RSS

Monthly Archives: September 2011

இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி!

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இதற்காக 14 இஸ்லாமிய கட்சிகள் மற்றும் 6 கிறிஸ்தவ அமைப்புகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி தனி அணி அமைத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் முடிவுகள் வரும் உள்ளாட்சி தேர்தல் முந்தைய தேர்தல்களைவிட தனித்து முக்கியத்துவம் பெற்றதாக ஆக்கி வருகிறது. ஆளும் அதிமுக கூட்டணியிலுள்ள கட்சிகளை முதல்வர் ஜெயலலிதா கண்டுகொள்ளாமல், போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அறிவிக்கத் துவங்கியதிலிருந்து உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

Read the rest of this entry »

 

Tags:

ஜெயலலிதா இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதலமைச்சரா?

“இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதலமைச்சர் ஜெயலலிதா” என மன்மோகன்சிங் குறிப்பிட்டாராமே? – வெற்றிச்செல்வன், பொட்டல்புதூர்.

மெத்தப் படிக்கும் யாரும் அறிவாளி ஆகலாம்.”இந்தியாவிலேயே திறமையான முதலமைச்சர்” என, பிரதமர் புகழ்வதுதான் பெருமையே தவிர அறிவாளி எனப் புகழ்வதில் சத்தில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்கும் ஒருவரை அறிவாளி எனப்புகழ மன்மோகன்சிங்குக்கு என்ன நிர்பந்தமோ?

மன்மோகன் சிங் தொலைபேசி உரையாடலில் அவ்வாறு கூறி இருந்தாலும் அதை மன்மோகன் சிங் தமது வாயால் வெளிப் படுத்துவதே முதல்வர் பதவியில் வீற்று இருக்கும் ஜெயலலிதாவுக்கு அழகேயன்றி, அரசின் செய்திக் குறிப்பு மூலமாக தெரிவிப்பது முறையன்று.


வாகனத்தில் ஆம்புலன்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை ஏன் தலை கீழாக எழுதுகிறார்கள்? – அப்பாவு ஆறுமுகம், அருப்பு கோட்டை.

தலைகீழாக எழுதுவதில்லை; வலமிடமாகத் திருப்பி எழுதுவர்.

பிறரது கவனத்தைச் சட்டென ஈர்க்க வித்தியாசமாக எதையாவது செய்தாக வேண்டுமே?

2006-2011 வரை நடைபெற்ற நில அபகரிப்பு வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்பது அரசியல் அசிங்கம் அல்லவா? – நிலா, சென்னை.

ஜெயலலிதா மீதே கொடநாடு சிறுதாவூர் எனப்புகார்கள் இருக்கின்றனவே?

கடந்த தி மு க ஆட்சிக்காலத்தில் நடந்தவை மட்டும் விசாரிக்கப்படும் என்பது அரசியல் அசிங்கம்தான். அரசியல் நோக்கத்தோடு புனையப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை எனத் தி மு கவினர் புலம்புவதை உண்மையாக்கிவிடுவாரோ ஜெயலலிதா?

அ இ அ தி மு க ஆட்களின் மீது வரும் புகார்களையும் நேர்மையாகப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால்தான் அவரது நம்பகத்தன்மை வலுப்படும்.

கைது செய்யப்பட்டுள்ள தி மு கவினர் மீது விரைந்து வழக்கு நடத்திக் குற்றவாளிகள் எனில் தண்டனை வழங்கவும் நிரபராதிகள் எனில் விடுதலை வழங்கவும் அரசு விரைந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். ஜெயலலிதா தம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடிப்பதுபோல இவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடாது. Read the rest of this entry »

 

Tags:

தி.மு.க, அ. தி. மு.க மீது திருமா. பாய்ச்சல்!

தேவையின்போது மட்டும்  பயன்படுத்திக்கொள்வதும், பின்னர் உதறித் தள்ளுவதுமான போக்குகளை தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன என திருமாவளவன் கூறினார்.

சென்னை வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில், அக்கட்சியின்  மாநில செயற்குழு  கூட்டம் 23.09.2011 வெள்ளிக்கிழமை  அன்று நடைபெற்றது,

அக்கூட்டத்தில்,  கடந்த சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது தி.மு.க. மற்றும் அதிமுக கூட்டணிகளில் இடம்பெற்றிருந்த தோழமைக் கட்சிகள் அனைத்தையும் தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அவ்விரு கட்சிகளும் ஒருபொருட்டாகவே மதிக்காமல் புறக்கணித்துள்ளன.  இதனால் வளரும் கட்சிகள் மற்றும் சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தோழமைக் கட்சிகளைப் பொருட்படுத்தாத தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளின் ஏகாதிபத்திய மேலாதிக்க மனோநிலையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இந்த மாநிலச் செயற்குழு வேதனையோடு சுட்டிக்காட்டுவதுடன் தமது கண்டனத்தையும் பதிவு செய்கிறது.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.inneram.com/2011092419101/2011-09-24-07-16-42

 

கேபிள் டிவி டெக்னீசியன்கள்! அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி.க்காக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை நிர்வகிக்க டெக்னிக்கல் அசிஸ்டென்ட், டெக்னீசியன் மற்றும் லைன் மேன், அசிஸ்டென்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு மூலமாக தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இப்பணியில் சேர விரும்பும் தகுதியான நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செப்டம்பர் 22-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு கேபிள் டி.வி.கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது மேலாளர், வர்த்தக வளர்ச்சி மானேஜர் ஆகிய உயர் பணிகளுக்கு சேர விரும்பும் தகுதியான நபர்களும் வரும் 22-ந் தேதிக்குள் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : http://www.inneram.com/

 

Tags: