RSS

Monthly Archives: July 2011

நபிகால இஸ்லாமிய ஒற்றுமை!

1. (நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ் – அவன் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.; அவன் (எவரையும்) பெறவுமில்லை: (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எவரும்; (எதுவும்) இல்லை.  அல்குர்ஆன் ;112 இஃஹ்லாஸ்-ஏகத்துவம்:1-4).

2. நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” நீங்கள் (அதிலிருந்து) பிரிந்து விடவேண்டாம். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை (நிஃமத்)களை எண்ணிப் பாருங்கள். (ஆலஇம்ரான்: 3:103)

3. இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் நான் உங்கள் மீது என் அருட் கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்மாயிதா: 5:3)

4. (மனித சமுதாயமே) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களைப் பின்பற்றாதீர்கள்: உங்களில் சிலரே நல்லுணர்வு பெறுகின்றீர்கள். (அல்அஃராஃப் 7:3)

தவ்ஹீத்வாதிகள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வோர்களின் குறுகிய கண்ணோட்டம்:
தவ்ஹீத் சிந்தனை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நாளில் தவ்ஹீதை நிலைநாட்ட, வரிந்து கொண்டு செயல்படுவோரும், தவ்ஹீதைச் சரியாக புரிந்து கொண்டுள்ளனரா? என்பது இன்றளவும் கேள்விக்குறியே? தவறாக புரிந்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டுவதாய் எவரும் தவறாய் புரிந்து கொள்ள வேண்டாம்.

தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைத் தனிமைப்படுத்தி, பீற்றிக் கொள்ளுபவர்கள் பேச்சும், நடைமுறையும் எமது கூற்றை மெய்ப்பிக்கும். இதிலிருந்து விடுபட்டோர் அரிதானவர்களாகவே இருப்பர். அதி தீவிர – தவ்ஹீத்வாதிகள் பேச்சும் நடைமுறையும் நடுநிலைத் தவ்ஹீத்வாதிகள் முகத்தைச் சுளிக்கச் செய்கிறது – என்றால், மற்றவர்கள் எதிர்க்கிறார்கள் என்று அங்கலாய்ப்பதில் அர்த்தமிருக்கிறதா? Read the rest of this entry »

Advertisements
 

Tags:

நார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்

 

கடந்த மாதத்தில் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதும் நார்வேயில் Anders Behring Breivik எனும் தனிநபரின் பயங்கரவாதத் தாக்குதலில் 92 பேர் கொல்லப்பட்டதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கன. ஆனால் இரண்டு தாக்குதல்களும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமும் அதை ஊடகங்கள் காட்சிப்படுத்திய விதமும், கொடுத்த முக்கியத்துவமும் ஊடக தர்மத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதோடு கவலைக்குரிய பல விஷயங்களை நம்முன் எழுப்பியுள்ளன.

எப்படி குண்டு வெடிப்பதற்கு முன்பே அதை வைத்தவர்களின் பெயர்களை வெளியிடும் அளவுக்கு இந்தியாவின் ஊடகங்கள் புலனாய்வுப் பத்திரிகைகளின் சூப்பர் பவராக விளங்குகின்றதோ அதுபோல் நார்வே தாக்குதலில் Anders தன் நாசத்தைத் தொடங்கி, அதை முடிக்கும் முன்னரே “இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள்” எனும் பொருளில் உலக ஊடகங்கள் தங்கள் கற்பனையைச் செய்தியாய் உமிழ்ந்தது கவலைக்குரியது. நார்வேயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைக் குறித்து ஊடகங்களின் பார்வையை வரலாற்று நிபுணரான ஷிவா பலாஹி தன்னுடைய இணைய தளத்தில் இவ்வாறு எழுதுகிறார் “Tragic Day for Norway, Shameful Day for Jounalism” (நார்வேக்கு நாச தினம்; ஊடகத்துக்கு அவமான தினம்). அவரின் கூற்று உண்மை என்பதைத்தான் நாம் தினந்தோறும் பார்க்கும் காட்சிகள் உண்மைப்படுத்துகின்றன. Read the rest of this entry »

 

Tags:

ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது.

வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.

இறை திருப்தியைப் பெற வேண்டி நோன்பு நோற்பதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித மாதத்திலே நாம் அனவரும் பயனுள்ள விசயங்கள் பலவற்றை அறிந்துக் கொண்டு அதன்படி செயலாற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ரமலான் சிந்தனைகள் என்ற இத்தொடரை ஆரம்பித்திருக்கின்றேன். இத்தொடரிலே குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையிலே ஏகத்துவ நம்பிக்கைகள்,  வணக்க வழிபாடுகள் மற்றும் குணநலன்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றி சுருக்கமாக ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு நமது நம்பிக்கைகளை, வணக்க வழிபாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முதல் கடமையான ஏகத்துவக் கலிமாவை ஏற்று உறுதி கொண்ட நாம் தொழுகை, நோன்பு மற்றும் ஜக்காத் ஆகியவற்றை நபிவழி முறையிலே எப்படி நிறைவேற்றுவது, எந்த வழியில் செய்தால் அவை இறைதிருப்திக்கு உவப்பானதாக இருக்கும்? எந்த வழியில் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இருக்காது என்பதை நாம் அறிந்து செயலாற்றுவோமாயின் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் அவன் வாக்களித்திருக்கின்ற மறுமையின் இன்பங்களைத் தந்தருள்வான்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையை எடுத்துக் கொண்டால் ஒருவனை முஸ்லிம் என்று கூறுவதற்கு மிக மிக முக்கியமானது ஏகத்துவக் கலிமாவாகும். ஒருவனை முஸ்லிமாகவோ அல்லது முஷ்ரிக்காவோ அல்லது இறை மறுப்பாளனாகவோ மாற்றுவது, நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இந்த திருக்கலிமாவின் உண்மையான பொருளை அவன் புரிந்துக் கொண்டு செயலாற்றுவதில் தான் இருக்கிறது. Read the rest of this entry »

 

Tags:

வீடு திரும்ப விடை கிடைக்குமா? கண்ணீர் (நிஜம்)கதை

அன்பு சகோதரர்களே,
1980-ஒரு சிலர் மட்டும் நமதூரில் வெளிநாட்டில் இருந்தார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களை துன்பப்படுத்துகிறார்கள் என்று ஒரு சிலர் கூற என் மனம் படபடத்தது . ஏனென்றால்  எனக்கு வெளிநாடு செல்ல விசா ரெடியாக உள்ள நேரம் , என்ன செய்வதென்று தெரியாமல் நான் குற்றாலத்தில் போய் ஒளிந்து இருந்தேன் . எனது நண்பர் ஒருவருக்கு நான் இருக்கும் இடம் தகவல் அறிய என்னை அணுகி நீ இனி வெளிநாடு போகவேண்டாம் என மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து , பின்பு வீட்டிலுள்ளவர்கள் என்னை சமாதனம் செய்து விசா வந்தாச்சு என்ன செய்வது ஒரு வருடம் முடிந்தவுடன் ஊர் வந்துவிடு என்று என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள் .

சென்னை வந்து சேர்ந்ததும் ரயில் நிலையத்தில் மக்கள் நெரிசலை கண்டேன் . மனம்  படபடத்தது. அழைத்து வந்த agent என்னை ஒன்னும் பயப்படவேண்டாம் நாம் பம்பாய்தான் போறோம் என்று சற்று புன்னகையுடன் கூற நான் மன பதட்டத்தில் அமைதியாக இருந்தேன் . இரண்டு நாள் ரயில் பயணம் கழித்து பம்பாய் வந்து சேர்ந்தேன் .ஒரு ரிக்சா வண்டியில் பயணம் செய்து ஒரு பள்ளிவாசலை அடைந்தோம் . அங்கு ஏராளமான தமிழ் பேசும் நண்பர்களை கண்டேன் .சற்று மனதுக்கு ஆறுதலாக இருந்தது .மறுநாள் காலை agent என்னை பார்க்கவேண்டும் என்றார் .

காலையில் அவசர அவசரமாக வாய் மாத்திரம் கொப்பளித்து விட்டு பேண்டை மாட்டிக்கொண்டு agent -ஐ  பார்க்க சென்றோம் .காலை 11- மணி அளவில் அவரை பார்த்தேன் . நாளை காலை உனக்கு பிளைட் என்றார் . நானும் என்னை அழைத்து வந்தவரும் வெளிய வந்து டீ சாப்பிட்டதும் போய் பிளைட் டிக்கெட்டை வாங்கிகொண்டு தங்கி இருந்த பள்ளிவாசலை அடைந்தோம் . காலையும்,மதியமும் சாப்பிடவில்லை . கண்கள் செய்வதறியாது கலங்கியதை கண்டு ஒரு வெளிஊர் நண்பர் சாப்பிட்டாயா என்று கேட்டவுடன் கண்கள் இல்லை என்று கூற , வார்த்தைகளில் ஆமாம் என்று கூறினேன். இதை புரிந்து கொண்ட நண்பர் என்னை ஹோட்டலுக்கு அழைத்து சென்று வயரும்,மனமும் நிறைய சாப்பாடு வாங்கி தந்தார் . என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் அதுவும் ஒன்று .

மறுநாள் அல்லாஹ்வின் கிருபையால் நான் சவூதி அரேபியா வந்து சேர்ந்தேன் . வந்து பார்த்ததும் அனைத்து இடங்களிலும் மணல் ,மலை தூரத்திற்கு ஒன்று மட்டும் கண்களில் தென்படும் அளவுக்கு இருந்தது சவூதி அரேபியா . நான் என்னுடைய அரபியை பார்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது . இரண்டு நாட்களும் விமான நிலையத்தில் தான் இருக்கநேரிட்டது . காரணம் என்னை அழைப்பதற்கு யாரும் வரவில்லை .இரண்டு நாள்களுக்கு சாப்பாடு நான் ஊரில் இருந்து வரும்போது என் மனைவி கொடுத்தனுப்பிய அவல் எனக்கு கை கொடுத்தது .பின்பு  ஒரு காவல்துறை அதிகாரி என்னுடைய அரபியை தொடர்பு கொண்டு அவரை வரவழைத்து என்னை அவரிடம் ஒப்படைத்தார் . Read the rest of this entry »

 

Tags: ,

நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ?

அன்பிற்குரிய சகோதர,சகோதரிகளே! என் மனதில் வேதனையாக உதித்தவற்றை தாங்கள் முன் கவலையோடு பகிர்ந்து கொள்வதற்காக சில வரிகள் இங்கே.
1. பெண்களின் அடாவடிகளும் / ஆளுமையும் தலை விரித்தாடும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
2. விளையாடும் பருவத்தில் மாப்பிளை,பெண் பேசும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
3.  மாப்பிள்ளை, பெண் பேசி முடிக்கிறோம் என்ற பெயரில் உறவுகளை உடைத்தெறியும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
4.  வரதட்சணையை மாடி வீடுகளாய் கேட்கும் ஊர் –  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
5. பெண் வீட்டில் பெருமையாக வாங்கி தின்னும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
6. பெண் வீட்டில் வாங்கியதில் குறையிருந்தால் குத்திக்காட்டும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
7. ஓசியில் அலங்கார நகைகளை வாங்கி அலங்கரித்துக்கொண்டு ஓசி சாப்பாட்டுக்கு செல்லும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
8. வாழ்வில் சிரமமெடுத்து சீர் கொடுக்கும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
9. எளிமையிலும் .பணக்காரர்களை போல் ஆடம்பரமாக வாழ நினைக்கும் ஊர்  – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
10. பந்தி என்றால் பகட்டுக்காக கடன் வாங்கி காசை கரியாக்கும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ? Read the rest of this entry »
 

Tags: , ,

சமச்சீர் கல்வி – காலதாமதம் வேண்டாம்: தா. பாண்டியன்

சமச்சீர் கல்வி திட்டத்தை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இந்தியக் கம்யூனிட்ஸ்ட் கட்சி சமச்சீர் கல்வி திட்டம் தேவை என்பதனையும் காலதாமதமின்றி நடைமுறை படுத்த வேண்டும் என்பதனையும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது.

நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர்கள் மூலம் சமச்சீர் கல்விக் கொள்கைதான் தங்களது நிலை என்று தமிழக அரசும் உறுதிப்படுத்தி உள்ளது.

தற்போது வெளியாகி உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டதோடு, இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய பள்ளிகளில் 60-நாட்கள் ஆனபிறகும் படிக்க வேண்டிய புத்தகங்கள் வழங்கப்படாது இருப்பதால், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட பாடபுத்தகங்களை 22ஆம் தேதிக்குள் வழங்கிவிடுமாறு ஆணையிட்டுள்ளது.

அதே தீர்ப்பில் பாடத்திட்டங்கள் செழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய மனுவை ஏற்று செம்மைபடுத்தலாம் அதை வருகிற ஆண்டில் பயன்படுத்திகொள்ளலாம் என தீர்ப்பளித்திருப்பது, மாணவர்-பெற்றோர்கள், கல்வியாளர்களால் வரவேற்கபடுகிறது. இந்த தீர்ப்பில் தமிழக அரசின் நடவடிக்கைகளை தடுப்பதாகவோ குறைகாண்பதாகவோ எந்த வாசகமும் இல்லாத நிலையில் மேல் முறையீடு தவிர்க்கப்படவேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம்.

இவ்வாறு தா.பாண்டியன் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source : http://www.inneram.com/

 

Tags:

பா. தாவின் நூல்களை நாட்டுடமையாக்க இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள்

நலிவுற்ற இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை பாட நூல்களில் விரிவாக இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2011 ஜுலை 8, 9, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில்  இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 

1.      இஸ்லாமிய தமிழ் இலக்கிய 15வது மாநாட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க காயல்பட்டினத்தில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழ்நாடு இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக நிர்வாகிகளுக்கு இம்மாநாடு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

2.      2011 ஜூலை 8, 9, 10 மூன்று நாட்கள் இம்மாநாடு மிகச்சிறப்பாக நடைபெற அனைத்து வகையான ஒத்துழைப்புகளையும் வழங்கிய காயல்பட்டினத்தின் அனைத்து ஜமாஅத், சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இம்மாநாட்டு குழுக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைச் சமர்ப்பிக்கிறோம். Read the rest of this entry »

 

Tags: