RSS

Monthly Archives: August 2011

ரமளான் கண்ட களம்

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 29

எப்பொழுதும் போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்த சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து செல்கிறது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற இன்னொரு ரமளானைச் சந்திப்பரா? என்பதை அறியார். உள்ளமும் சூழலும் எத்தனை உபதேசங்களைத் தந்திருந்தாலும் அதனைச் சட்டை செய்யாமல் திரிந்தவர்களைக்கூட ரமளான் என்ற இப்புனித மாதம், ஒரு மாதம் முழுமையும் கட்டிப்போட்டு ஆன்மீகப் பயிற்சியளித்திருக்கின்றது.

 

 

மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்களான புத்திசாலிகள், இப்பெறற்கரிய பயிற்சியின் மூலம் கிடைத்த மனக்கட்டுப்பாட்டை எஞ்சியுள்ள  தமது வாழ்நாளிலும் முழுமையாகப் பேணுவர்.

ஒவ்வொரு ரமளானின் வருகையிலும் அதன் விடைபெறலுக்கு முன்னரும் எண்ணற்ற அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று, இந்தப் புனித மாதம் முழுமையாக ஷைத்தானைக் கட்டிப்போடுவதில் மும்முரம் காட்டும் முஸ்லிம்களில் அநேகர், ரமளானின் விடைபெறலோடு தாம் பேணிய கட்டுப்பாடுகளுக்கும் விடை கூறி விடுகின்றனர்; தாம் பெற்றப் பயிற்சியைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர். Read the rest of this entry »

Advertisements
 

Tags:

இந்தப் பாட்டு ஒரு சந்தப்பாட்டு

அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை
           ஐவேளை தொழுவதற்கு வாருங்களே
இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக
         இரண்டரை சதவீதம் வழங்குங்களே
பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப்
        புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே
கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக்
        கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே
சொல்லாலும் செயலாலும் ஒன்றான – நமது
        சுந்தரநபி வழியே நன்றானது
வல்லான் வகுத்திட்ட குர்-ஆனிலே – நல்ல
        வலிமை ஊட்டும் ஈமானிலே
 

Tags: ,

வாரும் நபியே நீர் வாரும் நபியே…..

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
(அல்-குர்ஆன் 21: 107)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்-குர்ஆன் 33:21)

(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
(அல்-குர்ஆன் 68:4)
“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்” என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’” என்றார்கள். “நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாமத் நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்.”

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமுக்கும், இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான்.

ஆதாரம்: முஸ்லிம்

“புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்” என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’” என்றார்கள். “நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்

அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.

இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய பாடல் பாடிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி

ASSALAMU ALAIKKUM W.R.B.

RAMADHAN MUBARUK

செவிவழியாக தாலாட்டும் பாடலை தென்றலாக்கி

திரையில் “ஸ்லைடு ஷோ” மூலமாக‌ முத்தான கருத்துக்களும், தகவல்களுமே பதித்து

பார்வையின் வாயிலாக
சிந்தை முழுவதையும் வசப்படுத்தி மெய் மறக்கச்செய்த

மதிப்பிற்குரிய நீடூர் முஹம்மதலி ஜின்னா அவர்களை பாராட்டுவோம்.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.

 
Leave a comment

Posted by on August 26, 2011 in video

 

Tags:

புதிய தலைமை செயலக கட்டிடம் உயர் சிகிச்சைக்கான மருத்துவமனை ஆக்கப்படும்: ஜெயலலிதா

புதிய தலைமைச் செயலக கட்டிடம் உயர் சிகிச்சைக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சட்டசபையில் 110ஆவது விதியின்கீழ் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

நோய் இன்னதெனக் கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்க மருத்துவம் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எய்தும் நோக்குடன், தேசிய ஊரக சுகாதார நலத் திட்டம் – தமிழ்நாடு சுகாதார நலத் திட்டம் என்னும் இரண்டு மாபெரும் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலைக் கொண்ட தரமான மருத்துவச் சேவையை தாராளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தக் குறிக்கோளை நிறைவேற்றும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்களை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்;

உயிர் காக்கும் உபகரணங்களை தமிழ்நாடு சுகாதார நலத் திட்டத்தின் கீழ் 55 கோடி ரூபாய் செலவில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு வழங்குதல்;

உணவு பாதுகாப்பு-மருந்து கட்டுப்பாடு நிருவாகத்திற்கென தனியாக ஒரு ஆணையரகத்தை உருவாக்குவது; Read the rest of this entry »

 

Tags:

ஜெயலலிதாவுக்கு நன்றி: கருணாநிதி!

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தி.மு.க. ஆட்சியில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை அவரையும் அறியாமல் பட்டியலிட்டுக் காட்டியிருப்பதற்காக நான் நன்றி கூறுகிறேன் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தீர்மானம், மனித சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா, “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு- என்று இவைகள் எல்லாம் கருணாநிதியின் கண் துடைப்பு நாடகங்கள் என்று சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தில் பேசிய ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். Read the rest of this entry »

 

Tags: ,

இளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி – ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க‌ முடியாத‌ அப்ப‌ட்ட‌மான‌, ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.

 

“கல்லூரி வருகிறது” என்று பறை அடித்தவர்கள், ‘நானாச்சு’ கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு
இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்
உண்மை விளங்கும்.

 

CLICK TO READ.
அடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி
பெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.

Read the rest of this entry »

 

Tags: , ,

இறையச்சம் (கை)கூடியதா?

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 2

தொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும், தொடர்ந்து வரும் 11 மாதங்களில் ஈடுபாடும் கவனமும் குறைந்து காணப்படுகிற நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.

ரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக ஃபஜ்ருத் தொழுகை எனும் அதிகாலை தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், மற்ற தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாகக் காண முடிகிறது. Read the rest of this entry »

 

Tags: