RSS

Monthly Archives: April 2012

மலரே ரசித்தது

ஹைக்கூ கவிஞர் இரா. இரவி

மலரே ரசித்தது
மலர்க்  கண்காட்சி
என்னவள்

வண்ணங்கள் எத்தனை
உணர்த்தியது
மலர்க்  கண்காட்சி

இயற்கையின் மேன்மை
இனிதே சொல்லியது
மலர்க்  கண்காட்சி

நினைவிற்கு வந்தது
சரவிளக்கு
பொன்சாய்மரம்

பலன் தரவில்லை
பெயர்
வாகை மரம்

பயணத்தில்
உடன் வரவில்லை
வந்தால் நினைவில்

வரப்பு உயர
நீர் உயரும்
வரப்பு ?

எங்கெங்கோ மலர்ந்த
மலர்களை இணைத்தது
நார்

எங்கெங்கோ பிறந்த
இருவரை இணைத்தது
காதல்

வழியே
தெரியவில்லை
வழிகாட்டி ?

சிறகுகள் அசைத்து
சிகரம் தொட்டது
பறவை

விலைவாசி
ஆலைக் கரும்பாக
மக்கள்

காற்றாடி
சுழன்று
தந்தது மின்சாரம்

ஹைக்கூ கவிஞர் இரா. இரவி

Source : http://eraeravi.wordpress.com

Advertisements
 

Tags: , ,

இந்த முழு உலகத்திற்கும் ஒரே ஒரு இறைவன்

உலகம் பல நாடுகளாகப் பிரிந்து அதில் வாழும் மக்கள் எத்தனை மொழி பேசினாலும், எத்தனைப் பிரிவுகளாகத் தங்களை வகுத்துக் கொண்டாலும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும் படைத்து பக்குவப்படுத்தி பரிபாலிப்பது அனைத்துமே அந்த ஒரே இறைவனின் கையில்தான் இருக்கிறது என்ற ஓர் (கடவுள்) இறைக் கொள்கையை நம்பிக்கை கொள்வதாகும்.

இது தவிர முஸ்லிம் அல்லாத சிலரும் ஒரு கடவுள் கொள்கையை போதித்து இருக்கிறார்கள்; சொல்லியுமிருக்கிறார்கள்; நம்பியுமிருக்கிறார்கள். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பழமொழியை நானும் நீங்களும் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே, ‘ஒருவனே தேவன் என்பது ஒரு புதுக்கொள்கையல்ல. இஸ்லாம் மாத்திரம் போதித்த போதனையுமல்ல. அதிகமானவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்தும் இஸ்லாம் கூறும் அக்கொள்கைக்கும் மற்றவர்கள் போதித்த கொள்கைக்குமிடையில் பல பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. Read the rest of this entry »

 

Tags: , ,