RSS

என் அரசியல் வாழ்வு முடிவு பெறாது: கனிமொழி ஆவேச பேட்டி!

06 May

“எத்தனையோ பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று இருந்தாலும்கூட, என்னை மட்டுமே அனைவரும் குறிவைப்பது ஏன் என்பது புரியவில்லை? நான் வீழ்வேன் என யாராவது நினைத்தால் அது தவறு. என் அரசியல் வாழ்வு இத்துடன் முடிவு பெறும் என சிலர் நினைக்கின்றனர். அது நடக்காது” என கனிமொழி கூறினார்.

சி.பி.ஐ. கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக, ஆஜர் ஆவதற்காக டில்லி வந்துள்ள கனிமொழி, செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் எண்ணற்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏராளமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுள்ளன. ஆனால், என் பெயர் மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. நிறைய பெயர்கள் இப்பிரச்னையில் அடிபட்டாலும், அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என் ஒருத்தியை மட்டும் அனைவரும் குறிவைக்கின்றனர். இது ஏன் என்பது எனக்கு புரியவில்லை.

நான் பலமில்லாதவள், எளிதில் வீழ்ந்துவிடுவேன் என கணக்கு போடுகின்றனரா என்று தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு அவர்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. என் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நான் சட்டப்படி சந்திப்பேன். வழக்குகளை எதிர்கொள்வேன். வழக்கு விசாரணையின் முடிவில் நான் குற்றமற்றவளாக வெளியில் வருவேன். நான் சார்ந்துள்ள தி.மு.க.வும் இதைத்தான் கூறியுள்ளது.

என்னுடைய அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிவு பெற்றுவிடும் என சிலர் நினைக்கின்றனர். அது நிச்சயம் நடக்கப்போவதில்லை. எனது பிரச்னையை வைத்து தி.மு.க. – காங்கிரஸ் உறவு பாதிக்கப்படுமா, பாதிக்கப்படாதா என்பது குறித்தெல்லாம் கருத்து கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. இந்திய நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்பதிலும் உறுதியாக உள்ளேன்”. இவ்வாறு கனிமொழி கூறினார்.

http://www.inneram.com/2011050616249/my-political-life-will-not-end-kanimozhi

Advertisements
 

Tags:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: