RSS

மனைவிக்கும் துணைவிக்குமுள்ள வித்தியாசம் என்ன?

17 Apr

திராவிடருக்கும் தமிழருக்கும் என்ன வேறுபாடு? பார்ப்பனருக்கும் அந்தணருக்கும் என்ன வேறுபாடு? – முனி, காளையார்கோவில்.

இந்தியனுக்கும் தமிழனுக்கும் வேறுபாடு உண்டா?

திராவிடரில் தமிழரும் அடங்குவர்.  மனித இனத்தில்  நான் ஆண் என்பது போல…

பார்ப்பனர் ஒரு சாதி.. பார்ப்பனர் தம்மை அந்தணர் எனக்கூறிக்கொண்டாலும் அனைவரும் அப்படியல்லர்.

“அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான்” எனும் குறளுக்கேற்ப.. அவர்களுள் ஒரு சில அந்தணர் இருக்கலாம்.


உலகிலேயே மிகவும் தொன்மையான இனம், மொழி எவை? – மணி, கோபிச்செட்டிபாளையம்.

மனித இனத்தில் தொன்மையானவன் ஆப்பிரிக்காவில் தோன்றியவன் எனச் சில ஆய்வுகள் சொல்கின்றன. அவர்கள் பேசிய மொழி எதுவெனத் தெரியவில்லை.


தேர்தல் முடிவுக்குப் பிறகு கருத்துக் கணிப்புக்களின் கதி, லட்சணம் பற்றி ஒரு கருத்து கணிப்பு … சாரி… ஒரு ஆய்வு inneram நடத்தினால் என்ன? – நடேசன், பாபநாசம்.

நல்ல யோசனை! தள நிர்வாகிக்கும் ஆசிரியருக்கும் பரிந்துரைக்கிறேன்.


சமீபகாலமாக அடிக்கடி நிகழும் பூகம்பங்களால் நாம் பெறக்கூடிய படிப்பினை என்ன?- குமார் பாண்டியன். மானாமதுரை.

பூகம்பம் மட்டுமில்லை; புயல், பெருமழை, வெள்ளப் பெருக்கு , சுனாமி போன்ற எதுவானாலும் சரி, அறிவியல் நுணுக்கங்களுடன் எத்தனை முன்னேற்பாடுகளைச் செய்தாலும் இயற்கைச் சீற்றத்த்துடன் நாம் போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற பாடம்.


மன அழுத்தம், நெஞ்சழுத்தம் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? – ரகு, சென்னை.

மொழி அடிப்படையில் இரண்டும் ஒரே பொருள் தருவனவே! நமது பயன்பாட்டில் பொருள் வேறுபாடுகள் உள!

‘ஸ்ட்ரெஸ்’ எனும் ஆங்கிலச் சொல்லை விளக்க  ‘மன அழுத்தம்’ எனச் சொல்கிறோம்.

தைரியம், பிடிவாதம், ரகசியங்களையோ உள்ளத்துள்ளதையோ  வெளியில் கசிய விடாமை போன்ற குணங்களை விளக்க ‘நெஞ்சழுத்தம்’ என்பதைப் பயன்படுத்துகிறோம்.

“ஆளானாலும் ஆளு – இவ

அழுத்தமான ஆளு

மிச்ச வெவரம் வேணுமின்னா

மச்சானெப் போயீ கேளு கேளு..”

என்றது இந்தவகை நெஞ்சழுத்தத்தைத்தான்.


அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பவன் அறிவிலி என்றார் ஒரு அறிஞர். வணங்காமுடிக்கு இந்தக் கருத்தில் உடன்பாடா? – இப்தியாஸ், கத்தர்.இல்லை!

ஓர்  அறிவிலியால்  அனைத்து வினாக்களுக்கும் எப்படி விடையளிக்க முடியும்?

2G அலைக்கற்றை முறைகேடுகளால் ஏழைகளுக்கு என்னசார் நஷ்டம்? – முருகன் -தச்சநல்லூர்.

இந்தியாவின் கருவூலத்துக்கு வர வேண்டிய செல்வம் பண முதலைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சென்றதால் இந்தியக் குடிமகனுக்கு மறைமுகமாக இழப்பு ஏற்படவில்லையா? ஏழைகளும் இந்தியக் குடிமக்களில்லையா?.


மனைவிக்கும் துணைவிக்கும் என்ன வித்தியாசம்?  – ராஜா முஹம்மத், துபை.

இரண்டும் ஒரு பொருளையே தருவனவாம். வாழ்க்கைத் துணைவி என்பவளே மனைவி.

வள்ளுவரும் வாழ்க்கைத் துணை நலம் என்றே கூறுகிறார்.

மனைவி, துணைவி எனும் சொற்களில் பொருள் வேறுபாடு காண்போர் தம் அனுபவத்தின் அடிப்படையில் அப்படிக் காண்பராயிருப்பர்.

இந்தியாவில் இந்துக்களுக்கு பலதார மணம் புரிவது தடை செய்யப்பட்டிருந்தாலும் பல விஐபிக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் முடித்திருக்கிறார்கள். இதில் முதல் திருமணம் புரிந்தவர்களை மனைவி என்றும் மற்றவர்களைத் துணைவி என்றும் போடுகிறார்கள்.


எதற்கெடுத்தாலும் கூகுள் இணைய தளத்தில் தகவல்களைத் தேடும் தற்போதைய இளைஞர்கள் பற்றி? – அருள், வேளாங்கன்னி.

அறிவியல் முன்னேற்றத்தை அற்புதமாகப் பயன்படுத்துகின்றனர்.


ஸ்காட்லாண்டு யார்டு காவல்துறையோடு தமிழக காவல் துறையை ஒப்பிடுவது சரியா? – ராஜா, ராமநாதபுரம்.

அப்படி ஒரு காலம் இருந்தது உண்மைதான்.

இண்டர்போலின் துணைத்தலைவர் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியன் எனும் பெருமையைப் பெற்ற, நாஞ்சில்நாட்டுக்காரரான எஃப் வி அருள் (Frederic Victor AruL) காவல்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டுக் காவல்துறை ஸ்காட்லாண்ட் யார்ட் காவல்துறைக்கு நிகராகப் பேசப்பட்டது.

அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் அருளை நினைவு கூர்வது அந்தச் சாதனைக்குத்தான்.

காவல்துறை அரசியல்வாதிகளின் அடிமையாகிப்போன — தேர்தல் கமிஷன் காவல்துறை அதிகாரிகளைப் பந்தாடும் — இக்காலத்தில் அப்படி ஒப்பிடுவது சிறந்த நகைச்சுவையாகும். யார் அப்படி ஒப்பிடுகிறார்கள்?


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

Source : http://www.inneram.com/2011041715610/vanagamudi-answers-17-04-2011

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: