RSS

Monthly Archives: May 2011

வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!

ருமை நண்பர்களே!!!
முன்னாள் முதல்வர் கருணாநிதி முன்னின்று கட்டிய காரணித்தினாலேயே இன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா  தனிப்பட்ட கோபம் ,விரோதம் பூண்டு அவரின் இடது கையால் புறக்கணிக்கப்படும்  இந்த சட்டசபைக் கட்டிடம்,  எத்தனை ஆயிரம் ? தொழிலாலர்களின், பொறியாளர்களின், கட்டிடக் கலைஞர்களின், உழைப்பை, வியர்வையை, தொழில்நுட்ப அறிவை, திட்டமிடுதலை, கட்டிட வடிவமைப்பாற்றலை, உலகத்தரமான கட்டிட விதிகளை , சிறப்பம்சங்களை,  தன்னுள் வாங்கி இறுதியாக இவ்வடிவத்தை பெற்றிருக்கிறது  என்று தெரியுமா?!!!

1200 கோடிகள் செலவழித்து இந்த நவீன சட்ட சபையை கட்டிவிட்டு அதைப் பயன்படுத்த வில்லை என்றால் யாருக்கு நட்டம்?!!! மக்களுடைய வரி பணம் தானே விழலுக்கு இறைத்த நீராகும்?!!!. கருணாநிதி ஜெயலலிதாவுக்கு  பரம விரோதி தான், ஆனால் அந்த கட்டிடம் கருணாநிதியின் பணத்தில் கட்டவில்லையே ?!!!, ஜெயலலிதா பெருந்தன்மையுடன் தன் பிடிவாதத்தை துறந்து சட்டசபையின் கூட்ட தொடரை   புதிய சட்டமன்றத்தில் கூட்ட வேண்டும் என்பதே, உழைக்கும் வர்க்கத்தின் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் வர்க்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.

மேலும் படிக்கஇங்கு க்ளிக் செய்யுங்கள்: நன்றி :-வீம்புகென்றே வீணாக்கப்படும் மக்கள் வரிப்பணம்!!!.

Advertisements
 

லிபியா சொல்லும் சேதி!

நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!

இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்! சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை மட்டம் தட்டி வைப்பதை அந்த இளைஞனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இராணுவ வேலைக்குப் போனான். போனவுடன் தலைமைப் பதவியா கொடுப்பார்கள்? மூன்றாம் நிலைதான். அடுத்தவர்கள் தனது தலைவிதியை நிர்ணயிப்பதை அந்த “”இளம் ரத்தம்” ஏற்றுக் கொள்ளவில்லை. தனது 27 வயதில் தானே தன் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்க ஆரம்பித்தான்.

அனைவரிடம் பேசினான்! மன வலிமையையும் புத்திக் கூர்மையையும் பிரயோகித்து இரத்தம் சிந்தாமல் ஒரு தேசத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
அறிவித்த நாள் செப்டம்பர் 01,1969,
அந்த தேசத்தின் பெயர்: லிபியா,
அந்த மாவீரனின் பெயர் : முஅம்மார் கடாஃபி.

மரியாதைக்குரிய கடாஃபி அவர்களின் வரலாற்றை நான் எழுதவில்லை. நிறைகளும், சாதனைகளும், வீரமும் மிகுந்த அந்த மனிதனிடம், குறைகளும், பிழைகளும் இருந்தன. அதனால்தான் அவர் சறுக்கிக் கொண்டிருந்தார். இன்று மார்ச் 01-2011 கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில், விளிம்பில் நிற்கிறார் அந்த மாவீரர். “மாவோ’வை வாசித்த இந்த மனிதர் ஏன் “உமரை’ மறந்தார்? இதுதான் எனது சந்தேகம்! என்ன செய்வது? பிழை செய்தால் விலை கொடுப்பது என்பதுதானே வரலாறு. Read the rest of this entry »

 

Tags: ,

சமச்சீர்கல்வி – என் பாடலை நீக்கலாம் : கருணாநிதி!

சமச்சீர் கல்வியின் பாட நூல்களில் இடம்பெற்றுள்ள எனது பாடலை நீக்கிவிட்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வரப்படும் என்று அறிவித்ததற்கு இணங்க 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச் சட்டம் இயற்றப்பட்டது. Read the rest of this entry »

 

Tags: ,

எந்த முதலீடு ஏற்றது?

எந்த முதலீடு ஏற்றது ?

நிலமா !

ஷேரா !

தங்கமா !

நிலம் வாங்க விற்க என்று தொழில் செய்பவர் சொல்வது நிலமே சிறந்த  முதலீடு என்பதாகும்.இதில் நன்மையும் ( உண்மையும் ) உண்டு .விலை எற்றம் காணலாம் .பெரிய பாதுகாப்பு தேவையில்லை. இடம் வாங்கும் பொழுது கவனம் தேவை. இது அனைத்துக்கும் பொருந்தும். Read the rest of this entry »

 

Tags:

கனிமொழிழைச் சந்திக்கும்போது கண்ணீர் விட்டழுத கருணாநிதி!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை திங்கள் கிழமையன்று டெல்லி திகார் சிலையில் சந்தித்த போது, அவருடைய தந்தையும் திமுக தலைவருமான கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார் என கனிமொழி கூறியுள்ளார்.

திகார் சிறையில் இருக்கும் கனிமொழி என்டிடிவிக்கு செவ்வாய்க் கிழமையன்று அளித்த நேர்காணலில், அப்பாவும் நானும் சந்தித்த போது நாங்கள் இருவருமே அழுதோம் என்று கூறினார். என்னுடைய தந்தை மிகவும் கோபமுற்றிருந்தார். இந்த வயதிலும் இப்படிப்பட்ட பிரச்சனைகளை அவர் சந்திக்க நேர்ந்தது மிகவும் துயரமான ஒன்று என்றும் கனிமொழி கூறியுள்ளார்.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தபோது கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழியைச் சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்த கருணாநிதி இன்று மாலை சென்னை திரும்பினார்.

Source : http://www.inneram.com/

 

Tags: ,

மஞ்சள் துண்டு துறந்து வெள்ளை துண்டு அணிந்து கலைஞர் கனிமொழியை காணல்

திங்கள் கிழமை மாலை தன்னுடைய துணைவியார் ராஜாத்தி அம்மாள் மற்றும் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோருடன் கருணாநிதி திகார் சிறைச்சாலைக்கு வந்தார். அப்போது கனிமொழியின் கணவர் அரவிந்தனும் உடன் இருந்தார்.

மகள் கனிமொழியுடன் உரையாடிய கருணாநிதி, பின்னர் மத்திய தொலைத் தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மற்றும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரையும் சந்தித்தார்.
வழக்கமாக மஞ்சள் துண்டு அணிந்து வரும் கலைஞர் கருணாநிதி மஞ்சளைத் துறந்து வெள்ளைக்கு மாறியிருந்தார்.

செய்தி source

 

திமுக தோல்வியை முன்கூட்டியே கணித்த தயாநிதி மாறன் – விக்கிலீக்ஸ்

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்வி அடையும் என்பதை மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரணுமான தயாநிதி மாறன் கணித்துள்ளதையும்,அவர் அமெரிக்க தூதருடன் நடத்திய தகவல் பறிமாற்ற விபரத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2G வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சிக்குவர் என்பதையும் முன்கூட்டியே கணித்துள்ளதாகவும் விக்கிலீக்ஸிடமிருந்து பெற்ற தகவலை ஹிந்து நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. திமுகமீது படிந்துள்ள ஊழல் கறையை அகற்றாவிட்டால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் மாறன் தெரிவித்துள்ளார். அமைச்சர் தயாநிதி மாறன் கூறியதாக, அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அந்நாட்டின் தூதரக அதிகாரி டேவிட் ஹூப்பர் தகவல் அளித்துள்ளதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதிகாரத்துக்கு வருபவர்கள் பணம் சேர்ப்பதிலேயே குறியாக உள்ளனரென தயாநிதி மாறன்,டேவிட் ஹூப்பரிடம் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்த தகவல் திமுக மற்றும் கருணாநிதி குடும்பத்தாரிடையே புதியமோதலை உருவாக்கும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

Source : http://www.inneram.com

 

Tags: