RSS

ஆம்னி வேனும் நடமாடும் ஃப்ரிட்ஜும் பின்ன ஞானும்..!! -நிஷா மன்சூர்

15 Oct

10628065_538506352959953_3195849262606524645_nசமீபத்தில் ஒரு வணிக நண்பரைச் சந்தித்தேன், ஏழெட்டு வருட இடைவெளிக்குப் பிறகு. குறிப்பிட்ட அந்த நகரத்தில் ஆரம்ப காலத்தில் எங்களுக்கு ஆதரவளித்த வணிகர் அவர். தற்போது வயதாகிவிட்டதாலும் அவர் பிள்ளைகள் இந்தத்தொழிலுக்கு வர விருப்பப்படாததாலும் தொழிலை அப்டேட் செய்யாமல் சுருக்கிக் கொண்டார். நடப்பு நிலவரங்களையும் பொதுவான விஷயங்களையும் பேசி விடைபெற முனைந்தபோது கார்வரை வந்து வழியனுப்பி வைத்தார். காரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களைப் பார்த்ததும்…

“இப்பல்லாம் ஏசி கார்ல வர்ரதுனால பழைய டெக்னிக் தேவப்படறதில்ல இல்ல சார்..” என்றார்.

“பழைய டெக்னிக்கா அதென்னது அண்ணே..” என்றேன்.

“என்ன சார் மறந்துட்டீங்களா.. மொதல்ல மாருதி ஆம்னில வரும்போது நடமாடும் ஃப்ரிட்ஜ் வெச்சிருப்பீங்களே..” என்றார்

“அட, ஆமா, அத இன்னும் நினைவு வெச்சிருக்கீங்களா.ரொம்ப சந்தோஷம் அண்ணே” என்றேன்

“மறக்க முடியுமா சார் அதை.எங்கிட்ட வர்ர இளம் தலைமுறையினர் எல்லாத்துட்டயும் அதச் சொல்லிக் காட்டுவேன்.வாழ்க்கைல ஒவ்வொரு படியும் முக்கியம் சார்” என்றுகூறிப் பின் கைகுலுக்கி விடைபெற்றார்.

வண்டி கிளம்பியதும் என் மனம் 2002,2003 காலகட்டத்தை நோக்கிப் பின்நகர்ந்தது. அப்போது மாருதி ஆம்னிவேனில்தான் வனிகத்துக்குச் செல்வேன். பஸ்ஸிலேயே நாடுமுழுக்கச் சுற்றிக்கொண்டிருந்த எனக்கு ஆம்னிவேன் என்பது பெரும் ஆடம்பரமாகவே இருந்தது.பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் நேரம் மிகவும் மீதமானது மட்டுமின்றி எல்லா சின்னச்சின்ன ஊர்களுக்கும் செல்லவும் முடிந்தது.
என்ன….ஏப்ரல் மே மாதங்களில் கடும் வெயிலின்போதுதான் தண்ணீர் பாட்டிலை எங்கே வைத்தாலும் குடிக்க முனையும்போது கொதித்துக் கிடக்கும், குடிக்கவே முடியாது.

அந்த நேரத்தில் உசிலம்பட்டியில் ஒரு மூத்த வியாபார நண்பர் ஒரு டெக்னிக்கை பரிந்துரைத்தார். அது,
7-அப் அல்லது மிராண்டா போன்ற இரண்டு லிட்டர் பாட்டில்களை எடுத்து அவற்றிற்கு கோணிப்பையாலான ஒரு ஆடையை அணிவித்து காலையில் கிளம்பும்போது நன்றாக தண்ணீரில் ஊறவைத்து எடுத்துப்போனால் போதும்.எளிதில் சூடாகாது. மேலும் ஓரிருமணி நேரத்துக்கு ஒருமுறை லேசாக தண்ணீரில் நனைத்துவிட்டால் நீர் குளீர்ந்த நிலையிலேயே இருக்கும். ஒருமுறை மேற்படி பெரியவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் தன் ஊழியரிடம் தண்ணீர் கேட்க அவர் கொணர்ந்து அளித்த தண்ணீர் சூடாக இருந்ததனால் அவர் குடிக்கவில்லை. இதை கவனித்த நான் அண்ணே நல்ல குளுந்த தண்ணி இருக்கு தரவா என்று வண்டியிலிருந்து அந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தேன். அப்போதுதான் அவர் சொன்ன வாசகம்தான் இது…
” சூப்பர் ஐடியா சார்,
நடமாடும் நேச்சுரல் ஃப்ரிட்ஜையே வண்டீல வெச்சிருக்கீங்களே”
10525943_492666037543985_1109437642086314996_n
எழுதியவர்நிஷா மன்சூர்

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

 
%d bloggers like this: