RSS

தாய்லாந்து தொடர் – 7

22 Mar

தாய்லாந்து மசாஜ்..

உலகம் முழுதும் பிரபலமான ஒன்று.

ஜீவகா என்றழைக்கப்படும் சிவாகோ கமர்பாஜ் என்ற புத்த பிட்சுதான் தாய் மசாஜின் தந்தை என்கிறார்கள். இவரை புத்த பெருமானின் டாக்டர் என்று தாய்லாந்து மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்திய, சீன, தென்கிழக்காசிய நாடுகளின் மசாஜ் டெக்னிக்களை உள்ளடக்கிய 2,500 வயது பெரும் பழமை வாய்ந்தது தாய் மசாஜ்.

நம்மூரின் யோகா, சீனாவின் அக்குபிரஷர் (அக்குபங்சர்), ஜப்பானின் ஷியாட்சு ஆகியவற்றின் ஒட்டு மொத்த கலவை தான் தாய் மசாஜ் என்று சொல்வோரும் உண்டு..

’நுஅட் போரான்’ என்று தாய் மொழியில் அழைக்கப்படும் மசாஜ்க்கு அர்த்தம் ‘பழமையான வகையில் அழுத்தம் தருவது’.

பாரம்பரியமிக்க தாய் மசாஜ் தரையிலோ பாயிலோ படுக்க வைத்து செய்யப்படுவது. எண்ணை தடவ மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எண்ணை இல்லாமல் மசாஜ் இல்லை என்றாகிவிட்டது. ’பாரம்பரியமிக்க தாய் மசாஜ்’ என்று சொல்லிவிட்டு கையில் எண்ணையை எடுத்தால் நம்பாதீர்கள்!

உள்ளந்தலை முதல் உச்சங்கால் வரை சுளுக்கெடுத்து விடும் தாய் மசாஜ் உடலுக்கு மிகவும் நல்லதாம். (மசாஜ் உடலையே ரிலாக்ஸாக்கி மாற்றி விடும் என்பதால் தலையும், காலும் இடம் மாறிவிட்டன!)

இப்படி இப்படி தான் மசாஜ் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்தக் காலத்திலேயே கல்லில் செதுக்கி ’வாட் போ’ கோயிலில் வைத்திருக்கிறார்கள். நம் நாட்டைப் போலவே தாய்லாந்தும் விவசாய நாடு. எனவே விவசாயிகள் கடும் உழைப்பினால் இறுகி விடும் உடலையும், மனதையும் இலேசாக்க தாய் மசாஜ் உதவியிருக்கிறது. அப்படியே படிப்படியாக அனைத்து மக்களுமே மசாஜ் செய்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். தாய்லாந்தின் ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதி மக்களின் தாக்கம் மசாஜில் பிற்பாடு புக ஆரம்பித்திருக்கிறது. அப்படித் தான் திபெத், பர்மா, மேலை நாடுகளின் மசாஜ் முறைகளும், ஆயில் மசாஜ் போன்றவைகளும் பாரம்பரியமிக்க தாய் மசாஜ் என்ற போர்வைக்குள் புகுந்திருக்கிறது.

மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று ’நங் நங்’ என்று உடலில் குத்தி உதைத்து ஒரு வழி செய்யும் டுபாகூர் மசாஜ் போலல்லாமல், தாய் மசாஜ் ஒரு வித இசை லயத்துடன் செய்யப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் ஆண் / பெண் புத்த பிட்சுகள் தான் மசாஜ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்திருக்கின்றனர். கடந்து நூற்று சொச்சம் வருடங்களுக்குள் தான் மசாஜ் என்ற பெயரில் உலகளாவிய வியாபாரம் செய்ய முடியும் என்ற முடிவில் பலரும் களத்தில் குதிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

ஏற்கனவே நாம் பார்த்தபடி வியட்நாம் போரின் போது அமெரிக்கப் படையினர் தொட்டுக் கொள்ள ஊறுகாயாக தாய்லாந்து நாட்டை பயன்படுத்தியபோது மேற்கத்திய கலாசாரங்கள் என்ற பெயரில் பல சீரழிவுகள் தாய்லாந்தில் புகுந்தன. ஆனாலும் வெளிப்படையாக விபசார மையங்கள் என்று நடத்த கூச்சப்பட்ட தாய்லாந்தவர்கள் மசாஜ் செண்டர் என்ற பெயரில் கூத்துகளை நிகழ்த்த ஆரம்பித்தார்கள். இப்போது தாய் மசாஜ் என்றால் அதனுடைய பாரம்பரிய பெயரை இழந்து, ‘பலான’ மேட்டர் என்று மருவிவிட்டது கொடுமை தான்!

நாடு முழுவதும் பலான மசாஜ் செண்டர்கள் நிறையவே இருக்கின்றன. அதே போல அரிதாக பாரம்பரிய மசாஜ் செண்டர்களும் ஆங்காங்கே உண்டு.

பொதுவாகவே தாய்லாந்தில் கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் குறைவு. ஆனாலும் மசாஜ் செண்டர்கள் ஏரியாவில் மட்டும் பகல் கொள்ளையே அடிப்பார்கள். 200 பாட் மட்டும் தான் என்று சொல்லி உள்ளே நுழைந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மசாஜ், இந்த மசாஜ் என்று ரூட் விட்டு நாம் விடும் ஜொள்ளின் அளவைப் பொறுத்து பணத்தை உருவி விடுவார்கள். அதே போல மசாஜ் செய்யும் சிறிய அறையினுள் மசாஜ் செய்து கொண்டிருக்கும் போதே சத்தம் போடாமல் நம் பாக்கெட்டினுள் கை விட்டு பணத்தை லவட்டி விடும் சம்பவங்களும் அதிகம். எனவே இந்த மாதிரியான ஏரியாக்களுக்கு போகும் போது பாக்கெட்டில் அதிகம் பணம் எடுத்துச் செல்லாமல் போவது பணத்துக்கும், மனதுக்கும் இதம்!

ஆயில் மசாஜ், சேண்ட்விச் மசாஜ், மீன் மசாஜ், பேபி ஆயில் மசாஜ் என்று விதவிதமான பெயர்களில் காசு பிடுங்கும் மசாஜ் செண்டர்கள் தான் அதிகம்.

பட்டாயா போன்ற கடற்கரைகளில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது கால் மசாஜ், உடல் மசாஜ் செய்கிறேன் பேர்வழி என்று உள்ளூர்க் கிழவிகள் படையெடுப்பார்கள். ஆகா, கிழவியாக இருப்பதால் பாரம்பரிய மசாஜாக இருக்கும் என்று நம்பி உட்கார்ந்தால் போதும்.. எலும்பு முறிவு வைத்தியமாகத் தான் இருக்கும். மசாஜ் செய்து முடித்த உடன் உடலில் கூடுதல் வலி இரண்டு நாட்களுக்கு இருப்பது போல பிரமை இருக்கும். எனவே இந்த மாதிரியான இடங்களிலும் மசாஜ் செய்து கொள்ளாமல் தவிர்த்தல் நலம்.

பொதுவாகவே தாய்லாந்தில் மசாஜ் செய்வதில் திருநங்கைகள் கை தேர்ந்தவர்கள் என்ற கருத்து இருக்கிறது. இது சரியா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் அடுத்த முறை தாய்லாந்து செல்லும் போது பரிட்சித்துப் பார்க்கவும்.

சில வருடங்களுக்கு முன் மசாஜ் செண்டர்கள் சிலவற்றில் சில்மிஷங்களில் ஈடுபட ஆண்களைத் தூண்டி விட்டு அவற்றை மறைத்து வைக்கப்பட்ட கேமராவில் விடியோ படமெடுத்து அதை இணைய தளங்களில் பரப்பி விட்டுவிடுவோம் என்று பயமுறுத்தி காசு பிடுங்குகிறார்கள் என்றொரு வதந்தி பரவியது. ஆனால் இது உண்மை தானா என்று நிரூபிக்க முடியவில்லை. இது தாய்லாந்து சுற்றுலாவை தம் பக்கம் கவர்ந்து இழுக்க விரும்பும் வேறு சில நாடுகளின் பொய்ப் புகார் இது என்றும் பேசப்பட்டது.

தாய்லாந்து உலக அளவில் பரபரப்பாக பேசப்படுவதற்கு இந்த மசாஜ் செண்டர்களின் பங்கு மகத்தானது. நம்மூரிலும் பல ‘தாய்’ மசாஜ் செண்டர்கள் உள்ளன.

இப்படி உலகின் பார்வையை தன் பக்கம் திருப்பி கவர்ந்திழுத்து மக்களை சுற்றுலாப் பயணிகளாக வரவைத்து கூடவே அதன் மூலம் வருவாயை பெருக்க பல வழிமுறைகளை அரசும் கையாண்டதால் விரைவாக வளர்ந்த நாடுகளின் பட்டியலில் கடந்த 25 ஆண்டுகளுக்குள் இடம் பெற்றுள்ளது தாய்லாந்து.

வளர்ந்த நாடுகளில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளும், கட்டமைப்புகளும் தாய்லாந்தில் உண்டு.

எப்படி தாய்லாந்து கலாசாரத்தில் இந்தியா சாயல் அதிகமோ அப்படியே தாய்லாந்தின் வியாபார வருமானங்களிலும் இந்தியர்கள் பங்கு உண்டு. குறிப்பாக மாணிக்க கற்கள். இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்தில் மாணிக்க வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

அவற்றை அடுத்த பகுதியில் பார்ப்போம்…

பயணிப்போம் வாங்க…

My Photo மாயவரத்தான்…

Source : http://mayavarathaan.blogspot.com/2010/12/7-558.html?utm_source=BP_recent

—————————————————————

 

Tags:

One response to “தாய்லாந்து தொடர் – 7

  1. மாயவரத்தான்....

    March 22, 2011 at 10:26 am

    நன்றி. 🙂

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: