RSS

எம்.எல்.ஏ.க்கள் அடுத்தவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் : விஜயகாந்த்!

15 May

தேசிய முற்போக்கு திராவிட கழக எம்.எல்.ஏ.க்கள், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், அடுத்தவர்களுக்கு பாடமாகவும் இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறை கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில், 29 தொகுதிகளில் வெற்றி பெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழக எம்.எல்.ஏ.க்கள், கோயம்பேட்டிலுள்ள அவர்களது கட்சி அலுவலகத்திற்கு சென்று, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது விஜயகாந்த், வெற்றி பெற்ற தனது கட்சி  எம்.எல்.ஏ.க்களுக்கு சில அறிவுறைகளை வழங்கினார்.

அப்போது அவ்ர் கூறியதாவது: இந்த மிகப்பெரிய வெற்றிக்கு கட்சியின் தொண்டர்களும், மக்களுமே காரணம். குறிப்பாக காசு வேண்டாம்; கட்சி தான் வேண்டும் என்ற குறிக்கோளுடன் தொண்டர்கள் செயல்பட்டனர். அவர்கள் சிறப்பாக தேர்தல் பணியாற்றியதை நேரடியாக நான் பார்த்தேன். பல விமர்சனத்திற்கு நான் ஆளான போதும், அவர்கள் துணை நின்றுள்ளனர். வெற்றிக்கு மூலதனமாக செயல்பட்ட அந்த தொண்டர்களுக்கு “சல்யூட்!’இந்த தேர்தலில் மதம், சாதி தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சாதி கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளனர். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை சாதி, மதம் உள்ளிட்டவைகளை கடந்து, நம் மக்களை பாதுகாக்கும் கட்சியாக செயல்படும்.தமிழகத்தில் ஊழல் மற்றும் வறுமையை ஒழிக்க கட்சி பாடுபடும். இதேபோல, கல்வி மேம்பாடு, சாலை வசதி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து பாடுபடுவோம். நம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் கட்சியின் வண்ணங்கள் அடங்கிய டவல்களை போட்டுக் கொண்டு மட்டும் இருந்து விடக்கூடாது. எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. இனிமேல் தான் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். குறிப்பாக மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும். நீங்கள் அடுத்தவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும். தொடர்ந்து தமிழக மக்களுக்காக போராடுவோம்.இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

Source : http://www.inneram.com/

Advertisements
 

Tags: ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: