RSS

அதிகமுறை எம்.எல்.ஏ., என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் நம்முடைய ‘கலைஞர்’தான்.

20 Oct

1375890_10205229722569639_6955396837065813065_nமகாராஷ்டிரா தேர்தலில் 11வது முறையாக விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த 88 வயது கண்பத்ராவ் தேஷ்முக் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை புரிந்திருக்கிறார். சில வடநாட்டு ஊடகங்கள் இவரே இந்தியாவில் அதிகமுறை எம்.எல்.ஏ., ஆகிய சாதனைக்கு சொந்தக்காரர் என்று செய்தி வெளியிட்டிருக்கின்றன. தமிழ் ஊடகங்கள் சிலவும் அதே செய்தியை தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றன.

இந்திய ஜனநாயகத்திலேயே அதிகமுறை எம்.எல்.ஏ., என்கிற சாதனைக்கு நம்முடைய கலைஞர்தான் சொந்தக்காரர். அவர் ‘கலைஞர்’ என்பதாலேயே, இச்சாதனை இங்கு பரவலாக பேசப்படவில்லை.

கலைஞர் வெற்றிபெற்ற வருடங்களும் தொகுதிகளும் :

1. 1957 – குளித்தலை
2. 1962 – தஞ்சாவூர்
3. 1967 – சைதாப்பேட்டை
4. 1971 – சைதாப்பேட்டை
5. 1977 – அண்ணாநகர்
6. 1980 – அண்ணாநகர்
7. 1989 – சென்னை துறைமுகம்
8. 1991 – சென்னை துறைமுகம்
9. 1996 – சேப்பாக்கம்
10. 2001 – சேப்பாக்கம்
11. 2006 – சேப்பாக்கம்,
12. 2011 – திருவாரூர்

என்று ஐம்பத்தி ஏழு ஆண்டுகளில் பன்னிரெண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகி, இனியும் யாராலேயும் முறியடிக்க முடியாத சாதனையை செய்தவர் கலைஞர் (84 தேர்தலில் மட்டுமே அவர் களத்தில் நிற்கவில்லை – 80ல் இடைத்தேர்தலில் நின்று வென்றார்).
கண்பத்ராவ் தேஷ்முக் இருமுறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கிறார். கலைஞருக்கு தோல்வியே கிடையாது.
தனிநாடு கேட்டு போராடிய இயக்கம் ஒன்று ஜனநாயகப் பாதைக்கு முழுமையாக திரும்பியபின், அக்கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் இந்திய ஜனநாயகத்தில் இத்தகைய சாதனை ஒன்றினை படைத்திருப்பது விரிவாக அலசி பேசப்பட வேண்டிய விஷயம். உலகில் வேறெங்காவது இம்மாதிரியான ஒரு தலைவர் இருந்திருந்தால், அவர் அந்த சமூக மக்களால் தலைக்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடப்பட்டிருப்பார்.
கலைஞரின் ராசி என்னவென்றால் அவர் குறித்த அலசல்கள் எல்லாமே அவருக்கு எதிர்மறையாக மட்டுமே செய்யப்படும் என்பதுதான். தமிழகத்தை சேர்ந்த கலைஞரின் சமகால அரசியல் ஆய்வாளர்களும், அறிவுஜீவிகளும் எத்தகைய காழ்ப்போடு, சார்போடு இயங்கியிருக்கிறார்கள், இயங்குகிறார்கள் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டு.

yuvakrishnaநன்றி – Yuva Krishna

1911774_10202968778089061_5653979737954305988_nபகிர்ந்தவர் – M.m. Abdulla
(புதுகை அப்துல்லா )M.m. Abdulla

Advertisements
 
 

Tags: , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: