RSS

சென்னையில் மாயமான சிறுமி மீட்பு!

19 May
சென்னை கடற்கரையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் மாயமான சிறுமி ஆந்திர மாநிலம் திருப்பதியில் மீட்கப்பட்டாள்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த மருந்துக் கடை உரிமையாளர் சையது நூர்அகமது என்பவரின் 5 வயது மகள் தமன்னா. கடந்த 11ஆம் தேதி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சையது நூர்முகமது மெரினா கடற்கரைக்கு சென்றார். உழைப்பாளர் சிலை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தமன்னா திடீரென மாயமானார். இதனால்  பதட்டம் அடைந்த பெற்றோர் கடற்கரை முழுவதும் தமன்னாவை தேடினர். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. தமன்னாவை கண்டு பிடிப்பதற்காக துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டன.

சென்னை மட்டுமின்றி, ஆந்திர மாநில பகுதிகளிலும் திருப்பதி கோவில் அருகிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் இருந்த போன் நம்பரை பார்த்து ராஜவேலு என்பவர் தமன்னாவின் தந்தை சையது நூர் முகமதுவிடம் பேசியுள்ளார். அப்போது அவர், “திருப்பதி கோவில் அருகே உங்கள் மகளை நான் பார்த்தேன். அவளுடன் பெண் ஒருவரும் இருந்தார்” என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை சையது நூர்முகமது காவல்துறையிடம் தெரிவித்தார். உடனடியாக தனிப்படை காவலர்கள் திருப்பதி விரைந்தனர். இதற்கிடையே சிறுமி தம்மன்னா இன்று (வியாழக் கிழமை) மதியம் சென்னை அரசு மருத்துவமனை அருகே அனாதையாக நின்று கொண்டிருந்தாள். அரசு மருத்துவமனை காவலர்கள் அவளை மீட்டனர்.

சிறுமியைக் கடத்தியவர்கள் அவளை மருத்துவமனை அருகே விட்டு சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தும் போது முழு விவரம் தெரியவரும்.

Source : http://www.inneram.com/

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: