RSS

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கரையேறுமா?

23 Mar

முஸ்லிம் லீகிடம் ஒரு தொஹுதியைப் பிடுங்கியது கருணாநிதியின் கூட்டணி துரோகம் என்று சொல்லலாமா? -கலீல், வீரசோழன்.

இப்போது  முஸ்லிம்லீக் மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிப்பு வந்துள்ளது.

தி மு க காங்கிரஸ் கூட்டணி முறியாமல் இருப்பதற்காகத் தாங்களே முன் வந்து டெல்லியில் தங்கள் தலைவர் இ அகமது மூலம் தங்களின் ஒரு தொகுதியைக் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்ததாக முஸ்லிம் லீக் கட்சியினரே பெருமையாக அறிக்கை வெளியிட்டுள்ளபோது, ‘கருணாநிதியின் துரோகம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இப்படித்தான் கருணாநிதி முதலில் கொடுத்த மூன்று தொகுதிகளுள் ஒன்றைப் பறித்தார். (பாளையங்கோட்டை)

முஸ்லிம்லீக் கட்சி என அவர்கள் சொல்லிக் கொண்டாலும் தேர்தலில் போட்டியிடுவது உதயசூரியன் சின்னத்தில் என்பதால் அவர்கள் தி மு க வினராகவே கருதப்படுவர். அவர்களுக்கே இல்லாத ஆதங்கம் உங்களுக்கு ஏன்?


தேர்தல் அறிக்கையில் வாக்களித்ததை நிறைவேற்றாத கட்சிமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? – D.ஹபீப் – கீழக்கரை.

முடியுமே….. அடுத்த பொதுதேர்தலில் நீங்கள் வேறு கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம்!


காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் தர மறுத்த திமுக திடீரென அதற்கு பணிந்ததன் மர்மம் என்ன? தேர்தல் கவலையா அல்லது குடும்ப கவலையா? – எம்.சிராஜ் நெல்லிக்குப்பம்.

சிக்கலின்றித் தேர்தலில்  வெற்றிபெற வேண்டுமே என்ற கவலை.


உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் நடத்திய ஆர்பாட்டத்தில் போலிஸ் ஆடிய ருத்ர தாண்டவத்தைப் பார்த்தீரா? – காவிய மைந்தன், அவுரங்காபாத்.

எல்லா மாநிலங்களிலும் எதிர்க்கட்சி மீது ஆளுங்கட்சி, காவல்துறையைக் கொண்டு நடத்தும் அத்துமீறல்களுக்கு உ  பி என்ன விதிவிலக்கா?

இதுவே தமிழ்நாடாக இருந்திருந்தால் கட்சித் தொண்டர்களும் காவல்துறைக்குத்  துணையாகக் களத்தில் இறங்கியிருப்பர். கடந்தகால வரலாறுகளைப் புரட்டிப் பாருங்களேன்.


அதென்ன உளவுத்துறைக்குச் சிறுபான்மையினர் மீது அப்படியொரு வெறுப்பு, அடிக்கடி அவர்களை குறி வைத்தே புரளிகள் கிளப்பபடுகின்றதே? சமீபத்திய உதாரணம் ‘லவ் ஜிகாத்’! – கனி, பொள்ளாச்சி.லவ்- ஜிகாத் என்றிருப்பதால் உங்கள் வினா  முஸ்லிம்களைப் பற்றி  எனக்கருதுகிறேன்.

ஒட்டுமொத்த உளவுத்துறையையும் அப்படிக் கூறிவிட முடியாது. சில மண்டலங்களில் இருக்கும் தலைமை உளவு அதிகாரிகளின் எண்ண ஓட்டத்திற்கேற்பவும் தங்களது தனிப்பட்ட சார்புகளுக்கேற்பவும் நேர்மையற்ற சில கறுப்பாடுகள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகின்றன என்பதே உண்மைநிலை.

இவர்கள் தங்கள் துறைகளுக்குத் தகவல் கொடுப்பதை விட ஊடகங்களுக்குப் பரபரப்புச் செய்தி கொடுப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுவதால் நீங்கள் வினவியுள்ளது போன்ற செய்திகள் மக்களிடையே விரைவில் பரவி ஒருவர் மற்றொருவரை ஐயத்துடனும் வெறுப்புடனும் பார்க்கின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

அப்பாவிகள் பயங்கரவாதச் செயல்களில் தொடர்பு படுத்திக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு  ஐந்தாண்டுகளுக்கோ ஆறாண்டுகளுக்கோ பிறகு அவர்கள் நிரபராதிகள் என விடுதலையானாலும்  அவர்கள் கிடைத்தற்கரிய இளமையையும் கல்வியையும் இழக்க இவர்களைப்போன்ற உளவுத்துறைக் கறுப்பாடுகளே காரணம்.


கசாப்புக்கு சிக்கன் பிரியாணி என்பதைக் கூட தலைப்பு செய்தியாக்கும் மீடியாக்கள் சுவாமி அசிமானந்தாவின் வாக்குமூலம் மற்றும் ஜனாதிபதிக்கு அவரின் வேண்டுகோள் கடிதத்தினைப் பத்திச்செய்தியாக கூட பிரசுரிக்கவில்லையே? – முஸாதிக், வாணியம்பாடி.

ஊடகத்தின் கறுப்பாடுகள்.

முன்னர் வேறு வினாவொன்றுக்கு இது தொடர்பான விடை அளித்துள்ளோம்.


முஸ்லிம்கள் அளவுக்கு தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் இருந்தும் அவர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் அரசியல்  கட்சி இல்லையே, ஏன்? – கொச்சி ஷாஜி ஜான்,  சென்னை – 2.வரும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தனக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளின் பட்டியலை அ இ அ தி மு க வெளியிட்டுள்ளது. அதில் காணப்படும் கிறிஸ்தவக் கட்சிகள் தலைவர்களின் பெயர்களுடன்:–

டாக்டர் எஸ். ஜோசப்பெர்னாண்டோ
தலைவர் – கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்,

பேராசிரியர் ஏ.எஸ்.எம். மரியநல்லு
தலைவர் – கிறிஸ்துவ மக்கள் கட்சி,

டாக்டர் எஸ். மார்ட்டின்
நிறுவனத் தலைவர்-இந்திய கிறிஸ்தவ மதச் சார்பற்ற கட்சி,

டாக்டர் என். கிறிஸ்துமூர்த்தி
நிறுவனத் தலைவர் – இந்திய கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி,

ராயல் டி. தேவுகுமார்
அகில இந்திய கிருஸ்தவர்கள் விடுதலை முன்னணி,

எம்.ஏ. ராஜ், மாநில பொதுச் செயலாளர் –
தமிழ் நாடு அனைத்து கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி,

ஜான் சுவார்ட்ஸ்
நிறுவனர்-தலைவர், தமிழ் கிறிஸ்தவர் கட்சி,

எம்.டி. கிறிஸ்டியன் சாம்ராஜ்
தலைவர், அனைத்திந்திய கிறிஸ்தவ நீதிக் கழகம்.

தி மு க காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோர் பட்டியலில்,

கிறிஸ்தவ ஐக்கிய முன்னணி

தேசிய கிறிஸ்தவ மக்கள் இயக்கம்

கிறிஸ்தவ தமிழர் கழகம் ஆகியன உள்ளன. இன்னும் இருக்கலாம்.


49-ஒ ஏன்? – ப்ரியா, தஞ்சாவூர்.

அரசியல் கட்சிகளின் மீது  உங்களுக்குள்ள அவநம்பிக்கையையும் வெறுப்பையும் பதிவு செய்ய உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை.


வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கரையேறுமா? – ப.கோ. வசீகரன்.

காங்கிரஸ் கரையேறினால்தான் தி மு க ஆட்சிக்கு வரும் என்ற நிலையில் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸைக் கரையேற்ற முயலலாம்.


காங்கிரஸ் மற்றும்  தி.மு.க உறவு ஏன் திடீர் என முறிந்தது……….. காரணம் என்ன? – cid. அருண்குமார்.முறியவில்லையே.. ?  தொடர்கிறதே..?

இடையே ஏற்பட்ட பிணக்கு கூட்டணிக் கட்சிகளின் பேரத்தில் ஏற்படுவது சகஜமே!


திமுகவின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழக அரசின் கடன் ரூ 50000 கோடி உயர்ந்து 1 லட்சம் கோடியை எட்டியுள்ள நிலையில் வாங்கிய  கடனை தமிழக அரசு திருப்பிச் செலுத்துமா? – கடனை அடைக்க முடியாத சராசரி தமிழன்.

செலுத்தாது.

இலவசங்களை எப்படிக் கொடுப்பதாம்?


மாணவர்களின் பரிட்சையைக் காரணம் சொல்லி தேர்தலைத் தள்ளிவைக்கக் கோருபவர்கள், உலகக் கோப்பை கிரிக்கெட்டையும் அவ்வாறு தள்ளி வைக்கக்  கோராதது ஏன்? – அறிவுடை நம்பி-வல்லம்.

உலகக் கோப்பைப் போட்டி என்ற பெயரிலேயே இருக்கிறதே, அது நமது கட்டுப்பாட்டில் உள்ளது இல்லை என்று.

உலகக் கோப்பைப் போட்டிக்காகத் தமிழ்நாட்டின் சந்து பொந்துகளிலெல்லாம் ஒலிபெருக்கியை வைத்து நேரம் காலம் தெரியாமல் இடையூறு செய்வதில்லை என்பது தெரியாதா?


ஹவாலா பண முதலை ஹசன் அலி என்று அடைமொழி கொடுக்கும் மீடியாக்கள் ராசா போன்றோருக்கு எந்தப் பட்டமும் கொடுப்பதில்லையே? – ஜாகிர், வந்தவாசி.

ராசாவின் மீதுள்ள குற்றச்சாட்டு அரசுக்கு இழப்பேற்படுத்தியது; முறையற்ற வழிகளில் ஸ்பெக்ட்ரம் அனுமதி வழங்கியது போன்றவை..

அசன் மீதுள்ள குற்றச்சாட்டு ஹவாலா தொடர்பானது.

 


இந்தியாவில் ஊழலற்ற, மனிதநேயமிக்க மக்களாட்சி அமைய சாத்தியமேயில்லையா? – சிவலிங்கம், திருப்பூர்.

மக்கள் மாற வேண்டும்…

பீகாரில் நிதீஷ்குமாரைத் தேர்ந்தெடுத்தது போல..திரிபுராவில் மனீக்சர்காரைத் தேர்ந்தெடுத்தது போல..


இந்தத் தேர்தல் மூலம் காங்கிரசும் தேமுதிகவும் தம் வாக்குவங்கியை அதிகரித்துக் கொள்ளுமா? – எஸ்.கோகுல் வடபழனி.

கூட்டணி பலத்தால் அது நிகழலாம்.

 


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011032014728/vanagamudi-answers-20-03-2011

 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: