RSS

Monthly Archives: October 2011

நவம்பர் 1-பொது போக்குவரத்து நாள் – இலவசமாகப் பயணிக்கலாம்.

 

துபாயில் இருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வாகனத்தை நாளை ஓரங்கட்டி நிறுத்திவிடுங்கள்.

மெட்ரோ, சாலைப் பேருந்துகள், நீர்நிலை வாகனங்கள் உட்பட எங்களின் எந்தப் பொது வாகனத்திலும், நாளை இலவசமாகப் பயணியுங்கள் என்று துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

 

நாளை நவம்பர் 1-ம் நாள் துபாயில் பொது போக்குவரத்து நாளாகக் கொண்டாடப்படுவதையொட்டி, பொதுமக்களிடையே பொது போக்குவரத்தில் ஆர்வங் கூட்டுவதற்காகவும், பொது போக்குவரத்தில் ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்காகவும் இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது. Nol அட்டைகள் வைத்திருக்கும் யாரும் நாளை ஒருநாள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“மக்கள், பொது போக்குவரத்தை அதிகம் உபயோகிப்பதன் மூலம் சாலை நெரிசலையும், சூழல் மாசுகளையும் மிகவும் குறைக்க முடியும். இதனால் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். சிரமங்களைக் குறைக்கலாம். இது பற்றிய விழிப்புணர்வை எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், பாடசாலைகளிலும்  ஏற்படுத்த வேண்டும்” என்று சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஈசா அப்துல்ரஹ்மான் அல்தோசரி என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “அதிகமதிகம் பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துவோரில் ஐம்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் Nol அட்டையில் 100 திர்ஹம்கள் அன்பளிக்கப்படும்” என்றார் அவர்.

Source : http://www.inneram.com/

 

Tags:

“வயசு வந்து போச்சு”

”வயசு வந்து போச்சு”
(ஒரு முதிர்கன்னியின் முனகல்)
வயசு வந்து போச்சு
மன்சு நொந்து போச்சு
ஆண்டுகள் பெருகிப் போச்சு
ஆயுளும் அருகிப் போச்சு
உணர்வுகள் கருகிப் போச்சு
கண்களும் அருவியாச்சு

வரன் பிச்சைக்காரர்களால்
சவரன் இச்சைக்காரர்களால்
முதிர்க்ன்னி நிலையில்
வாழ்ந்தோம்
புதிர்ப்பின்னிய வலையில்
வீழ்ந்தோம்

நரையும் வந்தாச்சு
வாழ்க்கை நாடகத்
திரையும் விழுந்தாச்சு
அலை ஓய்வது எப்போது?
நில்லை மாறுவது எப்போது?

சாதியும் சவரனும்
பிரதிவாதி ஆன போது
நீதியும் கிடைப்பது எப்போது?
நாதியற்றோரைக் காணாத போது!!
Read the rest of this entry »

 

Tags:

கடாஃபி: வணிக மையத்தின் குளிர் பதனப் பெட்டியில் பார்வைக்கு வைக்கப்பட்டது உடல்!(வீடியோ)

முன்னாள் லிபிய அதிபர் கடாஃபியின் உடல் இரத்தம் தோய்ந்த நிலையில் மிஸ்ராட்டா நகரில்  உள்ள ஒரு வணிக மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் சிறுவர்களுமாக  அந்த உடலைப் பார்வையிட அணி வகுத்து வருகின்றனர்.

முன்னதாக, கடாஃபியின் உடலை வெள்ளிக்கிழமையே அடக்கம் செய்வதாக தீர்மானிக்கப்பட்டிருந்தும், எங்கு அடக்கம் செய்வது உள்பட பலவற்றை முடிவு செய்வதில் புரட்சியாளர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், பொதுமக்கள் பார்வையில் படாமல் ஒரு வணிக மையத்தின் குளிர்பதனப்பெட்டியில் (ப்ரீசர்) வைக்கத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்களுக்கு இடம்   தெரிந்துவிட்டதால், கடாஃபியின் உடலைப்  பார்வையிட கூட்டம் அலைமோதுகிறது.

அதனால், ஆண்களுக்குத் தனியாகவும் பெண்கள், சிறுவர்களுக்குத் தனியாகவும் நேரங்கள் ஒதுக்கி அவ்வுடலைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும்,  இறுதிநேரத்தில், புரட்சியாளர்கள் கடாஃபியை அடித்து இழுத்துவந்ததும் ஒளிப்படக் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது.

கடாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உலக நாடுகளில் பலத்த விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது!

Source : http://www.inneram.com

 

Tags:

லிபிய அதிபர் கடாஃபி கொலை!

லிபியாவைப் பல ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபி மீது மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவாக அங்குப் பெரும் புரட்சி வெடித்தது.

லிபிய மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்து போராட்டத்தில் குதித்தன.
இந்நிலையில், கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபிய நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிய வண்ணம் இருந்தனர். ஆனால், கடாபி மட்டும் தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப் பட்டது.

இந்நிலையில் இன்று கடாஃபி கைதுசெய்யப் பட்டார் என முதலில் வந்த தகவலை அடுத்து தற்பொழுது லிபிய அதிபர் கடாஃபி கொல்லப் பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags:

புதியதோர் உலகம் செய்வோம்

தாயும் ஒன்றே- தந்தையும் ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?

தெருவைத் திருத்தினால்

ஊரைத் திருத்தலாம்

ஊரைத் திருத்தினால்

உலகத்தைத் திருத்தலாம்

கலகம் இல்லா
உலகம் காண்போம்

 

ஊரை இணைக்கும் கோடுகளே

ஊரைப் பிரிக்கும் கேடுகளானது

Read the rest of this entry »

 

Tags:

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

நபிமார்கள் கேட்ட துஆக்கள்

01. துஆக்கள் ஏற்கப்பட

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا تَقَبَّلْ مِنَّاإِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَاإِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ )

 

“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக்கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 127-128)

02. ஈருலக நன்மை பெற

நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ )

 

“இறைவா! எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” (அல்குர்ஆன் 2: 201)

03. கல்வி ஞானம் பெற

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம அவர்கள் கேட்ட துஆ

( أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِي )

“அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.” (அல்குர்ஆன் 2:67)

04. பாவமன்னிப்புப் பெற

நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ )

“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” (அல்குர்ஆன் 7: 23)

 

05. படைத்தவனிடம் சரணடைந்திட

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالأَرْضَ حَنِيفًا وَمَا أَنَاْ مِنَ الْمُشْرِكِينَ )

 

“வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (அல்குர்ஆன் 6: 79)

06. விசாலமான உணவைப் பெற

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَائِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ )

“அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு – எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” (அல்குர்ஆன் 5: 114)

 

07. குழந்தைப்பேறு பெற

நபி ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்ட துஆ

( رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء )

“இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 3: 38)

  Read the rest of this entry »

 

Tags: