RSS

Monthly Archives: June 2011

என்ன யோக்கியதை இருக்கிறது 2G பற்றிப் பேச!

டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையோடு சமையல் எரிவாயுவின் விலையையும் ரூ 50 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்களின் தாறுமாறான விலையேற்றத்தால் அல்லல் படும் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களுக்கு இது கண்டிப்பாக பெருஞ்சுமை என்பதை மறுப்பதற்கில்லை.
அதேசமயம், சில விஷயங்களில் யதார்த்தமென்ன என்பதையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம். அண்டைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நாட்டில் பெட்ரோல் விலை அதிகமே. ஆனால், கேஸ் உற்பத்தியில் முதல் நிலையிலுள்ள நாடுகளில்கூட சிலிண்டர் ஒன்றுக்கு கேஸ் விலை சுமார் 200 க்கு அருகில் உள்ளது. அதனடிப்படையில் பார்த்தால், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை நம் நாட்டில் குறைவு தான். காரணம், சமையல் எரிவாயுவுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ 350 வரை மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அண்டைய நாடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு  ரூ 485  முதல் ரூ 880   வரை விற்பனை செய்யப் படுவதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசும் மாநில அரசும்  தாறுமாறான வரியை விதித்து விலைவாசியை உயர்த்தி வருவதை நாம் பல நேரங்களில் விமர்சித்துள்ளோம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்துக்கு நேரடி காரணியாக இருக்கும் டீசல் மற்றும் பெட்ரோலின் விலைகளை மத்திய அரசு ஒரு கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியமே. இதற்காக, சமையல் கேஸுக்கு வழங்கும் மானியத்தில் மாற்றத்தை உருவாக்கி, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையினை இயன்றவரைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
Read the rest of this entry »
Advertisements
 

Tags: ,

எது வாழ்கை?

நாம் வாழும் இப்பூவுலகம் இயல்பாகச் சுற்றிக்கொண்டிருக்க, தன்னுடைய படைப்பில் சுயமாக எந்தப் பங்கும் இல்லாத மனிதன், இறைவன் தந்த உடல் உறுப்புகளைக் கொண்டு இயந்திரமாய் உழைக்கிறான். ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதாது என்று கருதும் அளவுக்கு நேரப் பற்றாக்குறை. வானமும், பூமியும், அண்ட கோளங்களும், கடலும், வின்மீன்களும் தனது இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க, 6-வது அறிவு கொடுக்கப்பட்ட மனிதனோ பொருளாதாரத்தில் பேராசைக் கொண்டு, தன் வாழ்வாதாரத்தை பெருக்கத்தான் பேயாய் உழைக்கிறான். நான் எனும் அகந்தையில் சிக்கி நான் பணக்காரனாக வேண்டும், நான் ஆடம்பர உடைகள் அணிய வேண்டும், நான் அடுக்கு மாடிகள் கட்டி உல்லாச வாகனங்களில் வலம் வரவேண்டும் என்று ஓடி ஆடி பணத்தைத் தேடுகிறான். அது எவ்வகையில் சம்பாதித்தாலும் சரியே!
மற்ற மனிதரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் தம்மைவிட பணக்காரர் என்று இருமாப்புக் கொண்டு பேராசையில் இன்னும் ஓடுகிறான். பணம், பணம் என்று நடைபிணமாய் அலைகிறான். மறுமையை மறந்து இம்மையை நேசிக்கிறான்! பணத்தை யாசிக்கிறான்.
செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை(அல்லாஹ்வை விட்டும்) பராமுகமாக்கிவிட்டது. நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை(102:1,2)திருமறை

படைத்தவன் இவ்வாறு கூற படைப்பினமோ தன் மனோ இச்சைக்கு இறையாகி இறைவனின் கட்டளைக்கு பாராமுகம் காட்டுகிறான். ஒரு பொய் சொன்னால் உலக ஆதாயம் கிடைக்கும் என்றால் ஓராயிரம் பொய் சொல்லத் தயாராகின்றான். நபியிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று சிலாகித்துச் சொல்லப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்கை எவ்வாறு இருந்தது?.

ஒரு முறை நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க நபித் தோழர்கள் சென்றார்கள். ஈச்சநார் கட்டிலிலிருந்து எழுந்தமர்ந்த நபி(ஸல்) அவர்களின் முதுகினில் ஈச்சநாரின் தடயங்கள் பதிந்திருந்தன. இதைக்கண்டு இதயத்தில் இரத்தம் கசிய தோழர்கள் – அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் விரும்பினால் பஞ்சு மெத்தை ஒன்றுக்கு ஏற்பாடு செய்து தருகிறோம் எனக்கூறும் போதும், “நான் ஓர் பிரயாணியைபோல (பிரயாணி இடையில் இளைப்பாற ஒரு மரத்தைத் தேர்ந்தெடுப்பது போல்) இவ்வுலகை இளைப்பாரும் இடமாகக் கருதுகிறேன்” எனக்கூறி மறுத்துவிட்டனர். Read the rest of this entry »

 

Tags:

முஸ்லிம்கள் என்ன செய்திருக்கின்றீர்கள் உலகிற்கு?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக….

 

  • நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?
  • அறிவியலில் உங்களது பங்களிப்பு என்ன?

 

இப்படிப்பட்ட சில கேள்விகளை நம்மில் பலர், முஸ்லிமல்லாத சகோதரர்கள் சிலரிடமிருந்து கேட்டிருக்கலாம்…

 

இதனை கேட்கும் போதெல்லாம் என்னுள் தோன்றக்கூடிய இரு கேள்விகள்…

 

  • இவர்கள் கண்முன்னால் எண்ணிலடங்கா சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன முஸ்லிம்களின் பங்களிப்பை பற்றி. இவர்கள் ஏன் இன்னும் அறியாமையில் இருக்கின்றனர்?
  • ஏன் ஐரோப்பியர்கள் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தனர்? ஏன் ஏறிவந்த ஏணியை எட்டி உதைத்தனர்? முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் நவீன அறிவியல் இல்லையே, இதனை ஏன் பள்ளிகளில் நம் சகோதரர்கள் படிக்க விடாமல் செய்தனர்?

 

குர்ஆன் அருளப்பட்ட காலம் தொடங்கி 1600 ஆம் ஆண்டுவரை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் அறிவியலின் பல பிரிவுகளில் சிறந்து விளங்கினர்.

Read the rest of this entry »

 

Tags: ,

குடி கெட்ட குடி….

பணிக்குப்பின் பள்ளிக்கூடம் வந்து
என்னை பாசத்துடன் அழைத்து சென்று
வேண்டிய திண்ப‌ண்ட‌ம் வாங்கித்த‌ருவாய் என‌
தேட்ட‌மாய் இருந்து உன்னைத்தேடினேன்.
மாறாக‌ நீ காத்துக்கிட‌க்கிறாய்
சாராய‌க்க‌டையின் முன் சகதியாய்!
நான் வ‌ந்து அழைத்துச்செல்வேன்
உன்னை ப‌த்திர‌மாக‌ வீடு சேர்ப்பேன் என்று.
குடித்து விட்டு இப்ப‌டி க‌விழ்ந்து கிட‌க்கிறாயே!
என் எதிர்கால‌ க‌ன‌வுக‌ளை இப்ப‌டி க‌விழ்த்துவிடாதே!
வாழ்வில் வேத‌னையும், சோத‌னையும் எவ‌ர்க்கில்லை?
குடி பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வ‌ல்ல, தொட‌க்க‌ம் என‌ அறிய‌மாட்டாயா?
அம்மாவும் உன் வ‌ருகைக்கு ஆசையுட‌ன் காத்திருப்பாள்
அல்வாவுடன் ம‌ல்லிகைப்பூவின் ந‌றும‌ண‌த்திற்காக‌ அல்ல
சேதாரமில்லாத உன் பாதுகாப்பான‌ வ‌ருகைக்காக‌
த‌ம்பியும், த‌ங்கையும் உன் கைப்பையின் திண்பண்ட‌த்திற்காக‌
குடித்து, குடித்து நீ எந்த‌ப்பிர‌ச்சினையை தீர்த்தாய்?
க‌ட‌ன் வாங்கி குடும்ப‌த்தை திண்டாட‌ வைத்த‌து தான் மிச்ச‌ம்.
எங்க‌ளுக்கு வேண்டிய‌தை வாங்கித்த‌ரும் ஆசைத்த‌ந்தையாய்
நீ என்று மாற‌ப்போகிறாய் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ந‌ல்ல‌ த‌ந்தைய‌ரைப்போல்?
வேண்டாம‌ப்பா குடித்த‌து போதும் இன்றே நிறுத்தி விடு!
நினைத்த‌தை சாதிக்க‌ உழைப்பின் ப‌க்க‌ம் திரும்பி விடு!
மாட‌ மாளிகையில் ம‌ன‌ப்புழுக்க‌த்துட‌ன் வாழ‌ வேண்டாம்
குடிசையில் குடும்ப‌த்துட‌ன் கொண்டாட்ட‌மாய் வாழ்ந்திடுவோம்.
நான் உன்னிட‌ம் ஆசைக்க‌திக‌மாக‌ என்ன‌ அப்ப‌டி வாங்கி கேட்டேன்?
நீ குடிக்கு கொடுக்கும் காசில் ந‌ம் குடும்ப‌மே சாப்பிட்டு விட‌லாம‌ல்ல‌வா?
ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளைப்போல் காரில் ப‌வ‌னி வ‌ர‌ ஆசை இருந்தும்
உன்னை நல்ல‌‌ அப்பாவாக‌ நாள் தோறும் பார்க்க‌ ம‌ட்டுமே ஆசைப்ப‌டுகிறேன். Read the rest of this entry »
 

Tags: ,

அல்பாத்திஹா (தோற்றுவாய்) – மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்

1.சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2.அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6.நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.

    இறக்கப்பட்ட வரலாறு 

    நபி (ஸல்) அவர்கள், மூமின்களின் தாயான  அவர்களிடம் பின் வருமாறு கூறினார்கள். நான் தனித்திருக்குங்கால், மறைவிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்கிறேன். அதனால் எனக்கு இதயத்திடுக்கம் ஏற்படுகிறது.  இதைக் கேட்டு விட்டு கதீஜா(ரலி), “நாங்கள் அபூபக்கர்(ரலி)அவர்களை அழைத்துக்கொண்டு வரகா நவ்பலிடம்பின் சென்று இச்சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் வரகா என்பவரிடம் விஷயத்தைக் கூறினார்கள். இதைக்கேட்ட வரகாபின் நவ்பல் என்பவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி “தங்களுக்கு மறைவிலிருந்து சப்தம் வரும்பொழுது  முஹம்மதே! முஹம்மதே! என்று கூவிஅழைக்கப் பட்டால், தாங்கள் அப்படியே நின்று அவரின் வார்த்தையைக் கேளுங்கள்” எனச்சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அப்படியே செய்தார்கள். சப்தம் வந்த பொழுது “இதோ ஆஜாராக இருக்கிறேன் என கூறினார்கள். அப்பொழுது அசரீரி சொல்லுக! பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறி இந்த பாத்திஹா சூராவை முழுதும் ஓதிக் காண்பித்தது அப்பொழுதுதான் இந்த ஸூரா இறங்கியது. மேற்கண்ட வரகா தான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது தாங்கள் தாம் நபியென்று ஆறுதல் கூறி அனுப்பியவர்.

ஒரு அடிமை சர்வபுகழும் அல்லாஹ்வுக்கே என மனதாரக்கூறும் பட்சத்தில் ஆண்டவன் ஒருவனே என்றும் அவனே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அவன் உள்ளமையும் அவனது இலட்சனங்களும் அழிவற்றவை என்றும்  உறுதி கொண்டவனாக ஆகின்றான். இத்தன்மைகளை கொண்டவனே புகழுக்கு உரியவனாக இருக்க முடியும். Read the rest of this entry »

 

Tags: , ,

தேர்தலில் திமுக தோற்றதற்கு மாணவர்களே காரணம் – பரிதி இளம்வழுதி

“கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வியடைய மாணவர்களே காரணம்” என திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி கூறியுள்ளார். நாகை அபிராமி அம்மன் கோவில் அருகே நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு பேசும்போது, “கடந்த தேர்தலில் புதிதாக ஓட்டு போட்டவர்கள் விளையாட்டுத் தனமாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஓட்டு போட்டதாக சொல்லப்படுகிறது. புதிய வாக்காளர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வேண்டுமானால் திமுக தோற்றிருக்கலாம். ஆனால் திமுக-வின் கொள்கை, கோட்பாடுகள் என்றைக்குமே தோற்பதில்லை. பொதுவாக தேர்தலில் தோற்றவர்களுக்கே அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அத்தேர்தல் அதிர்ச்சியைத் தந்துள்ளது என்பதே உண்மை. காரணம் அவர்கள் எதிர்பார்க்காத வெற்றி கிடைத்ததுதான். ஆட்சிமாற்றத்தை விரும்பிய மாணவர்களுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வியை நிறுத்தியதோடு மக்களுக்கு பயன்தரும் கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் ஆகிய திட்டங்களையும் நிறுத்தி விட்டார்கள். புதிதாக வாக்களித்த கல்லூரி மாணவர்களுக்கு 1991-1996, 2001-2006 வரை ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார் என்பது தெரியாது. ஒரு அரசு கொண்டுவரும் திட்டத்தை அடுத்துவரும் அரசு தொடர வேண்டும். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தைத் திமுக தலைவர் கலைஞர் நிறுத்தவில்லை. சத்துணவுடன் வாரத்திற்கு 5 முட்டைகளை வழங்கினார். 2001-2006 அதிமுக ஆட்சியில் மின்பற்றாக்குறையையும் நீக்க நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டசபை தேர்தல் முடிவு வெளியாகும்போது வழிப்பறி கொள்ளையர்கள் ஆந்திரா ஓடி விட்டார்கள் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தற்போது தமிழகத்தில தினசரி கொலை, கொள்ளை, வழிப்பறி என்றுதான் செய்தி வருகிறது” என்றார்.

Source : http://www.inneram.com

 

Tags:

சிறையில் மெழுகுவர்த்தி செய்யப் பழகும் கனிமொழி!

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான, கனிமொழி, சிறையில் ஓய்வு நேரத்தில் மெழுகுவத்தி செய்ய கற்றுக்கொள்வதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கடந்த மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்ட கனிமொழி,. திகார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் ஓய்வு நேரங்களில் புத்தகங்களை படிப்பதில் நேரத்தை கழித்து வந்த அவர் தற்போது, தன் ஓய்வு நேரங்களில், சிறையில் இருக்கும் மற்ற  பெண் கைதிகளோடு இணைந்து மெழுகுவத்தி தயாரிக்கும் முறையை கற்று வருவதாக, சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது பிணை மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட போதும், அதுகுறித்து எந்த சலனமும் இன்றி சிறையில் இயல்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். நேற்று முன்தினம், திமுக தலைவரும் கனிமொழியின் தந்தையுமான கருணாநிதியும், தாயார் ராஜாத்தியும் சிறைக்கு வந்து, கனிமொழியை சந்தித்து கண்கலங்கினர். என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source : http://www.inneram.com/

 

Tags: