RSS

Monthly Archives: April 2011

இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் – ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., கட்சிக்குப் போதிய இடங்கள் ஒதுக்காமல் அவமானப்படுத்தியதால் அ.தி.மு.க.,கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. அதிரடியாக விலகி எந்தஅணியிலும் சேராமல், தேர்தலையும் புறக்கணித்தது.
ம.தி.மு.க.,வின் இந்த முடிவு, தி.மு.க.,வுக்கு சாதகமானது என்று சொல்லப்பட்டாலும் தேர்தல் முடியும் வரை, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சட்டசபைத் தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கும் என வைகோ அறிவித்தவுடன், ம.தி.மு.க தொண்டர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். எனினும், வைகோவின் முடிவிற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்ததும், அந்த அதிருப்திகள் குறைந்துள்ளன. Read the rest of this entry »

Advertisements
 

“ரேஷன் கடைகளைவிட மதுக் கடைகள்தான் அதிகம்”! அமீர் ஆவேசம்

சென்னை: ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம் என்று பத்திரிக்கை நிரூபர்களுக்கு இயக்குனர் அமீர் ஆவேசத்துடன் பேட்டியளித்தார். தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிப்பதாகவும் கூறினார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகாவும் இன்றைக்கு எங்கே போனார்கள்? காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம்.

இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன். வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன.

அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!” என்று ஆவேசத்துடன் பேசினார் இயக்குனர் அமீர்.

Source : http://www.inneram.com/2011042315827/arrack-shops-more-than-ration-shops-in-tamil-nadu-says-amir

 

Tags: ,

ஜெயலலிதாவைத் தாக்கிப் பேசாதது ஏன்? – நடிகர் வடிவேலு விளக்கம்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி  மு க கூட்டணிக்கு ஆதரவாக கடும் பிரச்சாரம் செய்த நகைச்சுவைப் புயல் நடிகர் வடிவேலு விஜயகாந்தைத் தாக்கிப்பேசிய அளவுக்கு அதிமுக-வையோ அதன் தலைவி ஜெயலலிதாவையோ தாக்கிப் பேசவில்லை.
இது பற்றி அவரிடம் கேட்டதற்கு,

“தேர்தல் பிரசாரத்தில் எனது பேச்சை கேட்க பெரும் கூட்டம் கூடியது. மக்கள் அளித்த வரவேற்பு இனிமையான அனுபவமாக இருந்தது. அது என்னை உற்சாகப்படுத்தவும் செய்தது. அதிமுக-வுக்குச் சாதகமாக வரும் கருத்துக் கணிப்புகளை நான் பொருட்படுத்தவில்லை. தேர்தலில் உறுதியாக திமுக அமோக வெற்றி பெறும். கலைஞர் மீண்டும் முதல்வர் ஆவார். எனது தேர்தல் பிரசாரம் கலைஞருக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

கூட்டங்களில் ஜெயலலிதாவைத் தாக்கி பேசவில்லையே என்று கேட்கிறார்கள். திமுக அரசின் திட்டங்கள் பற்றி பிரச்சாரத்தில் பேசினாலே போதும் என முதல்வரும், துணை முதல்வரும் என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது பேச்சும் அதை ஒட்டியே இருந்தது. விஜயகாந்தைக் கடுமையாக தாக்கிப் பேசுவதற்குச் சில காரணங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்.

 

Tags: ,

மனைவிக்கும் துணைவிக்குமுள்ள வித்தியாசம் என்ன?

திராவிடருக்கும் தமிழருக்கும் என்ன வேறுபாடு? பார்ப்பனருக்கும் அந்தணருக்கும் என்ன வேறுபாடு? – முனி, காளையார்கோவில்.

இந்தியனுக்கும் தமிழனுக்கும் வேறுபாடு உண்டா?

திராவிடரில் தமிழரும் அடங்குவர்.  மனித இனத்தில்  நான் ஆண் என்பது போல…

பார்ப்பனர் ஒரு சாதி.. பார்ப்பனர் தம்மை அந்தணர் எனக்கூறிக்கொண்டாலும் அனைவரும் அப்படியல்லர்.

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்” எனும் குறளுக்கேற்ப.. அவர்களுள் ஒரு சில அந்தணர் இருக்கலாம். Read the rest of this entry »

 

Tags: ,

ரஜினிகாந்த் இரண்டு தவறுகள் செய்தார் – எஸ்.வி.சேகர் பாய்ச்சல்

இந்தத்  தேர்தலின் போது நடிகர் ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் என்று காங்கிரஸ் கட்சியிலுள்ள நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். முதலாவது அனைவரையும் வைத்துக் கொண்டு வாக்குபதிவு செய்தது. அடுத்தது, வாக்குபதிவு செய்தவுடன் மாற்றம் தேவை என மக்கள் மத்தியில் முடிவு எடுத்ததாக கருத்து தெரிவித்தது. Read the rest of this entry »
 

Tags: ,

இனிப்பும் கசப்பும் – பகுதி 2

சென்ற பதிவில் சர்க்கரை நோயின் வகைகள் மற்றும் அந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்று பார்த்தோம். இந்த பகுதியில் இந்த நோய் ஏற்பட்டிருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் மற்றும் எவ்வகையான நோய்கள் இதன் மூலம் ஏற்படுகிறது என்பதைக் காணலாம்.

குறிப்பு:
கீழ்க் காணும்வற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் அச்சப் பட்டுவிடாதீர்கள். அது தற்காலிகமான ஒன்றாகக் கூட இருக்கலாம். அவை தொடர்ந்து இருந்தால் அருகிலுள்ள மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று குறுதிச் சோதனை செய்து கொள்ளலாம். Read the rest of this entry »
 

Tags: ,

பின்னணி பாடகி சித்ரா மகள் நீரில் முழ்கி மரணம்!

பிரபல பின்னணி பாடகியான கே.எஸ். சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி  மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் சின்னக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா. நீண்ட நாள்கள்  குழந்தை இல்லாத இவருக்குப் பதினைந்து வருடங்களுக்குப் பின் நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது. Read the rest of this entry »

 

Tags: