RSS

சியெம் கான்வாய்

23 Oct

இன்றைக்கும் பார்த்தேன்.

பன்னீர் செல்வம் கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அதே சாந்தோம் சாலை. முன்னும் பின்னும் போலீஸ் வாகனங்கள்.

அம்மா பரப்பன அக்ரஹாரத்தில் இருந்த நாட்களில் காணப்பட்டதைவிட இன்று சுழலும் விளக்குகள் குறைந்திருந்தன.

ஓட்டல் சங்கீதா + மெரினா பார்க் முன்னால் இருந்து இந்தியன் பேங்க் கிளை வரையிலான 300 மீட்டர் தேங்கியிருந்த மழை நீரில் எல்லோரையும்போல முதலமைச்சரும் சிக்கிக் கொண்டார்.

முதலில் சென்ற பைலட் வண்டியின் சைரன் ஓங்கி ஒலித்தது. விளக்கு வேகமாக சுழன்றது. என்ன லாபம்? முன்னால் சிக்கிய வாகனங்கள் நகர்ந்த பிறகுதானே முதல்வர் தொடர முடியும்.
பன்னீரின் சாந்தமான முகத்தில் சலனமே தெரியவில்லை.

ஆணையிட்டாரா அவர்களே வெறுத்துப் போனார்களா தெரியாது. சைரன் ஓய்ந்தது.

ஐந்து நிமிட மழையில் நீர் அலையடித்து காரில் மோதிய காட்சியை நிச்சயம் முதல்வர் பார்க்காமல் விட்டிருக்க வாய்ப்பில்லை. என்ன நினைத்திருப்பார்?

சைதை துரைசாமியை?
அம்மாவை?
கமிஷனர் ஜார்ஜை?
இந்த மாதிரி அம்மாவை அழைத்து வந்து தண்ணீரில் நிற்க விட்டிருந்தால் யாரெல்லாம் மாஜியாகி இருப்பார்கள்?
கடைசி கேள்வி வேடிக்கை பார்த்த பொது ஜனத்துக்கும் தோன்றியிருக்கும்.

மழை வரும்போதெல்லாம் சென்னை மூழ்க காரணம் நடைபாதை ஆக்கிரமிப்பு.

பிளாட்பாரம் முழுவதையும் கடைக்காரர்களும் கம்பெனிக்காரர்களும் ஓட்டல்காரர்களும் எடுத்துக் கொள்வதால் நடக்கும் அவலம். மேயருக்கு தெரியாதா, என்ன?

எந்த எந்த கடைக்காரர்கள் பிளாட்பாரத்தை எப்படி ஆக்கிரமித்து கதவெல்லாம் போட்டிருக்கிறார்கள் என்பது பத்திரிகை அலுவலகங்களில் ’நிராகரிக்கப்பட்ட படங்கள்’ டிரேயில் குவிந்திருக்கின்றன.

ஆக்கிரமிப்புகளை அகற்றினால் கவுன்சிலர்களுக்கு தினசரி ஆறிலக்கம் இழப்பாகும். ஈடுகட்ட கேட்டால் நகர தந்தை எங்கே போவார், பாவம்.

தண்ணீரில் இருந்து கான்வாய் தரைக்கு திரும்பி பயணம் தொடர 12 நிமிடம் பிடித்தது.

kathirkathirvaelKathir Vel

Advertisements
 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: