RSS

உடலை காயம் என்பது எத்தனைக்கு சரி?

20 Oct

உடலை காயம் என்கிற போது…
அது தொடர் காயமாக கொள்ள வேண்டி வரும்.
தொடர் காயம் தொடர் வலி கொண்டது.

உடல் அப்படியா?
அது உணர்வுகளால் ஆனதில்லையா?
நவரச சங்கதிகளை
எந்த நிமிஷமும் ஆட்கொள்ள கூடியதில்லையா?

எத்தனை துயர் கொண்டோருக்கும்
சில காலமேனும்
இன்பம் சாத்தியமாகி இருக்கும்….
‘காயம்’ எப்படி இன்பம் தூய்த்திருக்க முடியும்?

பட்டிணத்தார்
உடலை ‘காயம்’ என்று பாடியிருப்பதை
அறிவேன்.
அவனது சொந்த வாழ்க்கை என்பது
இளமைக் காலம் முழுவதும்
பறத்தையர்களோடு
இன்பம் களித்ததோர் வாழ்க்கை!
வாலிபத்தை தாண்டிய
அவனது காலம் என்பது
அவன் பருவத்தில் வாழ்ந்த
வாழ்க்கையின் எதிரொலியாக
உடலெல்லாம் புண்கொண்ட காலம்.
பெரும் வியாதி நிலை.

அவன் தன் பாடல்களில்
உடலை காயம் என்றான்
பெண் சுகத்தை மாயை என்றான்
சிவனை தேடிய நிலையில்
இப்படியான தத்துவங்களை
தனது கடைசி காலங்களில் முழங்கினான்.
ஆக,
அவன் குறியீடாக கூறிய காயம்…
(நிஜத்தில் அவன் கொண்டதும் கூட)
அவனைப் பொருத்தவரை சரி.

இந்தப் புரிதலோடு…
அவனது கூற்றை நாம் முழுமையாக
ஏற்க முடியுமா என்ன?

என் யோசிப்பில்…
தமிழ்ப் படித்த சகோதரிக்கு
கொஞ்சம் அர்த்தம் பொருந்திய அந்தச் சொல்
அசாத்திய பொருள் தந்திருக்கலாம்.
அப்படி மட்டுமே நம்புகிறேன்.

குறிப்பு:
சகோதரி லறீனா அப்துல் ஹக் பதிவில் நான்.

10494782_688808787855534_3669785479586600242_nதாஜ் தீன்Taj Deen

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: