RSS

டுநீசியா வெற்றிக்காக மயிலாடுதுறையில் மணிக்கூண்டு

08 Mar

மயிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றும் அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது.  இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது.  அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.

அது என்ன டுனீசிய வெற்றி?

உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது.  போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார்.

(வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).

அ.மா. சாமி-
முனைவர்  அ. ஆயயூப்.

Source

மயிலாடுதுறை – எனது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஊர். உலக நாடுகள் எங்கு சென்றாலும்வசித்தாலும் அது எப்படிப் பிறந்த ஊரின் மேல் எண்ணற்ற ஏராளமான உணர்வுகள், ஏக்கங்கள், சிந்தனைகள்? அதுவும் தாய் மண்ணைவிட்டு பல மைல்கள் தூரம் பிரிந்து இருக்கும் பொழுது அதன் மேல் ஏற்படும் உணர்வுகளை வார்த்தையில் எப்படி சொல்வது அல்லது வடிப்பது?

மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது “மணிக்கூண்டு”. இந்த மணிக் கூண்டைசுற்றிதான் முக்கியமான கடைவீதிகள், வியாபார கடைகள் எல்லாமே. எனது நண்பர்கள் பலரின்வியாபாரம் முழுக்க இந்த மணிக் கூண்டைச் சுற்றிதான் உள்ளன.

இந்த மணிக் கூண்டில் மிகப் பெரிய கடிகாரம் ஒன்று அதன் மேலை இணைக்கப் பட்டிருக்கும். இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம்.

மயிலாடுதுறை சிவா

Source

Advertisements
 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: