RSS

இப்படியும் குடும்பம் இருக்கலாம்!

20 Mar

சண்டை போடமாட்டோம் .ஆனால் மற்றவர் திருஷ்டி போடாமல் இருக்க பிரிந்திருந்தோம். எங்கள் பாதுகாப்பிற்காக சண்டை போடுவதுபோல் காட்டிக்கொள்வோம் . பொருள் தேடுவோம் அதிலும் போட்டி போட்டு பொருள் தேடுவோம். புகழை நாடுவோம் பெற்ற புகழ் போகாமல் இருக்க எதையும் செய்வோம் .     இலவசமாக கேட்க மாட்டோம் ஆனால் கொடுத்தால் வாங்க மறுக்க மாட்டோம் . வாங்கும் பொருள் இலவசமாக வந்தாலும் உழைப்பினால்  கிடைத்தது என்று மற்றவர் அறிய வைப்போம் . புகழை கேட்க மாட்டோம் இருப்பினும் மற்றவர் அதனை பரப்பும் பொழுது தடுக்க மாட்டோம் .கிடைத்த புகழை வைத்து வாழ்கையில் வெற்றி அடைய வழி வகுப்போம் . போருக்கு   போகமாட்டோம் .வந்த போரினை சமாளிக்க மற்றவர் கையில் விட்டு விட்டு நாங்கள் பாதுகாப்பாக இருப்போம். இனாம் கேட்க மாட்டோம் ஆனால்  மற்றவர்  பணத்தில் இனாம் கொடுக்க வைப்போம் . எப்படியாவது நினைத்ததனை சாதிப்போம்.  வெற்றி வந்த வழி எப்படியோ எங்கள் நோக்கம்  வெற்றியினை அடிப்படையாக அமைந்ததுதான். வழி தவறாக இருப்பினும் முடிவு நல்லதாக இருக்க வேண்டியதுதான் என்பதுதான் கோயாபல்ஸ் கொள்கை . நாங்கள் கோயாபல்ஸ் பாடத்தினை படித்து பயன் படுத்தாமல் இருந்தால் படித்ததற்கே பொருள் இல்லாமல் போய்விடும் .
எங்கள் வழி இப்படி . உங்களுக்கு நீங்கள் தனிவழி அமைத்து கொள்ளுங்கள் . ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனக்கென்று ஒருவழி அமைத்து நமது நாட்டினை ஒரு வழிக்கு கொண்டு வருவோம் .
இது என் வழி அல்ல காது வழியே கேட்ட வழி .அவ்வளவுதான் . நான் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டும் .

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: