RSS

LADIES AND GENTLEMAN – பெண்கள் யாரும் Gentle கிடையாதா?

14 Mar

உலகின் ஐந்தாவது வலிமையான கடற்படை இந்திய கடற்படையாமே? -கலையரசன், வந்தவாசி.

உலக நாடுகளின் ராணுவ பலத்தில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.

அமெரிக்க, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தபடி நாமே!

அணு ஆயுத பலத்தில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தது நாமே!

கடற்படையில் ஐந்தாவது இடத்தில் இருப்பதில் குற்றமில்லை.


வ.மு. கணவன், மனைவி ஜோக் சொல்வாரா? – ஃபிலிப்ஸ், சென்னை.

சொல்லியுள்ளேன்.

10/10/2010 வ மு விடைப்பகுதி(http://www.inneram.com/2010101011089/vanagamudi-answers-10-10-2010)  பார்க்க.


ஏவா மக்கள் மூவா மருந்து – இன்றைய தலைமுறைக்கு இது பொருந்துமா வ.மு ஐயா? – குமார், மதுரை.

ஏன் பொருந்தாது?

எவர் எவர் ஏவாமக்களைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களுக்கு இது எக்காலத்தும் பொருந்தும்.


தமிழில் வெளியான முதல் நாளிதழ் எது? – ராஜ்குமார், மும்பை.

1882 ஆம் ஆண்டு. சுப்பிரமணிய அய்யரால் துவங்கப்பட்ட சுதேசமித்திரன் இந்தியாவில் வெளியான முதல் தமிழ் நாளிதழாகும்.


பின்தங்கியுள்ள ஒரு இனக்குழு தனது முன்னேற்றத்திற்கு முக்கியமாக எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்? – அறிவழகன், தூத்துக்குடி.பின் தங்கியுள்ள என்றால் எவ்வெவற்றில்?

கல்வி, பொருளாதாரம், அரசியல் விழிப்புணர்வு, நாகரிகம் போன்ற பல கூறுகள் உள்ளனவே?

ஓர் இனம் முன்னேற வேண்டுமெனில், அதற்குத் தடையாக உள்ள தளைகளை அறுத்துக் கொள்ள வேண்டும்.

தடை எது என அறிதல் கட்டாயத் தேவை.

அறிவதற்கு விழிப்புணர்வு தேவை.

எனவே பின் தங்கியுள்ள சமூகம் விழிப்புணர்வு பெறுவதே தலையாயது.


நடக்கும் தேர்தலினால் தனிப்பட்ட எனக்கு உண்மையிலேயே என்னதான் பிரயோஜனம்? – வரதன், மைலாப்பூர்.

நீங்கள் விரும்பும் கட்சி அல்லது வேட்பாளரரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை …

அல்லது யாரையும் பிடிக்கவில்லை எனில் 49 ஓ போடும் உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறீர்களே…

உங்களை ஒரு பொருட்டாகவே மதித்திராத அரசியல் வியாபாரிகள் உங்களைத் தேடி வந்து நின்று கூழைக் கும்பிடு போட்டு  நிற்கும் போது நீங்கள் ஒரு வினாடி உயர்ந்து நிற்கிறீர்களே….

இவையெல்லாம் தேர்தல் தருவனவல்லவா?.


ஒரு பழைய புதுக்கவிதை ஒன்னு சொல்லு தலைவா? – ரஜினி முருகன், தென்காசி.
கட்டற்று வெளிப்படும் தன்னிச்சையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கவிதையை இலக்கணக் கூட்டுக்குள் பூட்டி வைத்து மழுக்கடித்ததனால், விடுதலை எழுச்சியில்  புதுக்கவிதை பிறந்தது. இதற்கு ஆதரவாகச் சிறுகதை மன்னன் புதுமைப் பித்தன்,

“பண்ணென்பார் பாவமென்பார் பண்புமர பென்றிடுவார்

கண்ணைச் செருகிக் கவியென்பார் –  அண்ணாந்து

கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ்ப் பாட்டாச்சே

முட்டாளே இன்னமுமா பாட்டு”

என்றார். இக்கேலிப் பாடல் வெண்பா இலக்கணத்தில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டென நினைவுக்கு வந்த — நான் இளவயதில் படித்த —  பழைய புதுக்கவிதை, நாஞ்சில் நாட்டுப் பெரியவர் சுந்தர ராமசாமி எழுதிய, “கதவைத் திற; காற்று வரட்டும்” எனும் கவிதையே!

அது…

கதவைத் திற காற்று வரட்டும்

சிறகை ஒடி
விசிறியின்
சிறகை ஒடி.
விசிறிக்குக் காற்று
மலடிக்குக் குழந்தை
கதவைத் திற காற்று வரட்டும்

உணவை ஒழி
உடலின்
உணவை ஒழி
உணவில் உயிர்
நீருள் நெருப்பு
கதவைத் திற காற்று வரட்டும்

சிலையை உடை
என்
சிலையை உடை
கடலோரம்
காலடிச் சுவடு
கதவைத் திற காற்று வரட்டும்!


அதிமுக-தேமுதிக , திமுக-பாமக இவற்றில் மானங்கெட்ட கூட்டணி எது? – செந்தில்நாதன் – பெஹ்ரைன்.

பின்னது.

ஏனெனில் பன்முறை பின்னிப் பிணைந்து விட்டு விலகி மீண்டும் இணைந்த கூட்டணி என்பதால் உங்கள் வினா பொருந்துவது தி மு க – பா ம க கூட்டணிக்கே!


LADIES AND GENTLEMAN – ஏன் சார் பெண்கள் யாரும் Gentle கிடையாதா? – கவிதா ராமச்சந்திரன் – சென்னை.

LADIES என்பதே பெண்களில் GENTLE ஆனவர்களைக் குறிக்கும் சொல்தான்.. தமிழில்” சீமாட்டி..

GENTLEMAN  என்பது சீமான்

பொதுவானது WOMEN AND MEN.

சிறப்பானது LADIES AND GENTLEMEN

ஆங்கில மொழியில் சீமாட்டிகளைக் குறிக்க அச்சொல்லைத்தான் பயன்படுத்துவர்.

LADY என்பது மரியாதை மிக்க சொல் என்பதை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா -வின் மனைவி மிஷேல் ஒபாமாவை First Lady என்று அழைப்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்!

உங்களை விட்டால், UNDERSTAND என்னும் ஒரு சொல்லை UNDER   STAND  என இரு சொற்களாகப் பிரித்துப் பொருள்சொல்வீர்கள் போல் தெரிகிறது.


தொகுதி மறுசீரமைப்பினால் மக்களுக்கு லாபமா அரசியல்வாதிகளுக்கு லாபமா? – பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர், அதிராம்பட்டினம்.அரசியல்வாதிகளுக்கு எப்படி இருந்தாலும் லாபம்தான்.

மக்களுக்கு என்ன நட்டம்?


போட்டியில் உள்ள வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனில், எனது வாக்கை எவ்வாறு பயன்படுத்துவது வணங்காமுடியாரே? – மாணிக்கம், கும்பகோணம்.

49 O!


கட்சிப் பெயர்கள் போன்றவற்றை சுருக்கி எழுதும்போது இடையில் புள்ளி வைக்க வேண்டுமா, கூடாதா? – சம்பத், துபாய்.

புள்ளி வைக்கக் கூடாது எனச் சட்டமில்லை.

பெரும்பாலான மக்கள் கட்சிகளின் முழுப்பெயரைப் பயன்படுத்துவதில்லையே?

மக்கள் சுருக்கப் பெயர்களையே வழங்குவதால் புள்ளி வைத்தாலும் வைக்காவிட்டாலும் அக்கட்சிகளின் பெயர்கள் அவைதாம் என்பதில் குழப்பமில்லை.


இராணுவ ஆட்சிக்குப் பிறகு எகிப்திலிருந்து பேச்சு மூச்சில்லையே? – கப.கோ. வசீகரன்.

கடந்த வார வணங்காமுடி விடைகள் பகுதியில் நான் குறிப்பிட்டிருந்ததுபோல, அடுத்த தலைவரைத் தெரிந்தெடுக்க முடியாததால்….

 


ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை தேர்தல்ன்னு சொன்னதும் எல்லா அரசியல் கட்சியும் அலறுதே.  13 வெள்ளிக்கிழமை அவ்வளவு மோசமான நாளா வ.மு சார்? – மாஸ்டர் செல்வம், திருப்பூர்.

ஏப்ரல் 13 புதன்கிழமை.

நாளுக்கோ தேதிக்கோ அஞ்சி அலறவில்லை.

குறுகிய நாட்களே இருப்பதால் விரிவான தேர்தல் பிரச்சாரம் மற்றும் பணிகளுக்கு உரிய காலம் இல்லை என்பதாலேயே கட்சிகள் அலறுகின்றன.

 


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎன்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011031314500/vanagamudi-answers-13-03-2011

Advertisements
 

Tags: , , , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: