சென்று வந்தார். அந்தக் காலத்தில் ரங்கூனில் செட்டியார் சமூகத்தினர் அதிகம். எனவே யாதவ சமூகத்தைச் சேர்ந்த வைத்தியையும் செட்டியார் ஆக்கிவிட்டார்கள் என்றுக் கேள்வி. ஒரு முறை ரங்கூனுக்குச் சென்று கொண்டிருந்த போது புயலடித்து கரை ஒதுங்கி பேங்காக் நகரின் மத்தியில் இந்தக் கோயிலைக் கட்டினாராம். இந்தக் கோயில் இருக்கும் ஒரு சாலையை ‘வைத்தி சாலை’ என்று அழைக்கிறார்கள். இவரது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தான் இன்றும் இந்தக் கோயிலை நிர்வகிக்கிறார்கள். இவர்களுக்குத் தமிழ் தெரியாது. தமிழ்நாட்டிலிருந்து அர்ச்சகர்கள், நிர்வாகிகளை கொண்டு வந்து சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் நவராத்திரியின் போது நம்மூரிலிருந்து கலைஞர்களை அழைத்துச் சென்று திருவிழாக்கோலம் பூணுகிறது ஆலயம். கடைசி நாளன்று தேங்காய்த் திருவிழா கொண்டாடுகிறார்கள். தேர் உலா வரும் போது பல்லாயிரக்கணக்கான தேங்காய்களை உடைக்கிறார்கள். எப்போதும் பரபரப்பான சீலோம் சாலை அன்று ஒரு நாள் மட்டும் சுமார் 8 மணி நேரங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மாரியம்மன் கோயிலில் நம்மூர் மக்களை விட தாய்லாந்து மக்கள் கூட்டம் தான் அதிகம்.

அதே போல தாய்லாந்தில் வசிக்கும் நம்மூர் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து தமிழ்ப் பள்ளி வாசல் ஒன்றையும் கட்டியிருக்கிறார்கள். இங்கு வாரந்தோறும் இலவசமாக தமிழ் மொழி எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கிறார்கள். Read the rest of this entry »

 

Tags: ,

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கரையேறுமா?

முஸ்லிம் லீகிடம் ஒரு தொஹுதியைப் பிடுங்கியது கருணாநிதியின் கூட்டணி துரோகம் என்று சொல்லலாமா? -கலீல், வீரசோழன்.

இப்போது  முஸ்லிம்லீக் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

தி மு க காங்கிரஸ் கூட்டணி முறியாமல் இருப்பதற்காகத் தாங்களே முன் வந்து டெல்லியில் தங்கள் தலைவர் இ அகமது மூலம் தங்களின் ஒரு தொகுதியைக் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்ததாக முஸ்லிம் லீக் கட்சியினரே பெருமையாக அறிக்கை வெளியிட்டுள்ளபோது, ‘கருணாநிதியின் துரோகம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இப்படித்தான் கருணாநிதி முதலில் கொடுத்த மூன்று தொகுதிகளுள் ஒன்றைப் பறித்தார். (பாளையங்கோட்டை)

முஸ்லிம்லீக் கட்சி என அவர்கள் சொல்லிக் கொண்டாலும் தேர்தலில் போட்டியிடுவது உதயசூரியன் சின்னத்தில் என்பதால் அவர்கள் தி மு க வினராகவே கருதப்படுவர். அவர்களுக்கே இல்லாத ஆதங்கம் உங்களுக்கு ஏன்?


தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை நிறைவேற்றாத கட்சிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? – D.ஹபீப் – கீழக்கரை.

முடியுமே….. அடுத்த பொதுதேர்தலில் நீங்கள் வேறு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்!


காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் தர மறுத்த திமுக திடீரென அதற்கு பணிந்ததன் மர்மம் என்ன? தேர்தல் கவலையா அல்லது குடும்ப கவலையா? – எம்.சிராஜ் நெல்லிக்குப்பம்.

சிக்கலின்றித் தேர்தலில்  வெற்றிபெற வேண்டுமே என்ற கவலை.


உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் போலிஸ் ஆடிய ருத்ர தாண்டவத்தைப் பார்த்தீரா? – காவிய மைந்தன், அவுரங்காபாத்.

எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சி மீது ஆளுங்கட்சி, காவல்துறையைக் கொண்டு நடத்தும் அத்துமீறல்களுக்கு உ  பி என்ன விதிவிலக்கா?

இதுவே தமிழ்நாடாக இருந்திருந்தால் கட்சித் தொண்டர்களும் காவல்துறைக்குத்  துணையாகக் களத்தில் இறங்கியிருப்பர். கடந்தகால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்களேன்.


அதென்ன உளவுத்துறைக்குச் சிறுபான்மையினர் மீது அப்படியொரு வெறுப்பு, அடிக்கடி அவர்களை குறி வைத்தே புரளிகள் கிளப்பபடுகின்றதே? சமீபத்திய உதாரணம் ‘லவ் ஜிகாத்’! – கனி, பொள்ளாச்சி.லவ்- ஜிகாத் என்றிருப்பதால் உங்கள் வினா  முஸ்லிம்களைப் பற்றி  எனக்கருதுகிறேன்.

ஒட்டுமொத்த உளவுத்துறையையும் அப்படிக் கூறிவிட முடியாது. சில மண்டலங்களில் இருக்கும் தலைமை உளவு அதிகாரிகளின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும் தங்களது தனிப்பட்ட சார்புகளுக்கேற்பவும் நேர்மையற்ற சில கறுப்பாடுகள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகின்றன என்பதே உண்மைநிலை.

இவர்கள் தங்கள் துறைகளுக்குத் தகவல் கொடுப்பதை விட ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்தி கொடுப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதால் நீங்கள் வினவியுள்ளது போன்ற செய்திகள் மக்களிடையே விரைவில் பரவி ஒருவர் மற்றொருவரை ஐயத்துடனும் வெறுப்புடனும் பார்க்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

அப்பாவிகள் பயங்கரவாதச் செயல்களில் தொடர்பு படுத்திக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு  ஐந்தாண்டுகளுக்கோ ஆறாண்டுகளுக்கோ பிறகு அவர்கள் நிரபராதிகள் என விடுதலையானாலும்  அவர்கள் கிடைத்தற்கரிய இளமையையும் கல்வியையும் இழக்க இவர்களைப்போன்ற உளவுத்துறைக் கறுப்பாடுகளே காரணம்.


கசாப்புக்கு சிக்கன் பிரியாணி என்பதைக் கூட தலைப்பு செய்தியாக்கும் மீடியாக்கள் சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலம் மற்றும் ஜனாதிபதிக்கு அவரின் வேண்டுகோள் கடிதத்தினைப் பத்திச்செய்தியாக கூட பிரசுரிக்கவில்லையே? – முஸாதிக், வாணியம்பாடி. Read the rest of this entry »

 

Tags: , , ,

விஜயகாந்த் ரிஷிவந்தியத்தில் போட்டியிடக் காரணம்?

விழுப்புரம் மாவட்டத்தில், தொழில் வளர்ச்சி இல்லாத பின்தங்கிய குக்கிராமங்கள் அடங்கிய ரிஷிவந்தியத்தை, விஜயகாந்த் தேர்வு செய்ய காரணம் என்ன என்ற கேள்வி, வாக்காளர்களிடையே எழுந்துள்ளது.

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் தொகுதி, மக்கள் அதிகம் கேள்விப்படாத தொகுதி. விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட பின்தங்கிய கிராமங்களை உள்ளடக்கியது. காங்., சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு, நான்குமுறை வெற்றி பெற்ற சிவராஜ் எம்.எல்.ஏ., தனிப்பட்ட செல்வாக்குடன் ஆறாவது முறையாக போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், இத்தொகுதியை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் துணிச்சலுடன் தேர்வு செய்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்துக்கு கூடிய கூட்டம் வியப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில், தே.மு.தி.க.,வுக்கு செல்வாக்கு இருப்பதை, அப்போது தான் அவர் உணர்ந்தார். அவரது மாமனார் ஊரான மூங்கில்துறைப்பட்டு, இத்தொகுதியில் அடங்கியுள்ளது. இதனால், லோக்சபா தேர்தலில் ரிஷிவந்தியத்தை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி தொகுதியில், அவரது மைத்துனர் சுதீஷை களமிறக்கினார்.

ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், ஆர்ப்பாட்டம், ஆரவாரமின்றி, 24 ஆயிரத்து 512 ஓட்டுகளைப் பெற்றார். இதன் மூலம், ரிஷிவந்தியம் தே.மு.தி.க.,விற்கு செல்வாக்கு உள்ள தொகுதியாக விஜயகாந்த் கணித்து வைத்திருந்தார். எனினும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடவே விஜயகாந்த் விரும்பினார். அ.தி.மு.க.,வுடன் ஏற்பட்ட தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் தொகுதிகளே தே.மு.தி.க.,விற்கு ஒதுக்கப்பட்டது. இவை இரண்டில், ரிஷிவந்தியத்தை விஜயகாந்த் தேர்வு செய்தார். அதற்குக் காரணம், நான்கு முறை வெற்றி பெற்ற காங்., எம்.எல்.ஏ., சிவராஜ், தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை என்ற எதிர்ப்பு அலையும், சிவராஜ், மற்றும் கள்ளக்குறிச்சி காங்., எம்.பி., ஆதிசங்கர் இடையே நீடித்து வரும் நீண்ட கால பகையும் தான்.

Source : http://www.inneram.com/2011032314805/reason-for-contesting-in-rishivandhiyam-by-vijayakanth

 

Tags: ,

தாய்லாந்து தொடர் – 7

தாய்லாந்து மசாஜ்..

உலகம் முழுதும் பிரபலமான ஒன்று.

ஜீவகா என்றழைக்கப்படும் சிவாகோ கமர்பாஜ் என்ற புத்த பிட்சுதான் தாய் மசாஜின் தந்தை என்கிறார்கள். இவரை புத்த பெருமானின் டாக்டர் என்று தாய்லாந்து மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திய, சீன, தென்கிழக்காசிய நாடுகளின் மசாஜ் டெக்னிக்களை உள்ளடக்கிய 2,500 வயது பெரும் பழமை வாய்ந்தது தாய் மசாஜ்.

நம்மூரின் யோகா, சீனாவின் அக்குபிரஷர் (அக்குபங்சர்), ஜப்பானின் ஷியாட்சு ஆகியவற்றின் ஒட்டு மொத்த கலவை தான் தாய் மசாஜ் என்று சொல்வோரும் உண்டு..

’நுஅட் போரான்’ என்று தாய் மொழியில் அழைக்கப்படும் மசாஜ்க்கு அர்த்தம் ‘பழமையான வகையில் அழுத்தம் தருவது’.

பாரம்பரியமிக்க தாய் மசாஜ் தரையிலோ பாயிலோ படுக்க வைத்து செய்யப்படுவது. எண்ணை தடவ மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எண்ணை இல்லாமல் மசாஜ் இல்லை என்றாகிவிட்டது. ’பாரம்பரியமிக்க தாய் மசாஜ்’ என்று சொல்லிவிட்டு கையில் எண்ணையை எடுத்தால் நம்பாதீர்கள்!

உள்ளந்தலை முதல் உச்சங்கால் வரை சுளுக்கெடுத்து விடும் தாய் மசாஜ் உடலுக்கு மிகவும் நல்லதாம். (மசாஜ் உடலையே ரிலாக்ஸாக்கி மாற்றி விடும் என்பதால் தலையும், காலும் இடம் மாறிவிட்டன!) Read the rest of this entry »

 

Tags: