RSS

நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ?

21 Jul
அன்பிற்குரிய சகோதர,சகோதரிகளே! என் மனதில் வேதனையாக உதித்தவற்றை தாங்கள் முன் கவலையோடு பகிர்ந்து கொள்வதற்காக சில வரிகள் இங்கே.
1. பெண்களின் அடாவடிகளும் / ஆளுமையும் தலை விரித்தாடும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
2. விளையாடும் பருவத்தில் மாப்பிளை,பெண் பேசும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
3.  மாப்பிள்ளை, பெண் பேசி முடிக்கிறோம் என்ற பெயரில் உறவுகளை உடைத்தெறியும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
4.  வரதட்சணையை மாடி வீடுகளாய் கேட்கும் ஊர் –  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
5. பெண் வீட்டில் பெருமையாக வாங்கி தின்னும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
6. பெண் வீட்டில் வாங்கியதில் குறையிருந்தால் குத்திக்காட்டும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
7. ஓசியில் அலங்கார நகைகளை வாங்கி அலங்கரித்துக்கொண்டு ஓசி சாப்பாட்டுக்கு செல்லும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
8. வாழ்வில் சிரமமெடுத்து சீர் கொடுக்கும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
9. எளிமையிலும் .பணக்காரர்களை போல் ஆடம்பரமாக வாழ நினைக்கும் ஊர்  – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
10. பந்தி என்றால் பகட்டுக்காக கடன் வாங்கி காசை கரியாக்கும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
11. குழந்தை பிறந்தால் அவ்வீட்டை சீனி குடோவ்ன்கலாக்கும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
12. உழைக்காத மாப்பிளைகளும் மைனராக வலம் வரும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
13. அயல் நாடே உனக்கு அடைக்கலம் என்று சொல்லும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
14. புறம் பேசி புகழை  தேட நினைக்கும் ஊர் –  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
15. பொறாமைனால் பொல்லாங்கு சொல்லும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
16 . ஆபரணத்தை அடகு வைத்து ஆண்களை அயல் நாட்டுக்கு அனுப்பும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
17 . குடும்ப சூழ்நிலையைச் சொல்லி வாலிபத்தை சூறையாடும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
18 . வெட்டிப்பேச்சில் வீரனாய் / வீராங்கனையாய் திகழும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
19 . மனம் குன்றாமல் அடுத்தவரின் குறைகள் தேடிக் கானும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
20. பணமிருந்தால் பல்லை இளிக்கும், அது இல்லையெனில் மூஞ்சை சுளிக்கும் ஊர் –  நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
21 . தெரு வேற்றுமைகளால்ஆழமாக வேருன்றி நிற்கும் ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
22 . மார்க்க மேதைகள் நிறைந்திருந்தும் மாசுக்களை துடைத்து எறிய முடியா ஊர் – நாம் இம்மண்ணில்தானோ பிறந்தோம் ? ?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ;
“நான் அல்லாஹ்வின் பாலிருந்து நற்குணங்களை முழுமைப் படுத்துவதற்க்காக அனுப்பப்பட்டுள்ளேன்” ஹதிஸின் கருத்து .
நாமும் நற்குணத்தால் நற்பேர் பெற்று இம்மண்ணில் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ! ஆமீன்.
– லெ.மு.செ.அபுபக்கர்

Source : http://adirainirubar.blogspot.com

Advertisements
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: