RSS

பின்னணி பாடகி சித்ரா மகள் நீரில் முழ்கி மரணம்!

14 Apr

பிரபல பின்னணி பாடகியான கே.எஸ். சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி  மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் சின்னக்குயில் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் பிரபல பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா. நீண்ட நாள்கள்  குழந்தை இல்லாத இவருக்குப் பதினைந்து வருடங்களுக்குப் பின் நந்தனா என்ற பெண் குழந்தை பிறந்தது.

எட்டு வயது நிரம்பிய தனது மகள் நந்தனாவுடன் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் முகமாக பாடகி கே.எஸ். சித்ரா தனது குழுவினருடன் துபாய் சென்றிருந்தார். அங்கு ஒரு விடுதியில் அமைந்திருந்த நீச்சல் குளத்தில் நந்தனா தவறி விழுந்தார். நீச்சல் குளத்திலிருந்து மீட்கப்பட்ட நந்தனாவை உடனடியாக ஜபல் அலி என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை என்று துபாயிலிருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார் என்பதும், ஆறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source : http://www.inneram.com/2011041415536/singer-chitra-daughter-died

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: