RSS

Monthly Archives: November 2011

கோபமும் காமமும்!

இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி

சினத்தையும் காமத்தையும்

நடுநிலையில் கொண்டு வந்தால்

நற்குணம் மணம் வீசும்!

[ காமம் என்பது வீணான ஒன்றல்ல! பயனைக் கருதியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு மனிதனால் எப்படி உடலுறவு கொள்ள முடியும்? ஆண் பெண் இணைப்பு இல்லையெனில் சந்ததித் தொடர்பு அறுபட்டு விடுமே! அதுபோல ஒரு மனிதனுக்கு கோப உணர்ச்சியே இல்லாமல் போனால் அவனால் தனக்கு வரும் அபாயத்தை – தீங்கைத் தடுத்துக் கொள்ள முடியுமா?

சினத்தையும், காமத்தையும் வேரோடு களைந்தெறிய முடியாது. அவற்றை முற்றிலும் அடக்கியாண்டு விட முடியாது. இது மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், பயிற்சியால் அவற்றின் போக்கைத் திருத்தியமைக முடியும். இவ்வாறு தான் நாம் பணிக்கப் பட்டிருக்கிறோம். நம் ஈடேற்றத்திற்கும் நாம் வல்லவனை அடைவதற்கும் இதுதான் வழி.
Read the rest of this entry »

Advertisements
 

Tags: ,

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.
சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்
சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்

கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

Read the rest of this entry »

 

Tags:

நீரின்றி அமையாது உலகு …

மனிதன் உலகில் உயிர் வாழத்தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்றாக நீர் திகழ்கிறது. இதுபோன்றே மனிதனின் அடிப்படை மூலக்கூறாகவும் நீர் காணப்படுவதையும் அண்மைக்கால விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இதனையே 1400 ஆண்டுகளுக்குமுன் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகையில்:

அல்லாஹ் அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்தான் …” (24:45) என்றும்

… நாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் நீரை வாழ்வின் மூலாதாரமாக்கினோம் …” (21:30) என்றும் கூறுகிறான்.

 

அல்லாஹ் இவ்வசனங்களின் மூலம் ஒவ்வொரு உயிரினத்தினதும் மூலக்கூறு நீர் என்பதனை விளக்குகிறான். மேலும் அல்லாஹ் நீரைப் பற்றி எவ்வாறு கூறுகின்றான் என்று பார்ப்போமானால் அவன்தான் வானத்திலிருந்து திட்டமிட்ட அளவில் நீரை இறக்குகின்றான்.

அவ்வாறு இறக்கப்பட்ட நீரை அவனே பூமியில் தேக்கி வைக்கின்றான். அதேபோன்று அவன் நாடினால் அதனை பூமியில் தேக்கிவைக்காமல் போக்கிவிடவும் முடியும். நீரை மையமாகக் கொண்டு வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் பலவகைக் காய்-கனிவகைகளையும் அதிலிருந்து வெளிப்படுத்துகின்றான். Read the rest of this entry »

 

Tags: ,

பேறு பெற்ற பெண்மணிகள்

பூர்வீகத்திற்குத் திரும்பிய புனிதவதி !

“மனித உருவில் இருந்தவர்களைக் கடவுளாக வணங்கக் கூறும் மதங்களுக்கு இடையில், கண்ணுக்குப் புலப்படாத, வல்லமையும் கருணையும் நிரம்பிய அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூறும் இஸ்லாம் என் மனதுக்குப் பிடித்திருந்தது” எனக் கூறுகின்றார் கஸ்ஸானாவாக இருந்து, ஆயிஷாவாக மாறிய இப்புனிதவதி.

சவுதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ‘மாணவர் மாற்றுத் திட்டம்’ (students exchange program) அடிப்படையில், சவுதி மாணவி ஒருவர் அமெரிக்காவிலும், அமெரிக்க மாணவி சவுதியிலும் மேற்கல்வி கற்கும் வாய்ப்பில் வந்தவர் இந்த அமெரிக்க மாணவி. பல்லாண்டுகளாகப் பார்க்கக் கிடைக்காதிருந்த புனித இறையில்லமாம் கஅபாவைக் கண்ணாரக் கண்டு களிப்புற்ற இவர், தான் வந்த 1977 ஆம் ஆண்டிலேயே தன் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார்!
ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாகத் தனது மேல் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் அப்துல்லாஹ் உமர் நஸீஃப் அவர்கள். இவர் பின்னாட்களில் மக்காவின் ‘ராபிதத்துல் ஆலமில் இஸ்லாம்; என்ற அனைத்துலக இஸ்லாமியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், அதன் பின்னர் சவுதி அரசாங்க ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
மன்னர் பல்கலைக்கழகத்தில் ஆயிஷாவுக்கு நிலை கொள்ளவில்லை ஏன் தெரியுமா? Read the rest of this entry »
 

Tags:

அப்துல்கலாமுக்கு அவமரியாதை: இந்தியா கண்டனம், அமெரிக்கா வருத்தம்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டமைக்கு இந்திய அரசு சார்பில் கடும்கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அமெரிக்கத் தூதரகம் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிருபமா வை இந்திய அயலக விவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்பு கொண்டு இந்த பிரச்சினையை அமெரிக்க அரசின் உயர்நிலை கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.

“அப்துல்கலாமிடம் சோதனை செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள இயலாது. இச் சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் அமெரிக்காவில் தொடருமேயானால் அமெரிக்க உயர் அதிகாரிகளையும் நாங்கள் சோதனைக்கு உட்படுத்துவோம்” என்று எஸ்.எம். கிருஷ்ணா எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக அப்துல் கலாமுக்கும், இந்திய அரசுக்கும் அமெரிக்க தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், “செப்டம்பர் 29 அன்று அப்துல் கலாமுக்கு நேர்ந்த அவமரியாதைக்கு நாங்கள் மிகவும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

“எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனவும் அமெரிக்க தூதரகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Source : http://www.inneram.com

 

 

Tags:

யார் பொறுப்பு

சமூகத்தில் படர்ந்த அனாச்சாரயார் பொறுப்பு லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம். இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்துவிட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஸ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்றுவிடும் அதற்கு போறாட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்புகள் மாட்டிவிடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. அது மெயின் சுவிட்ச். அதை இயங்காமல் செய்து விடுவதால் மட்டுமே தான் கருதிய பலன் கைகூடும். இந்த மூலத்தை இரகசியத்தை உணர்வதில்லை.சில்லரை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணி மண்டபங்களுக்குள் இருக்கின்றது. Read the rest of this entry »

 

Tags:

“நேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:சுவனத்தென்றல்

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

நேரமில்லை! – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை! அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை!

நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய சிறுபிராயத்தில் காலை எழுந்தது முதல் மாலை வரை சுமார் 8 மணி நேரம் பள்ளிப்படிப்பு, பின்னர் மாலையில் ஒன்றிரண்டு மணி நேரம் டியூசன் வகுப்புகள், பின்னர் ஓரிரு மணி நேரம் விளையாட்டு என்று அவனுடைய இளம்பருவத்தின் வயது கழிகின்றது. ஓரளவு மார்க்கப்பற்றுள்ள சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் காலையிலோ அல்லது பள்ளிக்கூடம் சென்றுவிட்டு வந்த பின்னர் மாலையிலோ அல்-குர்ஆனை (பொருளறியாமல்) ஓதுவதற்கும் இஸ்லாத்தைப் பற்றிய அடிப்படைகளை பயில்வதற்கும் அனுப்புகின்றனர். அல்ஹம்துலில்லாஹ். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதை செய்வதில்லை!

முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற ஒரு சில கல்விக்கூடங்களிலே உலகக் கல்வியுடன் சேர்த்து இஸ்லாத்தின் அடிப்படைகள் சிலவற்றையும் சேர்த்து கற்றுத் தருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தின் அடிப்படையை சிறுபிராயத்திலேயே கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் மிக மிக அரிதானதாகவே இருக்கின்றது. ஏன் இஸ்லாமியர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களிலே கூட மேலை நாட்டின் நாகரீகத்தைப் பின்பற்றி அந்நிறுவனங்களிலே படிக்கின்ற குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் பெற்றோர் தனிப்பட்ட முறையில் அக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர, அந்தப் பள்ளியில் படிக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாமிய அறிவு என்பதே இல்லாமல் போகின்றது.

இதைவிட வேதனை என்னவென்றால், சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் நடத்தப்படுகின்ற ‘முஸ்லிம் சிறுபாண்மையின’ பள்ளிக் கூடங்களிலே வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுவதற்கு கூட வாய்ப்புத் தராமல் பள்ளி நேரங்களை அமைத்திருக்கின்றார்கள். மதிய உணவுக்காக விடப்படுகின்ற சொற்ப இடைவெளி நேரத்தில் மதிய உணவருந்தினால் ஜூம்ஆவுக்குச் செல்ல இயலாது; ஜூம்ஆவுக்குச் சென்றால் மதிய உணவருந்த முடியாமல் பட்டினியாக இருக்க வேண்டியது தான்! Read the rest of this entry »

 

Tags: