RSS

ஞான பாரதி வலம்புரிஜான் … சில நினைவலைகள்..

03 Mar

by டாக்டர் ஹிமானா சையத்

அப்போதுநான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்தேன் காலையில் ‘தமிழ்நேசன்’  நாளிதழைத் திறந்ததும் கண்ணில் பட்ட செய்தி வார்த்தைச் சித்தர்-ஞானபாரதி வலம்புரிஜான் அவர்களது மறைவுச் செய்திதான்.

சில நிமிடங்கள் அவருடனான தொடர்புகளை மனதில் மறுபடியும் எழுதிப் பார்த்து கண்களில் கோர்த்து நின்ற நீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டேன்.

ஜானுக்கும் ஊற்றுக்கண் தொடருக்கும் ஒரு தொடர்புண்டு. அத்தொடரின் முதல் அத்தியாயமே (அளவற்ற அருளாளன்… நிகரற்ற அன்பாளன்) ஜான் என்னிடம் தொடுத்த கேள்விக்கான விளக்கமாகவே அமைந்ததை வாசகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

58 வயதில் ஜான் தனது எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்காற்றிய தொண்டு அசாதரணமானது. வார்த்தைகளுக்காக வலிந்து தேடாமல் அருவிச் சரளத்துடன் தமிழை அவர் கையாளும் விதம் தனித்துவம் வாய்ந்தது. உரைநடைத் தமிழில் அவர் ஆக்கிய அனைத்தும் அற்புதமானவை தனித்துவ முத்திரையைப் பதித்தவை என்பதை  யாரும் மறுக்கமாட்டார்கள்.

அரசியல் கட்டுரைகளில் கூட அவரது கருத்துக்களை எற்றுக்கொள்ளாவிட்டாலும்,மொழியின் சுவைக்காக வலிந்து தேடிப் படிக்கும் வாசகப் பரப்பை அவர் கொண்டிருந்தார். இலக்கியப் பேச்சும் எழுத்தும் அவரை  எந்த அளவுக்கு உயர்த்திக் காட்டியதோ – அந்த அளவுக்கு அவர் செய்த அரசியல் அவரை இறக்கிக் காட்டியது.
எல்லாத் தரப்பு அரசியலிலும் அவர் அடிபட்டார்;காயப்பட்டார் என்றாலும் அதற்காக வருத்தப் பட்டதில்லை. வெளிப்படையாகக்  கருத்துக்களைச் சொல்வோர் சந்திக்கும் இயல்பான பிரச்சினையாகவே அவர் அதனை எடுத்துக்
கொண்டார்.

முஸ்லிம்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு “நாயகம் எங்கள் தாயகம்” என்ற காவியத்தில் நிறைவு பெற்றது.

இஸ்லாமியத் தமிழிலக்கிய – மார்க்க மேடைகளில் அவர் ஒரு நட்சத்திரப் பேச்சாளராக கம்பீரமாக வலம் வந்தார். முஸ்லிம் பேச்சாளர்கள் தொடாத ஆய்வு எல்லைகளை அவர் தொட்டார். அதற்கு அவர் படித்திருந்த ‘ப்பீட்டு மத இயல்  ஞானம் ‘கொடுத்தது.

முஸ்லிம் இளைஞர்களை அவர் தனது பேச்சின் இனிமையில் -லாவகத்தில் கட்டிப்போட்டார். அவர் பேசும் மேடைகளில் புகழ்மிக்க பேச்சாளர்களின் தனித்திறன் எடுபடாமல் போன சந்தர்ப்பங்கள் உண்டு.

(அப்துல்லாஹ்)அடியார் அவர்களுக்கு அடுத்து இஸ்லாத்தை
அறிவுப்பூர்வமாகவும் -அறிவியற்பூர்வமாகவும் பார்த்த முஸ்லிம் அல்லாதாரில் ஞானபாரதி வலம்புரிஜான் முன்வரிசையில் நின்றார். அவர் எந்த நிமிடமும் கலிமா (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் உறுதிமொழி) மொழிந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது. அடியார் அவர்களுக்கு அது கிடைத்தது; ஆனால் ஜானுக்கு இறைவன் அந்த வாய்ப்பை இறுதிவரை வழங்கவில்லை.

பலநாடுகளில் சமுதாய விழாக்களுக்குச் செல்லும்போதுஆங்காங்கே உள்ள சமுதாய அமைப்புக்களின் பொறுப்பாளர்களுடன் காரில் பயணிக்கையில் ஜான் அந்த நாடுகளுக்குச் சென்றபோது ஆற்றிய உரைகளை
அதீத ஆர்வத்துடன் போட்டுக் காட்டுவதில் அவர்கள் முனைப்புக் காட்டுவார்கள். மறக்காமல் “அவர் எப்போது இஸ்லாத்தில் இணைவார்? ” என்றும் கேட்பார்கள்.

இப்படி முஸ்லிம் இளைஞர்களையும் பெரியவர்களையும் ஒருசேர ஈர்த்திருந்த ஜான், அவர் இணைந்திருந்த அரசியல் கட்சி சிறுபான்மை மக்களுக்குத் தனிச்சலுகை கூடாது என்று பேசுகிற ஒரு அகில இந்தியக் கட்சியுடன் அரசியல் உறவு கொண்டபிறகுசெய்த அரசியல் -பேசிய பேச்சுக்கள் அவற்றை நியாயப்படுத்த  அவர் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் அவரிடமிருந்து அவர்களை வெகுதூரம் விலகிப் போக வைத்தன.

பல எல்லைகளில் பலதரப்பட்ட இளைஞர்களின் குமுறல்களை
நேரில் கேட்கும் வாய்ப்பை நான் பெற்றேன். தங்களை ஜான் ஏமாற்றிவிட்டதாக அவர்கள் ரொம்பவும் நொறுங்கிப் போனார்கள்.

அவரது கட்சித்தலைவர் மீது முஸ்லிம்கள் கோபப்பட்டார்கள். ஆனால் ஜான் மீது அவர்கள் ஆதங்கமே கொண்டார்கள். ஆனால் அவர்களை ஆசுவாசப் படுத்தும் முயற்சியில் ஜான் ஈடுபடவில்லை.

அவரது உடல்நிலையும் வெகுவாக பாதிக்கப்பட, அவர் மீடியாவின் வெளிச்சத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒரு
சில மூலிகை மருத்துவர்களின் விளம்பரப் படங்களுக்குள் முடங்கிப் முழக்கம் எழுப்பி வரலாறு படைத்த ஜானின் இந்த வீழ்ச்சியை ஜீரணிப்பது கஷ்டமாக இருந்தது. குறிப்பாக அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு!

பழகுவதற்கு ஜான் இனியவர். எவ்வளவு காலமானாலும் நினைவில் வைத்து நேசங்காட்டுவார். அறிமுக எழுத்தாளர்களின் நூல்களுக்கு அணிந்துரை வழங்குவதில் அவர் ஒர் பெரும் வள்ளல்.விதை நூல் என்றால், “பாரதிக்குப் பிறகு இவருடைய கவிதையில்தான் நான் ஜீவனைக் காண்கிறேன்” என்பார். “இதனால் எனக்கென்ன குறைந்து போகிறது? ” என்பார்.

ஒரு முறை மதுரையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில்
இருவரும் சந்தித்துக் கொண்டோம். அதிகமான வெகுஜன ஊடக அறிமுகமில்லாத எழுத்தாளனான எனக்கு பரந்துபட்ட வாசகப் பரப்பை எட்டிய ஒரு படைப்பாளியின் அறிமுகக் mகடிதம் தேவைப்பட்டது.

ரொம்பவும் தயக்கத்துடன் தெரிவித்தேன். உடனே அங்கேயே தன் பையைத்திறந்து தன் லெட்டெர் பேடில் ஓர் அறிமுகக்கடிதத்தை எழுதித் தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார். இந்தக் கடிதம் எனக்கு வாழ்வில் ஒரு கட்டத்தில் ரொம்பவும் உதவியாக இருந்தது.

இன்று ஜான் இல்லை; ஆனால், என் நெஞ்சில் நன்றியுணர்வு
நிறையவே இருக்கிறது; என்றும் இருக்கும்

by டாக்டர் ஹிமானா சையத்

About HimanaA (டாக்டர் ஹிமானா சையத்)medical doctor, author, publisher(40 BOOKS TODATE), orator, educational field worker, community based social activities, counseling, photography,etc

Hony. editor, NARGIS Tamil monthly

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: