RSS

பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.- தாஜ்

14 Oct

10636059_741614519241627_2614766493344579032_nதெளிவுற வழிகாட்டி நின்ற
கை காட்டிகள் எல்லாம்
திசைகளற்று கவிழ்ந்துக் கிடக்க
பாதசாரிகளுக்கு
பாதைகள் என்றும்
விடிவதே இல்லை.

ஓரப் பாதைகள்
தடைகளாகிப் போக
புகுந்து புறப்படும்
அவசரத்தில்
குண்டும் குழியும்
மனிதக் கழிவுகளும்
அடியெடுக்கும்
முயற்சியை கூச வைக்கும்.

மறித்து கண் சிமிட்டும்
மின்னொளிகள்
முன்னேற விடும் நாழியும்
எதிர்பட முட்டிக் கொண்டே நிற்பர்
எம் மக்கள்.

பொது சாலையில்
இறங்கி நடக்க முனைந்தால்
சகல ஓட்டங்களும்
புகை கக்கி அலற
கலகலக்க வைக்கும் விதியை.

உந்தலின் நினைவுடன்
தூரத்தைக் கடக்க
பேருந்திற்காக
காத்திருக்கும் காலகெடுவில்
பேருந்துகளாலேயே
முற்றுப் பெறலாம்
கவிதையான நம்
ஜீவ வாக்கியம்.

***
எழுதியவர் – தாஜ்
10494782_688808787855534_3669785479586600242_nTaj Deen

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: