RSS

Monthly Archives: October 2014

சான்றோன் – தமிழ் பிரியன் நசீர்

10744638_477404079068301_577511459_nசொற்சுவை
மெருகேற
சுழன்றெழும்
காற்றொலி கோர்த்து

பற்களெனும்
உளியாலே
பக்குவமாய்
மொழி செதுக்கி

திக்கெட்டு மாந்தருக்கும
தெவிட்டாத தமிழமுதை
முக்கி மொழிந்தோரெல்லாம்
முறைக்கென்னவோ
சான்றோராகலாம்..!!
Read the rest of this entry »

Advertisements
 

நம்பிக்கை பயணம் தொடர்கிறது ………-Iskandar Barak

10734022_1509795165958720_2004698502333219071_nஇந்த கம்பெனிக்கி வந்த புதிது …..சுமார் 13 நாட்கள் எனக்கு..

ஒரு மேஜர் பிரச்சினை ………அன்று காலை அட்மின் பொறுப்பிலிருந்த ஹைதராபத்தை சேர்ந்த சையது பாயென்பவர் மினிட்ஸ் ஆப் மீட்டிங்கில் அது சம்பந்தமாக பேசுகிறார் சுமார் 15 நிமிடத்துக்கு மேலாக ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் …….

பெரும்பாலோருக்கு புரியவேயில்லை இவர் என்ன சொல்ல வருகிறாரென்று ………….அப்போது

பஞ்சாபை சேர்ந்தவர்கள் சப்தம் கொடுக்க அவர் பேச்சை நிறுத்தி விட்டார் சப்தங்கள் பலவாராக கூச்சலானது …..அப்போது

எங்கள் கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜர் கேட்டார் இதை சரிசெய்யனுமே …யென்று சேப்டி ஆபீஸர் அய்மனிடம் ………….அவர்

இஸ்கந்தருக்கும் நல் அனுபவமிருப்பதால் அவரை பேச சொல்லலாமாவென கேட்க ………………அவரும் சரியென அனுமதித்தார்கள் ………………….அன்று பிடித்த மைக்

அல்ஹம்துலில்லாஹ் ………அதே மேனேஜரோடு என் நம்பிக்கை பயணம் தொடர்கிறது ……………………பிறகு அந்த ஹைதரபாத் சையது பாய் என்னிடம் கேட்டார் ….

இஸ்கந்தர் ……5 நிமிடத்தில் யாவரிடமும் நற்பெயர் பெற்று பிரச்சினையையும் தெளிவுபடுத்திவிட்டாயே இதெப்படி யென …

அப்போது சொன்னேன் ……………சையது ஸாப் …
கல்லிமுன்னாஸ அலா கத்ரி உகூலிஹிம் …….அதாவது .மனிதர்களின் குணமும் அவர்களின் புரியும் தன்மையுமிறிந்து பேச சொல்லி நமக்கு முன்னோர்கள் சொல்லி தரவில்லயா அதுதான் இது…..யென்று.

ஆகவே ………….இடம் பொருள் ஏவல் மிக மிக முக்கியம் நண்பர்களே
1609560_1509578375980399_6889497760981148567_nIskandar Barak

 

ஆடைகள் – சேவியர்

சில ஆடைகள்
விசேஷமானவை.

சிறுவயதில்,
விழாக்கால நாள் வரை
காத்திருந்து பெற்றுக் கொள்ளும்
புத்தாடை மணம்
இன்னும்
நாசிகளில் உயிர்ப்புடன்.

வருட இடைவெளி
வாங்கிக் குவித்த ஆடைகள்
ஆயிரமெனினும்
இன்னும் நினைவிருக்கும்
பால்ய கால ஆடைகளின்
டிசைன்கள்.
Read the rest of this entry »

 

இருமலுக்கு இயற்கை வைத்தியம் !

irumal-2-212கற்பூரவள்ளி இலையின் சாற்றைச் சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்க. பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டுக. இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து, பாகுபதமாகக் காய்ச்சி இறக்குக. இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.

தொடர்ச்சியான இருமல் :

இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்லை அளிக்கும்போது பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு தம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கசாயமாக்கிக் கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சிச் சாற்றைக் கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
Read the rest of this entry »

 

Tags: ,

இலட்சியத்துக்காக இலட்சங்களை புறக்கணித்த இலட்சிய நடிகர்

10698715_10205259151785351_8912500193227065225_n
கவிஞர் அ. வெண்ணிலா அவர்களின் அகநி வெளியீடு வெளியிட்டிருக்கும் புத்தகம்.
நேற்று இரவுதான் இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன். எழுபது பக்கங்களை தொட்டிருக்கிறேன். எஸ்.எஸ்.ஆர்., நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு வரும் வரையிலான வரலாறு இதுவரை ஓடியிருக்கிறது.

எஸ்.எஸ்.ஆரின் தந்தையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் வகுப்புத் தோழர்கள்.

சிறுவயதில் நன்றாக படிக்கக்கூடிய மாணவரான எஸ்.எஸ்.ஆர் யதேச்சையாகதான் நாடக உலகுக்கு வந்தார்.

டி.கே.எஸ். குழுவில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் மிக விரைவிலேயே கதாநாயகன் அந்தஸ்துக்கு வந்துவிட்டார். தன் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்ட நிலையில் அந்நாடகக் குழுவில் இருந்து வெளியேறினார்.
Read the rest of this entry »

 

Tags: , , ,

சியெம் கான்வாய்

இன்றைக்கும் பார்த்தேன்.

பன்னீர் செல்வம் கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அதே சாந்தோம் சாலை. முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள்.

அம்மா பரப்பன அக்ரஹாரத்தில் இருந்த நாட்களில் காணப்பட்டதைவிட இன்று சுழலும் விளக்குகள் குறைந்திருந்தன.

ஓட்டல் சங்கீதா + மெரினா பார்க் முன்னால் இருந்து இந்தியன் பேங்க் கிளை வரையிலான 300 மீட்டர் தேங்கியிருந்த மழை நீரில் எல்லோரையும்போல முதலமைச்சரும் சிக்கிக் கொண்டார்.

முதலில் சென்ற பைலட் வண்டியின் சைரன் ஓங்கி ஒலித்தது. விளக்கு வேகமாக சுழன்றது. என்ன லாபம்? முன்னால் சிக்கிய வாகனங்கள் நகர்ந்த பிறகுதானே முதல்வர் தொடர முடியும்.
பன்னீரின் சாந்தமான முகத்தில் சலனமே தெரியவில்லை.

ஆணையிட்டாரா அவர்களே வெறுத்துப் போனார்களா தெரியாது. சைரன் ஓய்ந்தது. Read the rest of this entry »

 

உடலை காயம் என்பது எத்தனைக்கு சரி?

உடலை காயம் என்கிற போது…
அது தொடர் காயமாக கொள்ள வேண்டி வரும்.
தொடர் காயம் தொடர் வலி கொண்டது.

உடல் அப்படியா?
அது உணர்வுகளால் ஆனதில்லையா?
நவரச சங்கதிகளை
எந்த நிமிஷமும் ஆட்கொள்ள கூடியதில்லையா?

எத்தனை துயர் கொண்டோருக்கும்
சில காலமேனும்
இன்பம் சாத்தியமாகி இருக்கும்….
‘காயம்’ எப்படி இன்பம் தூய்த்திருக்க முடியும்?
Read the rest of this entry »