ஓட்டிடலாம் வாங்க! ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

அன்பு சகோதர்களே!
வெகுசன ஊடகங்கள் நம்மை புறக்கணிப்பு செய்யும் நிலையில் இணையத்தை நாம் எப்படி பயன்படுத்தாலாம் என்ற சிறு கருத்து பகிர்வு! தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனையும் கவனத்தில் கொள்வோம்.
தமிழ் திரட்டியும் புக்மார்க் தளங்களும்!
திரட்டி என்பது பதிவு செய்தவர்களின் வலைத்ததளங்களின் இடுகைகளை (post) திரட்டும் ஒரு தளமாகும். வலைத்தளங்களை படிக்க விரும்புவர்கள் இந்த தளங்களுக்கு வந்து எளிதாக தமக்கு பிடித்த தலைப்புகளை படித்துக்கொள்ளலாம்.வாசகர்களும் பல வித கண்ணோட்டத்தில் உள்ள இடுகைகளை படிக்க முடியும்.
தமிழ் திரட்டிகளில் முன்னணியில் இருப்பது http://www.tamilmanam.net/ தளமாகும் இதன் பிறகு http://www.tamilveli.com/ http://www.thiratti.com/ போன்ற திரட்டிகளும் பலரால் விரும்பிப் படிக்கப் படுகின்றன.
அதுபோல், தங்களுக்கு பிடித்த அல்லது தங்களுடைய தளங்களை எவர் வேண்டும் என்றாலும் இதில் இணைத்துக்கொள்ள முடியும் பதிவராக (Blogger) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. திரட்டிகளில் இருந்து சற்றே வேறுபடுகிறது. இதில் Blog என்றில்லை எந்த தளத்தின் சுட்டியையும் (Link) இதில் கொடுத்து இணைக்க முடியும். இதில் முன்னணியில் இருப்பது http://www.ta.indli.com/ என்ற பெயரில் இயங்குகிறது. இதோடு http://www.tamil10.com/ போன்று பல Bookmark தளங்களும் பிரபலமாக உள்ளன.
இது போன்றுதான் தமிழ்நிருபர் http://tamilnirubar.org/ இணைய‌ தளமும் வரவுள்ளது. இந்த தமிழ் திரட்டிகளில் இணைக்க சில கட்டணங்கள் பதிவர்கள் கட்டவேண்டும். ஆனால், தமிழ் நிருபர் தளம் பதிவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசும் மதிப்புமிக்க பரிசுகளையும் அறிவித்துள்ளது.இது தமிழ் இணைய‌ தள வரலாற்றில் இதுவே முதன் முறை!
முஸ்லிம் வலைஞர்களும் பொது வாசகர்களும்!
சரி விசயத்திற்கு வருகிறேன்.இன்று அண்ணளவாக 450 முஸ்லிம் பதிவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஒரு மூத்த தமிழ் வலைஞர்.இந்த 450 முஸ்லிம் பதிவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக அக்கறையுடன் இடுகை போடக்கூடியவர்கள்.ஒரு சிலர் மட்டுமே மக்கள் ஒருவேலை உண‌வுக்கூட இல்லாமல் ஒட்டிய வயிறுடன் மக்கள் இருக்கும் போது,’நிலா நிலா ஓடிவா…’எழுதக்கூடியவர்கள். மற்றும் சிலர் அவர்களின் துறை சார்ந்தும்,சமையல் குறிப்புகள் என்றும் பதிவுலகில் இயங்க கூடியவர்கள்.
இன்று அச்சு,தொலைக்காட்சி,வானோலி ஊடகங்களில் பூஜியத்தில் இருக்கிறோம்.ஆனால், தமிழ் இணையதள ஊடகத்தில் ஓரளவு உயர்ந்து நிற்கின்றோம்.ஆனால் சமூக அக்கறையுடன் எழுதும் வலைப்பூக்கள் அவர்களின் சொந்த வாசகர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அதையும் தாண்டி வெளியே செல்லவில்லை. வெளி வாசகர்களையும் அடைய வேண்டும் என்பதற்காகதான் திரட்டிகளிலும் சேர்த்தார்கள்…அவர்களின் ஒவ்வொரு இடுக்கையும் அதில் இணைக்கதான் செய்கிறார்கள் என்றபோதும் பொது வாசகர் வட்டத்தை அடையமுடியவில்லை! ஏன்??? அதற்கு காரணமே நாம்தான்.
ஆம்! இந்த திரட்டிகளில் ஒரு இடுக்கை பிரபலமாகி அனைவரின் பார்வைக்கும் வர வேண்டுமென்றால் அதிக ஓட்டுகள் பெற்றிருக்கவேண்டும். ஓட்டு போடுவதற்கு அந்த திரட்டி இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தால் போதும்.நீங்கள் விரும்பும் பதிவை (நன்பர்களாக சேர்ந்து)சொல்லி வைத்துக்கூட வாக்களித்து வெற்றி பெற வைக்கலாம்.திரட்டிகளில் பதிவு செய்துக்கொள்ள‌ மூன்று நிமிடம் போதும். இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் அல்ல‌, என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.
இப்படி நல்ல விசயங்களையும் சமுதாய அக்கறையுள்ள சங்கதிகளையும் நாம் ஓட்டிட்டு திரட்டிகளின் வழியாக மக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம் அந்த பதிவர்கள் பொது வாசகர் வட்டதை அடைகிறார்கள். இதானால் வெகு சன‌ ஊடங்கள் மறைக்கும் நமது செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப முடியும்! மக்கள் மனங்களை நமது பக்கம் வென்றெடுக்க முடியும்! இன்ஷாஅல்லாஹ்.
வித்தும் கண்முன் சாட்சியங்களும்!
‘எங்க மக்களின் அவலத்தை வெகுசன ஊடகங்கள் மறைத்த போது இந்த வலைப்பூக்களும் திரட்டிகளும்தான் வெளியுலகிற்கு கொண்டு சென்றது. அதன் பின்புதான் வெகுசன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன’என்று நம்மிடம் ஒரு ஈழ பத்திரிக்கையாளர் சொன்னார்.
இன்று… துனீஷியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என நடந்து வரும் மக்கள் புரட்சியில் ஆண்கள், பெண்கள், முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் அடங்குவர்.
கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. அணிதிரட்டவும் இல்லை வழி நடத்தவும் இல்லை
இவர்கள் அனைவரையும் அணிதிரட்ட இணைய ஊடகம் மட்டுமே பயன்பட்டது.ஆம்! டிவிட்டார்,ஃபேஸ்புக், யூ டியுப்,வலைப்பூக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியே மக்களை அணிதிரட்டினார்கள்.
‘இன்டெர்நெட்’ தளத்திற்கூடான தஃவாவை கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி காலத்தின் ஜிஹாத்’ என வர்ணிக்கின்றார்.
இனியும் என்ன தயக்கம்?அல்லாஹ்வின் மேல் பாரத்தை போட்டு சொடுக்குங்கள்…
விரைவில் இணைய உலகில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் – பார்க்கலாம். இன்ஷாஅல்லாஹ்…
— ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

Author: S.E.A.Mohamed Ali. "nidurali"

S.E.A.Mohamed Ali (Jinnah)B.A.,B.L., (nidurali) Nidur. Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah. https://aboutme.google.com/?referer=gplus

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.