RSS

விஜயகாந்த் குடிகாரர் அல்ல! – வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை

06 Apr
ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தனது பிரச்சாரத்தின் போது சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சக நடிகர் வடிவேலு தேர்தல் பிரசாரத்திற்கு செல்லுமிடங்களில் எல்லாம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக கிண்டலடித்துப் பேசி வருகிறார். அண்ணன் விஜயகாந்தின் குரல் எப்போதும் மெதுவாகத்தான் இருக்கும். மாதம் முழுதும் வெளியில் அலைந்து திரிந்து மைக் பிடித்து பேசுவதால் போதையில் பேசுவது போலத் தெரியும். என்னுடைய குரலும் அப்படித்தான் இருக்கும். தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரால் ஏற்பட்ட பிரச்சினையைப் பேசி தீர்க்காமல் அதை இப்போது நடிகர் வடிவேல் அரசியல் மூலம் பழி வாங்குகிறார்.

வடிவேலுவிடம் இருவருடங்களுக்கு முன்பு இதுபற்றிபேசி இருக்கிறேன். நடிகர்கள் ஒரு தெருவில் வாழ்பவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு பலியாகி விடக் கூடாது. தேர்தல் இன்னும் சிலநாட்களில் முடிந்து விடும். அதன் பின்னர் நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலை வரும். அண்ணன் விஜயகாந்த் குடியரசு தலைவரால் சிறந்த குடிமகன் விருது வாங்கி உள்ளார்.

இதுவரை 32 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர்.என்னைப் போன்ற பலரையும் அறிமுகம் செய்தவர். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலம் பொற்காலம். கடனில் மூழ்கியிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை மீட்டவர். ஒரு கலைஞனை சக கலைஞனான வடிவேலு கீழ்தரமாக விமர்சித்து பேசுவது வேதனை தருகிறது.

அரசியல் கட்சிகள் நடிகர்களை பயன்படுத்தி விட்டு துடைத்து போட்ட கல்லைப் போன்று தூக்கி எரிந்து விடுவார்கள்.விஜயகாந்த் மீதான காழ்ப்புணர்ச்சியை வடிவேலு கைவிட வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்காக வடிவேலு ராமேசுவரத்தில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சி பூர்வமாக பேசினார். ஆனால் இப்போது நான் போட்டியிடும் ஆலந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க உதவிய காங்கிரசை ஆதரித்து பேசுகிறார். அப்படியானால் ஈழத் தமிழர்களுக்காக வடிவேலு அன்று வடித்தது நீலிக் கண்ணீரா?

நடிகர் விஜயகாந்தை 20 வருடங்களாக எனக்கு தெரியும். 18 படங்களில் அவருடன் நடித்து உள்ளேன். அவர் மது அருந்துவது இல்லை என்று தெரிவித்தார்.

Source : http://www.inneram.com/2011040515242/vijayakanth-never-drunken

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: