RSS

இலட்சியத்துக்காக இலட்சங்களை புறக்கணித்த இலட்சிய நடிகர்

25 Oct

10698715_10205259151785351_8912500193227065225_n
கவிஞர் அ. வெண்ணிலா அவர்களின் அகநி வெளியீடு வெளியிட்டிருக்கும் புத்தகம்.
நேற்று இரவுதான் இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன். எழுபது பக்கங்களை தொட்டிருக்கிறேன். எஸ்.எஸ்.ஆர்., நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு வரும் வரையிலான வரலாறு இதுவரை ஓடியிருக்கிறது.

எஸ்.எஸ்.ஆரின் தந்தையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் வகுப்புத் தோழர்கள்.

சிறுவயதில் நன்றாக படிக்கக்கூடிய மாணவரான எஸ்.எஸ்.ஆர் யதேச்சையாகதான் நாடக உலகுக்கு வந்தார்.

டி.கே.எஸ். குழுவில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் மிக விரைவிலேயே கதாநாயகன் அந்தஸ்துக்கு வந்துவிட்டார். தன் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்ட நிலையில் அந்நாடகக் குழுவில் இருந்து வெளியேறினார்.

பெரியார், அண்ணா மீதான இயல்பான ஈர்ப்பு. கலைஞர், சிவாஜி, எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கே., டி.வி.என்., ஏ.பி.என்., என்று கலையுலகின் முக்கியஸ்தர்களுடனான முதல் அனுபவம் என்று மிக எளிமையான மொழியில் தமிழ் கலையுலகின் ஆரம்பகால வரலாற்றை தன் வரலாறு கூறும் சாக்கில் சொல்லிக்கொண்டே போகிறார் இலட்சிய நடிகர்.

குறிப்பாக மதுரையில் நடந்த திராவிடர்கழக நிகழ்வு ஒன்றில் மதவெறியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் முக்கியமானது

– இன்று காலை தினத்தந்தியில் எஸ்.எஸ்.ஆர் சுகவீனம் என்று வாசித்தபோது, விரைவில் நலம் பெற்று விடுவார் என்று தீர்மானமாக நம்பினேன்.

இப்போது தாங்கிக்கொள்ளவே இயலாத செய்தி வந்திருக்கிறது

ஏற்றுக்கொண்ட பகுத்தறிவு கொள்கைக்கு முரணான புராணப்படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கடைசிவரை இலட்சியத்துக்காக இலட்சங்களை புறக்கணித்த எங்கள் இலட்சிய நடிகரின் புகழ் ஓங்குக!

31138_1476976891415_1051769_nYuva Krishna

Advertisements
 

Tags: , , ,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: