RSS

ஒட்டு போடலாமா! வேண்டாமா!

08 Apr

ஒட்டு போடலாமா! வேண்டாமா !

தேர்தல் வந்துவிட்டது . அடுத்த தேர்தல் எப்பொழுது வரும் ! ஐந்து வருடம் கழித்து வரவேண்டியது  ஆனால் அதற்கு முன்பு வரவும் வாய்ப்பு உண்டு . இந்த தேர்தலுக்கு யாருக்கு ஒட்டு போடுவது? தமிழ் நாட்டினை சில காலங்களாக தி.மு .க. அல்லது அ.தி.மு .க ஆட்சி செய்கின்றது . இவர்களில் யார் தகுதியானவர்கள் ? இரண்டுமே சரியில்லை பின் நாம் ஏன் ஒட்டு போட வேண்டும்! இவர்களால் நமக்கு என்ன நன்மை கிடைத்தது ! இப்படி அதிகமாக சிந்திப்பவர்கள் நடுத்தர வருமானம் உள்ளவர்களும் , படித்தவர்களும் சிலர் இருப்பார்கள். அவர்கள் தன்னை பற்றி சித்திக்காமல் மற்றவர்களுக்காவது நன்மை விளைந்ததா! என நினைத்தால் நல்லது .

ஒரு கட்சி சார்புடையோர் அந்த கட்சிக்கு ஒட்டு போட அவசியம் செல்வர் . இனம் ,மதம், ஜாதி அடிப்படையில் அவர்களை சார்ந்தோர் அந்த தொகுதியில் நின்றால் ஒட்டு போட்டுவிடுவார்கள். ஆக தேர்வு செய்யப்படுபவர்  தகுதி நிமித்தமாக அதிகமாக வர வாய்ப்பில்லை என்று ஒட்டு போடாமல் இருப்பது முறையாகிவிடாது .

ஒரு நிகழ்வினை பார்த்தவரை சாட்சி சொல்ல அழைக்கப்பட்டால் அவர்  சாட்சி சொல்ல போகாமல் இருப்பது பொய் சாட்சி சொன்னவராகவே கருதப்  பட  வேண்டும். உங்கள் பையனில் யார் நல்லவன்? அதோ அந்த கூரையில் கொல்லி வைப்பவன் ஓரளவு நல்லவன்  என்ற பட்டம் கொடுப்பதுபோல உங்கள் மனதில் எண்ணி இந்த கட்சி அந்த கட்சிக்கு ஓரளவுக்காவது நல்லது என்று நினைத்து உங்கள் வாக்குச் சீட்டினை போட்டு உங்கள் உரிமையினை பதிவு செய்யுங்கள்.

ஒட்டு போடலாமா! வேண்டாமா ! என்ற எண்ணம் மட்டும் வர வேண்டாம் . நல்லது நடக்கும் என்று எண்ணுவோம் .வாய்மையே வெல்லும்.

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: