RSS

Monthly Archives: December 2011

இன்பமும் துன்பமும்

உலகத்தில் நாம் பரவலாக பார்க்கும்போது இன்பமும் துன்பமும்  இருக்கிறது. இந்த உலகத்தில் மனிதனுக்கு, விருப்பத்திற்கு உட்பட்டவைகளும் சம்பவிக்கின்றன. ஆக இன்பம் துன்பம் விருப்பு வெருப்புகள் ஆகிய எல்லாமே நிறைந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் “நம் வாழ்வில் இன்பமும் இருக்கிறது. துன்பமும் இருக்கிறது. எது அதிகம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் போது” ஒவ்வொருவனும்90% க்கு மேல் இன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஒரு 10%க்கும் குறைவாகவே துன்பம் அவனது வாழ்வில் அவ்வப்போது தலை காட்டுகிறது” என்பதை புரிந்து கொள்வான்.

    எப்போதும் வயிற்று வலியால் ஒருவன் துடித்துக் கொண்டிருப்பதில்லை. எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுவலி ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் பசியோடு இருப்பதில்லை. எப்போதாவது ஓரு மனிதன் வியாதியிலேயே உழல்வதில்லை. எப்போதாவது சில சமயம் மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்படுகிறது. எப்போதும் ஒருவன் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொள்வது இல்லை. எப்போதாவது சில நேரங்களில் வக்கிலைப் பார்க்க வேண்டிய நிலமை ஏற்பட்டு விடுகின்றது.

    ஆக மனிதன், தன் வாழ்க்கையில் 90%க்கும் அதிகமாக அல்லாஹ்வின் அருளையே அனுபவிக்கிறான். ஒரு 10% துன்பமும் வரம் என்பதை மறுப்பதற்கில்லை. சில நேரங்களில் அவனையும் மீறி இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக அவனது விருப்புக்கு அப்பாற்பட்டவைகளும் நடந்து விடுகின்றன.

     அதனால் அவன் தன்னை அர்ரஹ்மான் அர்ரஹீம் என்று அறிமுகப்படுத்துகிறான். படைப்பினங்களுக்கு கருணை செய்வதை தன் மீது அவனே கடமையாக்கிக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.அப்படியானால் வியாதி எதற்காக ஏற்படுகிறது? கஷ்டங்கள் எதற்காக ஏற்படுகிறது இயற்கையின் விபத்துகளால் நாங்கள் எதற்காக அழிக்கப்படுகிறோம்? பல்வேறு துன்ங்களுக்கும், கொடுமையான சித்திரவதைகளுக்கும் எதனால் நாங்கள் உள்ளாக்கப்படுகிறோம்? என்று கேட்கும்போது அறிவு குறைந்த, இறைவனைப் புரிந்து கொள்ளாதவன் தான் இவற்றை எல்லாம் இறைவன் தன் மீது கொண்ட கோபத்திற்கு எடுத்துக் காட்டு என்று கொள்வான். ஒரு புத்திசாலி, அல்லாஹ்வை நன்கு புரிந்து கொண்டவன் ‘இந்த சோதனையும் அல்லாஹ்வின் கருணையில் ஒன்றுதான் என்று புரிந்து கொள்வான்.

     ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் ஒருகைகளையும் பிடித்துக் கொண்டு, அவனுடைய கால்கள் மீது தன்னுடைய கால்களை வைத்து அழுத்திக் கொண்டு அவனுடைய வாயைப் பலவந்தமாக திறந்து, அவனுக்கு பிடிக்காத விளக்கெண்ணையை ஊற்றும் போது, அந்த உலகம் தெரியாத குழந்தை “இப்படி சித்திரவதை செய்கிறாளே, கொடுமைப்படுத்துகிறாளே, இவளும் ஒரு தாயா? நம்மைக் கொடுமைப்படுத்துவதுதான் இவளது வேலையா என்று எண்ணிக் கொள்ளும்.

       ஆனால் உலக அனுபவமும், முதிர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் பெற்றவர்கள். இது தாய் நிகழ்த்தும்கொடுமை” என்று சொல்ல மாட்டார்கள். என்ன சொல்வார்கள்? “குழந்தைக்கு அஜீரணக் கோளாறு, குழந்தையின் உள்ளிருந்து சிறுகச் சிறுக, கொன்று கொண்டிருக்கும் வியாதிக்கு இவ்வளவு சிரமத்தோடு இந்த மருந்தைத் தரத்தான் வேண்டும், அந்தக் குழந்தை பொறுமையோடு இல்லாவிட்டாலும், அது தாங்கவியலாமல் துடித்தாலும் இந்தக் காரியம் முதிர்ச்சி பெற்றவாகள் விளங்கிக்கொள்ாாகள். ஆக அந்தக் குழந்தைக்கு வெளித்தோற்றத்தில் வேதனையாகத் தெரிவதும், சித்திரவதையாக படுவதும் அந்தக் குழந்தையின் நலனுக்குத்தான் என்பதை அறிவுடையோர் உணர்ந்து கொள்வர்.

    கல்விக் கூடத்திற்கு செல்ல மறுக்கும் குழந்தையை தாய் அடிக்கிறாள் துன்புறுத்துகிறாள். அவனுக்கு உணவு தராமல் அவனைப் பட்டினி போடுவதாய் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அந்தக் குழந்தையின் வருங்கால நலன்தான். அந்தக் குழந்தை இந்த உலகத்து பிரச்சினைகளில் எதிர்நீச்சல் போட்டு, இந்த உலகத்தின் சவால்களை சமாளிக்கின்ற அளவுக்கு தன்னுடைய சந்ததி வளர வேண்டும் என்கிற தூர நோக்குத்தான், அந்தத் குழந்தைக்கு இவ்வளவு துன்பத்தையும் தருவதற்கு காரணம் என்பதை யாரால் மறுக்க துடியும்?

      நமக்கு காரும், பங்களாவும், நல்ல ஆடம்பரமான வாழ்வும் சுகபோகங்களும், ஒரு நாள் கூட காய்ச்சல், தலைவலி என்று படுக்காத ஒரு வாழ்க்கையும் நமக்குக் கிடைத்து விடுவதுதான், “நம்முடைய இறைவன் நம்மீது வைத்திருக்கும் கருணைக்கு எடுத்துக்காட்டு.” என்று நீங்கள் நினைத்தீர்களானால், நீங்கள் இன்னமும் ஞான முதிர்ச்சி பெறவில்லை. இன்னமும் போதிய விழிப்புணர்வு பெறவில்லை. நீங்கள் இன்னமும் அந்த இறைவனைப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். Read the rest of this entry »

Advertisements
 

Tags: , , ,

அன்றும் இன்றும்

அன்று:

கன்னத்தில் முத்தமிட்டு
கட்டியணைத்து
உச்சிதனை முகர்ந்து
உச்சந்தலையில் ஓதி
சென்றுவா மகனே
”வென்றுவா மகனே”
என்றுதான் புகழந்த தாய்
அன்றுதான் கண்டோம்
இன்று:
“ஏழு மணியாச்சுடா
எழுந்து வா சனியனே”
கோபத்தில் வாயைக்
கொப்பளித்து
சாபத்தில் காலைச்
சாப்பாட்டை அளித்து
விரட்டியடிக்கும்
வீரத்தாய்(?) இன்று
அன்று:
தாய்பாடும் தாலாட்டும்
நோய்போகும் நல்மருந்தும்
வாய்பாடும் மனக்கணக்கும்
வாய்த்தது நமக்கு அன்று
 

Tags:

வருக வருக என்று அன்புடன் வரவேற்கின்றோம்

 Mangayar Ulagam 

பெண்கள் அனைவரும் ஒன்றுக்கூடும் இடமாக இந்த வலைப்பூ இருக்க வேண்டும் என்று தான் ஆரமபம் செய்தோம். உறுப்பினர்களும் மிகுந்த ஆர்வத்துடன் மின் அஞ்சல் மூலம் வலைப்பூ அறிமுகத்துக்கு தொடர்ந்து ஆதரவு தராங்க..மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
இனி வாரம் திங்கள் கிழமை அன்று மட்டும் மகளிர் வலைப்பூ அறிமுகம் செய்யலாம் என்று இருக்கிறோம். மற்ற நாள் என்ன செய்யலாம் என்று கேட்கிறிங்களா? உங்களின் தனி திறமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் பாலமாக நமது மங்கையர் உலகம் இருக்கனும் என்று கருதுகிறோம்.

வலைப்பூவில் மின்னிக்கொண்டு இருக்கும் உங்களுக்கு பல திறமைகள் இருப்பதனை கண்டு வியந்துபோய் பார்த்துக்கொண்டுயிருக்கிறது உலகம்.  சமையல் மட்டும் தான் பெண்களால் செய்ய முடியும் என்ற நிலைபோய் இன்று எல்லாத் துறையிலும் பெண்கள் சாதிக்க முடியும் என்று தெரிந்துக்கொண்டார்கள்… உங்களை இன்னும் அழகாக்கும் நோக்கில் தான் இந்த சிறு ஆரம்பம்.
புதிய வருடம் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பம் செய்யலாம் என்று இருக்கிறோம்
அதுக்கு உங்களின் முழு ஆதரவும் எங்களுக்கு வேண்டும்.. Read the rest of this entry »
 

Tags:

மாநிலங்களவையில் கனிமொழி

2G அலைக்கற்றை ஊழலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழி பிணையில் வந்ததும், அவருக்கு தி மு க சார்பில் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டதும் தெரிந்ததே.

சிறைப்பட்டிருந்ததால், நாடாளுமன்றம் வர முடியாமல் இருந்த கனிமொழி, தற்போது நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் முகமாக டெல்லி வந்துள்ளார்.

இன்று மாநிலங்களவையில் பங்கேற்க வந்த கனிமொழியை பா ஜ க செயலாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கைகுலுக்கி வரவேற்றார்.

http://www.inneram.com/

 

Tags:

பிச்சைப் பணத்தை வாங்கும் ஆண்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை!

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)

ஒவ்வொரு ஆண் மகனும் திருமணம் செய்யும்போது மனைவிக்கு மஹர் எனும் மணக் கொடை வழங்க வேண்டும் என்று திருக்குர்ஆனின் இவ்வசனம் கட்டளையிடுகிறது .முஸ்லிம் சமுதாயத்தில் அங்கம் வகிக்கின்ற பலர் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வரும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். இந்த அவலத்திற்கு ஊர் ஜமாஅத்தினரும் மார்க்க அறிஞர்களும் ஒத்துழைக்கக் கூடியவர்களாகவோ அல்லது கண்டு கொள்ளாதவர்களாகவோ இருப்பதையும் பார்க்கிறோம்.

வரதட்சணை கொடுமை வசதியில்லாத காரணத்தினால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்சிகள், மணவாழ்வு தள்ளிப் போகும் ஏக்கத்தால் பெண்கள் மனநோயாளிகளாகிப் போகும் நிகழ்சிகள் அன்றாடம் நடந்தாலும் இவையெல்லாம் சமுதாயத்தின் கல் மனதைத் கரைப்பதாக இல்லை.தக்க தருணத்தில் மணமாகாத காரணத்தால் பெண்கள் வழிதவறிச் செல்வதும், அதன் காரணமாக அந்தக் குடும்பமே அவமானத்தால் தலை குனிவதும் பல ஊர்களில் அன்றாட நிகழ்சிகளாகிவிட்டன. சமுதாயத்துக்கே இதனால் அவமானம் ஏற்ப்பட்டாலும் சமுதாயத்துக்கு ரோஷம் வருவதாகத் தெரியவில்லை. Read the rest of this entry »

 

Tags:

இரயில் பயணம்- இனியொரு கனவா?

கடலலைகள் பாடும்
இரயிலடியின் காற்றினிசையில்
நினைவலைகளின் நாடாக்களை
நித்தம் சுழற்றும் எல்லாரும்

மீண்டும் வராதா அக்காலம்
மீண்டு வராதா இரயில் கோலம்
வேண்டுகின்றோம் வேதனையில்
தூண்டுகின்றோம் தொடர்ந்து….

அந்தக் காலம்:

பாங்கோசையுடன் வழியனுப்பும்
பாங்கினைக் கண்டோம்
ஹஜ்ஜுப் பயணிகளாய்
பாவங்கழுவி வருவோரை
ஆரத்தழுவி “துஆ” வேண்டுவோம்
Read the rest of this entry »

 

Tags:

பெண்கள் நாடி ஓடும் அழகும் தேடி வரும் ஆபத்தும்!

ஃபாத்திமா நளீரா

அழகு! இது பல விஷயங்களில் வியாபித்திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிடத்து அழகின் நூற்றாண்டோ என்று எண்ணும் அளவுக்கு பெண்களின் உருவ அமைப்பு மெருகேற்றப்பட்டு முலாம் பூசப்படுகின்றது.

அழகென்றால் பெண். பெண் என்றால் அழகு என்று எண்ணும் அளவுக்குத் தகவல் தொழில் நுட்பத்துடன் அழகுக் கலை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அழகின் பரிணாம வளர்ச்சி மிக வேகமாக முன்னேறிவரும் அதே நேரம், பெண்கள் தங்கள் அழகைக் காட்டித்தான் பிறருடைய கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற காலம் கரைந்துவிட்டது.

தங்கள் அறிவு, திறமை, ஆளுமை போன்றவற்றினால் இன்றைய சமுதாயத்தில் புகழையும் அங்கீகாரத்தையும் மிக எளிதில் பெற்று விடுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. என்றாலும் இன்றைய (மணமுடித்த, மணம் முடிக்காத) பெண்கள் அழகான உடலமைப்பு வேண்டும். வசீகரிக்கும் முகம் வேண்டும். என்ற எண்ணத்துடன் பல உத்திகளை நாடுவதும் தரமற்ற அழகு நிலையங்களை நாடி ஓடுவதும் தரமற்ற அழகுப் பொருட்களுக்குப் பணத்தல்த் திசை திருப்புவதும் சற்றுக் கவலைக்குரிய விஷயமாகும். Read the rest of this entry »

 

Tags: