RSS

Monthly Archives: March 2012

இனிக்கும் இல்லறம்

ஹம்னா பின்த் ஜஹ்ஷ் என்ற நபித்தோழி, உஹது போர்க்களத்தில் இருந்து திரும்பிய நபி(ஸல்…) அவர்களை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா(ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும் அவர் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்” என்று கூறி பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அவரது கணவர் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) இறந்த செய்தி கூறப்படவே, அவர் தேம்பி அழலானார். அப்போது நபி(ஸல்) அவர்கள் “ஒரு பெண்ணின் கணவன் அவளிடம் நீங்காத இடத்தைப் பெற்றிருக்கிறான்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

ஒரு கணவன் தனது மனைவியின் உள்ளத்தில் எந்த அளவுக்கு இடம்பெற்றிருக்கிறான் என்பதற்கு மேலே குறிப்பிட்டுள்ள வரலாற்று நிகழ்வே நமக்கு புரிய வைக்கும். நாம் நமது துணையின் உள்ளத்தில் நீங்காத இடத்தை பிடிக்கவேண்டும்.

பரஸ்பரம் அன்பும், பாசமும், பிணைப்பும், அரவணைப்பும், ஆறுதலும் நிறைந்து காணப்படும் தம்பதியினரின் இல்லற வாழ்க்கை என்பது இந்த பூலோக வாழ்க்கையில் சுவனமாக மாறும்.

இன்றைய உலகில் எத்தனையோ ஆண்களும், பெண்களும் திருமணம் முடிக்கின்றார்கள். ஆனால், அனைவரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதை நாம் உறுதியாக கூறிவிட இயலாது. அழகு, அந்தஸ்து, புகழ், பணம், பதவி எல்லாம் இருந்தும் ஒன்றுமே இல்லாததுபோல் வாழும் தம்பதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெயருக்காகவும், புகழுக்காகவும், ஊர், உலகத்திற்காகவும் வாழ்வது அல்ல குடும்ப வாழ்க்கை. பரஸ்பரம் அன்பும், பாசமும் பிணைந்து காணப்படுவதுதான் இல்லற வாழ்க்கையின் வெற்றியாகும். Read the rest of this entry »

Advertisements
 
 

Tags: , ,

படிப்பில் வேண்டும் பிடிப்பு

மூச்சு விடுதல் மட்டு மன்று

முயற்சி கூட மனிதமே

பேச்சில் கூறு மனைத்தும் விடாமல்

பேணிக் காத்தல் மனிதமே

பாய்ச்சும் நீரா லுயிரும் பெற்று

பயிரும் வளர்தல் போலவும்

காய்ச்சும் தங்கம் ஒளிர்தல் போன்றும்

கடின வுழைப்பு வெல்லுமே

ஊதும் சங்கின் அறிவிப் பால்நம்

உறக்கம் களையச் செய்யுமே

ஓதும் உன்றன் படிப்பால் செல்வம்

ஓங்கி வளரச் செய்யுமே

தீதும் நன்றும் பகுத்து முடிவைத்

தீர்க்க வுதவும் கல்வியே

போது மென்ற நிறுத்தல் குறியைப்

போட்டு விடாது கல்வியே

(6 மாச்சீர்கள்+ 1 விளச்சீர்= எழுசீர் விருத்தம்)

(வேறு) Read the rest of this entry »

 

Tags: