RSS

Monthly Archives: January 2012

ஆண்மை அதிகரிக்க

by jeyanthi

ஆண்மை அதிகரிக்க

திப்பிலியை எடுத்து நன்கு  பொடியாக்கி சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

அறிகுறிகள்: ஆண்மை குறைபாடு.

தேவையான பொருள்கள்: . நெய்.

செய்முறை: திப்பிலியை எடுத்து நன்கு  பொடியாக்கி சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

                                                                       திப்பிலி                                                                              நெய்

                                                                   திப்பிலி

Source : http://www.grannytherapy.com/tam/2012/01/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-4/

 

Tags:

இஸ்லாம் என்பதன் பொருள்

இஸ்லாம் என்ற சொல்லானது ‘சில்ம்’ என்ற அரபி வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அதற்குப் பல பொருள்களுண்டு. அவற்றில் சில சாந்தி, பரிசுத்தம், பணிவு, கீழ்படிதல் ஆகியவை ஆகும். மதம் என்ற கண்ணோட்டத்தில் இஸ்லாம் என்ற சொல்லுக்கு இறைவனுடைய ஆணைக்குப் பணிதல் என்றும், அவனுடைய கட்டளைகளுக்கு கீழ்படிதல் என்றும் பொருள்.

இஸ்லாம் என்ற சொல்லின் மூலப்பொருளுக்கும், மதம் என்ற நோக்கில் அதற்கு இருக்கும் பொருளுக்கும் இடையில் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இறைவனின் ஆணைக்கு அடிபணிதல், அவனுடைய சட்டத்திற்கு கீழ்படிதல் இவற்றின் மூலமே உண்மையான அமைதியை அடைய முடியும். நிலையான தூய்மையான, புனித நிலையை எய்த முடியும்.

சில மதத்தவர்கள் இஸ்லாத்தை ’முஹம்மதியம்’ என்றும், அதனை ஏற்றுக் கொண்டவர்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் அழைக்கிறார்கள். முஸ்லிம்கள் இப்படித் தங்களை அழைப்பதை நிராகரிப்பதோடு அவற்றை எதிர்க்கவும் செய்கிறார்கள். தங்களது மார்க்கத்தை ’முஹம்மதியம்’ என்றும் தங்களை ’முஹம்மதியர்கள்’ என்றும் பிரித்துக் கூறுவது பல தவறான கருத்துக்களை வளர்க்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். Read the rest of this entry »

 

Tags:

K-Tic: குவைத்தில் மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) மாநாடு!

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 
7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு!
பேராசிரியர் மவ்லானா அ. முஹம்மது கான் பாகவீ மற்றும்
அல்ஹாஜ் J.M. ஹாரூன் M.A., M.P., ஆகியோர் சிறப்புரை!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், பிப்ரவரி (2012) மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 7ம் ஆண்டு மாபெரும் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்… 
தொடர்ந்து….
  • 2 சிறப்பு விருந்தினர்கள்!
  • 3 நாட்கள்!
  • 4 இடங்கள்!
  • சிறப்புப் சொற்பொழிவுகள்!
  • குவைத்தில் முதல் முறையாக இஸ்லாமிய பட்டிமன்றம்!
  • ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியீடு!
  • முஸ்லிம் அல்லாதோருக்கான சிறப்பு நிகழ்ச்சி!
  • குவைத், இந்திய மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகளின் வாழ்த்துரைகள்!
  • குவைத் வாழ் அறிஞர் பெருமக்களின்  சிறப்புக் கருத்தரங்கம்!
  • பிற அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துரைகள்!
  • பரிசளிப்பு நிகழ்ச்சி!
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்.
நிகழ்ச்சியின் முழு விபரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளன.
தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறும், குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள். 
——————————————————————————————————-

Web & Media Wing,

Kuwait Tamil Islamic Committee (K-Tic)

Kuwait.

Hotline : (+965) 97 87 24 82

Emails q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com / ktic.kuwait@yahoo.com

Official Website www.k-tic.com

Yahoo Group http: //groups.yahoo.com/group/K-Tic-group

GoogleGroup : http://groups.google.com/group/q8tik

6 attachments — Download all attachments   View all images   Share all

images   Read the rest of this entry »

 

Tags: ,

மன திருப்தி

எவர் தம்மிடம் இருக்கும் ஒரு நாளைக்குப் போதுமான சாதத்தைக் கொண்டு தம் மனத்துக்கு நிம்மதியையும் தம் உடலுக்குத் தெம்பையும் கொடுத்துக் கொள்கிறாரோ அவர் உலகிலுள்ள அனைத்தும் அளிக்கப்பட்டவர் போலாவார் என்று அண்ணல் நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் இப்னு மிஹ்ஸனில் கதமீ (ரலி) நூல்: திர்மிதி

எவர் இஸ்லாமிய நேர்வழியை அடைந்து அவரால் இயன்றதைக் கொண்டு வாழ்க்கை நடத்தி போதுமாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு நல்வாழ்வு உண்டாகட்டும் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: புலாளதுப்னு உபைது (ரலி) நூல்:திர்மிதி

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நம்பிக்கை கொண்டிருப்பின் நிச்சயமாக அவன் உங்களுக்கு உணவளிப்பான், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று. அவை காலையில் வெறும் வயிற்றோடு சென்று மாலையில் வயிறு நிரம்ப உண்டு திரும்புகின்றன என்று நபி அவர்கள் கூறினர்: அறிவிப்பவர்: உமர் (ரலி) திர்மிதி Read the rest of this entry »

 

Tags:

வேலை தேடுவோர்க்கு – அனுபவம் பேசுகிறது !

வேலை தேடுவோர்க்கு சில அனுபவ குறிப்புகள்
கண்களில் கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டையோடும்  வேலை தேடி நிறைய பேர் வருகிறார்கள். வலைதளங்களிலும், செய்தித்தாள்களிலும்  தெரிந்தவர்கள் மூலமாகவும் தான் அறிந்த வேலை முதல் அறியாத வேலை வரை எப்படியாவது ஒரு வேலையில் அமர்ந்துவிட வேண்டுமென்று  முயற்சி செய்கிறார்கள். சிலருக்கு கூடி வருகிறது பலருக்கு கூடுவது இல்லை.
வேலை கிடைக்காதவர்கள், தங்களுக்கு போதுமான தகுதிகள் இருந்தும்  ஏன் அந்த வேலை கிடைக்கவில்லை என்று ஆராய்ந்து பார்ப்பது இல்லை. வேலைக்கு அமர்த்தப்படுவது என்பது இரு முக்கிய காரணிகளின் கலவைகளின் வெற்றியாக  இருக்கும்.
ஒன்று நமது கல்வி தகுதிகள், அனுபவங்கள், எதிர்பார்க்கும் சம்பளம், நமது பின்பலம் ஆகியவைகள். அடுத்தது – அந்த தகுதிகளை நாம் உண்மையிலேயே பெற்று இருக்கிறோம் என்பதை நம்மை  பேட்டி காண்பவர்  உணருமளவு நம்முடைய நடை, உடை, பாவனைகளால் எப்படி எடுத்துக்காட்டுகிறோம் என்பது. இது மிக, மிக  முக்கியமானது.
 

Tags:

உள்ளமும் உளநோய்களும்

 by மௌலவி M.T.M.ஹிஷாம் மதனீ

– எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி)
மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடைய உள்ளம் உயிரோட்டமுள்ள உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும் மற்றும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இவ்வடிப்படையைக் கருத்தில் கொண்டே அல்லாஹ்வும் அவனது தூதரும் தத்தம் பொன்மொழிகளை அமைத்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக. . .

அல்லாஹ் கூறுகின்றான்: “எவருக்கு உள்ளம் இருக்கிறதோ அவருக்கும், அல்லது மன ஒருமைப்பாடுடன் செவியேற்கின்றாரோ அவருக்கும் நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” (காப்: 37)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்). (அல் அஹ்ஸாப்: 5)

நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் இருக்கின்றது, அது சீர் பெறுமானால் உடம்பு பூராகவும் சீர் பெற்றுவிடும், அது கெட்டுவிட்டால் உடம்பு பூராகவும் கொட்டுவிடும், அதுவே உள்ளமாகும்.” (புகாரி, முஸ்லிம்)

உள்ளத்தின் பண்புகள்

பிரதானமாக உள்ளத்திற்கு இரு பண்புகள் உள்ளன.

1. தடம் புரளக்கூடிய தன்மை
உள்ளமானது எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. அவ்வப்போது நிலை மாறக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை பின்வரக்கூடிய ஹதீஸைப் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)

இப்படி உள்ளமானது நிலைமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனைச் சீர் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது எமது கடமையாகும். அல்குர்ஆனிலும் நபி மொழியிலும் அதற்கான பிரார்த்தனைகள் நிரம்பக் காணப்படுகின்றன.

  • அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5)
  • “இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)
  • “மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)

2. பித்னாக்களை உள்வாங்கக்கூடிய தன்மை

பொதுவாக மனித உள்ளமானது எப்போதும் பித்னாக்களை உள்வாங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு அவற்றை விட்டும் உள்ளங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எம் பாரிய பொறுப்பாகும். ஒரு மனிதன் பித்னாக்களுக்கு உட்பட்டு, அவற்றில் ஆர்வம் கொண்டு, ஈடுபாடு காட்டினால் அவனது உள்ளம் காலப்போக்கில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிய முடியாத அளவுக்கு இருளடைந்துவிடும். அதேபோன்று பிரிதொரு மனிதன் பித்னாக்களைவிட்டு ஒதுங்கி தன்னைத் தற்காத்துக் கொண்டு காரியம் அற்றினால் அவனது உள்ளம் பளிச்சிடும் வெண்ணிறத்தை அடையும் என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

உள்ளத்தின் வகைகள்

பொதுவாக உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. சீராண உள்ளம்
  2. மரணித்த உள்ளம்
  3. நோய்வாய்ப்பட்ட உள்ளம் Read the rest of this entry »
 

Tags: , ,

தனுஷ்-பிரதமர்: ‘கொலவெறி’ விருந்தின் பின்னணி

3 நாட்களுக்கு முன்னர்… இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடாவு-க்கு இந்தியப்பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அளித்த விருந்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் தனுஷ் அழைக்கப்பட்டு இருந்தது தனுஷ் உட்பட பலருக்கு ஆச்சரியமாகவும், ஏகப்பட்டோருக்கு எரிச்சலாகவும் இருந்தது..! எனக்கும்தான்..! காரணம்..?

நம் நாட்டில் கல்வியில், ஆராய்ச்சியில், பொருளாதாரத்தில், சமூக சேவையில், பொறியியலில், மருத்துவத்தில், இறையியலில், விளையாட்டில்… இப்படி எத்தனையோ ஆக்கப்பூர்வமான துறைகளில் சாதித்த எத்தனையோ இந்தியர்களுக்கு கிடைக்காத அழைப்பு இவருக்கு மட்டும் எப்படி கிடைத்தது..? ஏன் கிடைத்தது..? http://pinnoottavaathi.blogspot.com/2011/12/blog-post_31.html

நன்றி

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ  (05-02)

..and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting(05;02)

”..நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை

 

Tags: