RSS

இனி யாருக்கும் பல்லக்கு தூக்கமாட்டோம் – ம.தி.மு.க அதிரடி அறிவிப்பு

26 Apr

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., கட்சிக்குப் போதிய இடங்கள் ஒதுக்காமல் அவமானப்படுத்தியதால் அ.தி.மு.க.,கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. அதிரடியாக விலகி எந்தஅணியிலும் சேராமல், தேர்தலையும் புறக்கணித்தது.
ம.தி.மு.க.,வின் இந்த முடிவு, தி.மு.க.,வுக்கு சாதகமானது என்று சொல்லப்பட்டாலும் தேர்தல் முடியும் வரை, ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சட்டசபைத் தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கும் என வைகோ அறிவித்தவுடன், ம.தி.மு.க தொண்டர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். எனினும், வைகோவின் முடிவிற்கு பெருமளவில் வரவேற்பு கிடைத்ததும், அந்த அதிருப்திகள் குறைந்துள்ளன.

அரசியல் சார்பில்லாதவர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் வைகோவின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இதனால், ம.தி.மு.க.,வில் உண்மையிலேயே மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்குப்பின், ம.தி.மு.கவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து ம.தி.மு.க., வட்டாரத்தில் பேசிய வகையில் “கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ம.தி.மு.க., எப்போதும் உறுதியாக இருந்தது. 2004 இல் பா.ஜ.க கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றபோதும் நாங்கள் பா.ஜ.க வை ஆதரித்தோம். நாங்களிருந்த அணியில் தி.மு.கவும் இணைந்தது. நாங்களாக வலிந்துபோய் தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் ம.தி.மு.க.,வை தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் கறிவேப்பிலைபோல் பயன்படுத்தின.

எல்லா தேர்தலிலும் மதிமுகவுக்கென தனி ஓட்டு வங்கி உள்ளது. இனிமேல் எங்கள் ஓட்டு வங்கியை அந்த இரு கட்சிகளும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கென தனிப்பாதை வகுத்து, அதில் பயணம் செய்வோம். வரும் தேர்தல்களில் தனித்து செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம். இரு கட்சிகளையும் தோளில் தூக்கிச் செல்பவர்களாக இனி ம.தி.மு.க.,வினர் இருக்க மாட்டார்கள். எங்களது நிலைக்கு தமிழ் மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது என்பதை தேர்தல் முடிந்த பின்னர் நிரூபிப்போம்” என்று ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

Source : http://www.inneram.com/2011042515890/not-support-to-anybody-says-mdmk

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: