RSS

சசிகலா தமிழகத்தின் முதல்வராக வாய்ப்புள்ளதா?

02 May

கூட்டு சதி என்ற சி பி ஐ யின் வாதம் கனிமொழியின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் முயற்சியா? – தேவா, கடலூர்.

எந்த வழக்கும் அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைப்பதில்லை. வழக்குகள் வர வர அவர்களின் அரசியல் வாழ்க்கை உறுதிப் படும். சான்றுக்கு ஜெயலலிதாவைக் கூறலாம்.


நடமாடிக் கொண்டிருந்த சாமி செத்துடுச்சே, இனிமே இன்னொரு சாமி வருமா? – ப.கோ. வசீகரன்.

இந்தியாவில் நடமாடிக் கொண்டிருந்தவர் ஒரே ஒரு சாமி மட்டும் அல்லரே? நூற்றுக் கணக்கில் இருக்கின்றார்கள். விளம்பர வெளிச்சமும் புகழும் கொண்டோரும் பலர் இருக்கின்றனர். அதனால் ”இனிமே இன்னொரு சாமி வருமா?” என்ற கவலை வேண்டாம்.


சசிகலா தமிழகத்தின் முதல்வராக வாய்ப்புள்ளதா? – கண்ணன், ஆரல்வாய்மொழி.

இந்தியாவில் யாரும் எந்த மாநிலத்துக்கும் முதல்வராகலாம். அந்த மாநிலத்தின் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருக்க  வேண்டும் என்பதே விதி. சசிகலா  ச ம உ ஆகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், அவர் சார்ந்த கட்சி, பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெற்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள்  அவரைத் தேர்ந்தெடுத்தால் சசிகலா முதல்வராவதில் என்ன தடை? பன்னீர் செல்வம் முதல்வரானதை எல்லோருமே மறந்து விடுகிறார்களே ஏன்.


குற்றப்பத்திரிக்கையிலும் தயாளு அம்மாள் பெயர் தவிர்க்கப்பட்டிருக்கிறதே? – எஸ். கோகுல், வடபழனி.

தயாளு அம்மையார் ஏறாத்தாழ, ‘கைநாட்டு’ போன்றவர்; ஆங்கிலம் அறியாதவர் என்பதும் மேஜர் பார்ட்னர் என்றாலும் நிர்வாகத்தில் தலையிடாதவர் என்பதும் சி பி ஐ அறியாததா? மேலும் கனிமொழிபோல் சபை உறுப்பினரோ கம்பெனிகளிடம் பேரம் பேசியவரோ அல்லர் என்பதாலும் குற்றப் பத்திரிக்கையில் அவர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது மூன்றாவது குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்படலாம்.


வளைகுடா நாடுகளில் நிலவும் அரசியல் குழப்பங்களைப் போல் இஸ்ரேலில் எதுவும் நடக்கக்காணோமே? – அபிதாபி ஜம்புலிங்கம் – பொன்னவராயன் கோட்டை.

இஸ்ரேல் வளைகுடா நாடு அன்று! அது  மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்று!


சாய்பாபா இறப்புக்குப் பின் இந்தியாவின் அடுத்த மிகப்பெரிய ஆன்மிக தலைவராக யாருக்கு வாய்ப்பு அதிகம்.? ரவிஷங்கருக்கா, மாதாஜி என்று அழைக்கப்படும் நிர்மளா தேவிக்கா அல்லது வேறு யாருக்காவதா..? – சுதா, மைசூர்.சாய்பாபா இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீகத் தலைவர்  என்று சொல்வதே தவறானது. இந்து மதத்தைப் பின்பற்றும் கோடிக்கணக்கானோரில் சில இலட்சம் பேர் மட்டுமே சாய்பாபாவின் பக்தர்கள். அவர்களுக்கு மட்டுமே அவர் குரு அல்லது பகவான் அல்லது சாமி. மீதி இந்துக்களுக்கோ அல்லது ஒட்டு மொத்த இந்தியாவுக்கோ சாய்பாபா ஆன்மீகத் தலைவர்  அல்லர். அது போன்றே நீங்கள் வினாவில் சுட்டியுள்ள மற்ற இருவரும். ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இவர்களுக்கு ஆதரவாளார்கள், பக்தர்கள் உள்ளனர்.


வணங்காமுடி தமிழார்வம் உடையவர் என்பது தங்களின் பதில்களில் புலப்படுகிறது.  ஆங்கில வழிக் கல்வியினால்  புதிய தலைமுறைக்குத் தமிழ் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே… இதனை எவ்வாறு மாற்றுவது? – இலக்குவனார், சென்னை.

ஆங்கிலவழிக் கல்வியினால் தமிழ் மறக்கடிக்கப் படாது. வீட்டிலும் வெளியிலும் நல்ல தமிழில் பேசினாலே போதும். மக்களின் அன்றாட உரையாடல்  புழக்கத்தில் வாழ்வதே  மொழி! இப்போது ஆங்கில வழியில் கல்லாதோரும் பள்ளிக்கே செல்லாதோரும் கூட ஆங்கிலக் கலப்பின்றித் தமிழ் பேசுவதில்லையே?

மிக அண்மையில் செவியில் விழுந்தவை:-

பாபா டெத் மெஸேஜ் கேட்டதும் ஷாக் ஆய்டுத்து.

பாபா பாடியெ தர்சனம் பண்ண திரீ ஃப்போர்  ஆர்ஸா க்யூலெ வெய்ட் பன்றோம்.

க்ரெளட் ஹெவியா இருக்கு.

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களில் பாத்திரங்கள் பேசுவதைக் குழந்தைகள்  அப்படியே புரிந்து கொள்வதால் ஆங்கிலக் கலப்பிலேயே உரையாடுகின்றனர். மொழிப் பற்றும் சமூக அக்கறையும் இருந்தால் இதைச் சீர்படுத்தலாம்.

பிறமொழிக் கலப்பின்றித் தூய தமிழில் எழுதினால் வாசகர்களுக்குப் புரிந்து கொள்ளச் சிரமம் ஏற்படும் என்பதாலேயே மக்கள் தமிழில் வணங்காமுடி விடைகள் சொல்லப்படுகின்றன என்பதை  முன்னர் ஒரு வினாவுக்கு அளித்த விடையில்  சொல்லியுள்ளேன்.


என்டோசல்ஃபேன் (endosulfan)  விஷ விவகாரத்தில் தமிழகம் எந்தக் கருத்தையும் கூறவில்லையே.. ஏன்? – முத்து, அருப்புக்கோட்டை.

உலகில் சற்றொப்ப எண்பது நாடுகள் தடை செய்துள்ள எண்டோஸல்பானின் விலை மலிவு என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் இந்தியா ஆதரிக்கிறது. அதன் தீய விளைவை அரசு கணக்கில் எடுக்கவில்லை. தமிழகத்தில் அதன் பாதிப்பு மக்கள் மன்றத்தில் வைக்கப்படவில்லை. கேரளத்தில் பல்லாண்டுகளாக அது காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வழி மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டு விழிப்புணர்வூட்டப் பட்டதால் கேரள முதல்வர் அச்சுதானந்தன் எண்டோஸல்பானைத் தடை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருக்கிறார். ஜெனீவாவில் நடைபெறும் எண்டோஸல்பான் குறித்த ஸ்டாக்ஹோம் கன்வென்ஷனில் பங்கு கொண்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இணையம் வழி நேரலையில் கண்டனர்.


“அப்பா சொன்னாரென… ” என்ற தலைப்பில் கவிதை எழுதியிருக்கும் கனிமொழி இப்போதைய மனநிலையில் இருக்கையில்  எப்படிஎல்லாம்  அதை எழுதுவார்? – மாணிக்கம், நாகர்கோவில்.

 கருணாநிதியின் மகள் கனிமொழி கலங்கமாட்டார். குழந்தைப் பருவம் முதலே அரசியல் அறிந்தவர். இப்போது எப்படி எழுதுவார் எனக் கற்பனை செய்தால்…

“அப்பா சொன்னாரென அரசியலில் நுழைந்தேன்..

அவர் சொன்னதால் 

மாநிலங்களவைக்குள்ளும்  நுழைந்தேன்.

அதிகார மையமானேன்..

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிக் கொண்டேன்.

அப்பாவைப்போல் நானும் கலங்கேன்..

சிறை செல்ல நேரினும் 

சிரித்துக் கொண்டே செல்வேன்”.


சாய்பாபா – நித்யானந்தா இருவரில் உங்களைக் கவர்ந்தவர் யார்? – கலிய பெருமாள், சென்னை

இருவருமல்லர். என்னைக் கவர்ந்த இந்து மத ஆன்மீக வாதி, நூறாண்டுகள் வாழ்ந்து மறைந்த காஞ்சி சங்கராச்சாரியாரான சந்திரசேகரேந்திர ஸரஸ்வதியே! அவர் உண்மையான துறவி. எளிமையானவர்;  வெளிப்படையானவர். பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவரைத் தரிசிக்க விரும்பியபோது, விதவையான அவருக்குத் தரிசனம் தருவது சாத்திரத்துக்கு முரணானது எனச் சொல்லி தரிசனம் மறுத்தவர்.

நித்தியானந்தா சாய்பாபாவோடு ஒப்பிடத் தகுந்தவரல்லர். சாய்பாபா மக்கள் நலப் பணிகள் நிறையச் செய்தவர். சென்னைக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்துக்குத் தமிழக முதல்வரிடம் பெரும் நிதி அளித்தவர்.


வாழ்க்கையில் மனிதன் சலிப்படைவது எப்பொழுது…? – ஃபைஸல் கான், கடலூர்.

முயற்சிகள் தோல்வியடையும்போது.


சங்கத் தமிழ் என்பது என்ன? – கேசவன், சென்னை.

தமிழ் மொழி வரலாற்றைச் சங்க காலம், சங்கம் மருவிய காலம், இடைக்காலம், தற்காலம் என ஆய்வாளர்கள் பகுத்துள்ளனர். சங்க கால இலக்கியங்களான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு போன்றவற்றில் வழங்கப்படும் தமிழும் தற்காலத்தில் நாம் உரையாடும் / எழுதும் தமிழும் மிகுந்த வேறுபாடுடையன.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே. 


(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)

வணங்காமுடிக்குக் கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.com என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.

தற்காலத் தமிழில் அரபு, உர்தூ, பார்ஸி, ஸம்ஸ்கிருதம் போன்ற மொழிச் சொற்கள் நூற்றுக் கணக்கில் கலந்து தமிழாகவே மாறிவிட்டன. சான்றுக்கு அசல், நகல், தாக்கல், நபர், வசூல், வக்கீல், அல்வா, தராசு, போன்ற அரபுச் சொற்களைக் கூறலாம். வாதி, ப்ரதிவாதி, காரணம், ஸூர்யன், சந்த்ரன், நக்ஷத்திரம், க்ரஹணம் போன்ற சொற்கள் ஸம்ஸ்க்ருதம்; ஜன்னல், மேஜை போன்றவை பார்ஸி மொழிச் சொற்கள். இவை போக ஆங்கிலக் கலப்பு வேறு! வல்லின சகரத்தைத் தற்போது மக்கள் ‘ஸ’ என ஒலித்துக் கொல்கின்றனர். இப்படி நிறைய உள்ளன. அவற்றை விரிவாகச் சொல்வதற்கு இப்பகுதி இடம் தராது.

சங்கத் தமிழ் அப்படியன்று. இப்போதுள்ளவர்களுக்கு உரையின்றிப் புரியாது. சான்றுக்கு:–

தமிழக ஊடகங்கள் இதுபோன்ற பிரச்சனைகளில் இன்னும் ஆழமாக இறங்க வேண்டும் என்பதை உணர்த்தும் வினா உங்களுடையது.!

உணவும் சுதந்திரமும் இருக்கும் நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டம் அரிதே. இஸ்ரேலில் குடிமக்களுக்கு உணவும் சுதந்திரமும் இருப்பதால் அங்கு போராட்டமில்லை. மத்திய கிழக்கில் இஸ்ரேலை அடுத்துள்ள சிரியாவில் ஐம்பது ஆண்டுகளாக அமுலில் இருக்கும் நெருக்கடி நிலையை மாற்ற  மக்கள் போராடுகின்றனர்.

வளைகுடா நாடுகள் பட்டியலில் இருக்கும் குவைத், யூ ஏ இ, கத்தர் போன்ற நாடுகளிலும் போராட்டம் இல்லை. ஒமானில் வேலை இல்லாத் திண்டாட்டத்தால் போராட்டம். வளைகுடா நாடுகளில் பஹ்ரைனில் மட்டும் ஆட்சியாளருக்கு எதிரான முணுமுணுப்பும் சல்சலப்பும் பல ஆண்டுகளாக உள்ளன. சமீபத்தில் அது பெரும் போராட்டமாக வெடித்தது. அதற்குக் காரணம் சன்னி பிரிவு மன்னருக்கு எதிராக ஷியாப் பிரிவினர் இரான் நாட்டின் ஆதரவுடன் நடத்தும் அதிகாரப் போட்டியே.

Source : http://www.inneram.com/2011050116118/vanagamudi-answers-01-05-2011

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: